/* */

ஈரோடு கிழக்கு தேர்தல்: முதல் சுற்று முடிவில் இளங்கோவன் 6 ஆயிரம் வாக்கு முன்னிலை

ஈரோடு கிழக்கு தேர்தலில் முதல் சுற்று முடிவில் இளங்கோவன் 6 ஆயிரம் வாக்கு முன்னிலை பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு கிழக்கு தேர்தல்: முதல் சுற்று முடிவில் இளங்கோவன் 6 ஆயிரம் வாக்கு முன்னிலை
X

இளங்கோவன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குகள் முதல் சுற்று எண்ணி முடிக்கப்பட்டபோது காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் ஆறு ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று இருந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ் தென்னரசு நிறுத்தப்பட்டார். இது தவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, தே.மு.தி.க வேட்பாளராக ஆனந்த் உள்பட மொத்தம் ௭௭ வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இந்த இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு கருவிகள் வாக்கு எண்ணிக்கை மையமான ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டன. அந்த மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது. சரியாக காலை எட்டு மணிக்கு ஸ்ட்ராங் ரூம் எனப்படும் அறையின் அகற்றப்பட்டு தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் உள்பட முக்கிய கட்சிகளின் முகவர்கள் அங்கு இருந்தனர்.

இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக எட்டு மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

முதல் சுற்று முடிவு அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்பட்ட போது காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 9786வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 3613 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி மேனகா 368வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 73 வாக்குகளும் பெற்று இருந்தனர். முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

Updated On: 4 March 2023 1:57 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...