/* */

வி.சி.க.விற்கு பானை சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

வி.சி.க.விற்கு பானை சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

HIGHLIGHTS

வி.சி.க.விற்கு பானை சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
X

பொதுச் சின்னத்தை பெற விசிக அளித்த விண்ணப்பத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் அளித்த கடிதம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது ஒரு முதற்கட்ட வெற்றி. நமது அறப்போராட்டம் தொடரும் என விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: "வரும் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் 29 தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 4 சட்டமன்ற உறுப்பினர்களையும், 1 நாடாளுமன்ற உறுப்பினரையும் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான அரசியல் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று இந்த நிமிடம் வரை இந்திய தேர்தல் ஆணையம் பொதுச் சின்னத்தை ஒதுக்கீடு செய்யாதது மிக மோசமான ஜனநாயகப் படுகொலையாகும். ஐந்து மாநிலங்களில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யுமாறு கடந்த 20.02.2024 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதற்கு 21.03.2024 தேதியிட்ட கடிதம் மூலம் பதிலளித்திருந்த இந்திய தேர்தல் ஆணையம், 'உங்கள் கட்சி கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1% வாக்குகளைக் கூட பெறாத காரணத்தால் பொதுச் சின்னத்திற்கான உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க இயலவில்லை' என்று உண்மைக்கு புறம்பான காரணத்தை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகளின் நியாயமான கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில் தலைவர் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் ஆலோசனைப்படி டெல்லி உயர்நீதிமன்றத்தை சட்டப்பூர்வமாக அணுகினோம். இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1% வாக்குகளைக் கூட பெறவில்லை' என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்று முற்றிலும் தவறானது என்பதை நிரூபிக்கும் விதமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1.51% வாக்குகளையும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 1.18% வாக்குகளையும் பெற்றுள்ளது என்பதை உரிய தரவுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் நமது தரப்பு வாதங்களாக முன்வைக்கப்பட்டதன் விளைவாக, இந்திய தேர்தல் ஆணையம் 21.03.2024 அன்று எழுதிய கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்திலேயே அறிவித்திருக்கிறது.

மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், 'இன்று மாலை 5 மணிக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் சின்னம் தொடர்பான கோரிக்கை மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. இது முதற்கட்ட வெற்றிதான். நமது கட்சியின் அரசியல் அங்கீகாரத்திற்கான சட்டப் போராட்டம் தொடரும். தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சுமூகமாக பொதுச் சின்னத்தை ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம், 'விடுதலைச் சிறுத்தைகளுக்கு பொதுச் சின்னம் வழங்குவதில் மட்டும் இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன்?' என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. இனியாவது இந்திய தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கிடைக்க வேண்டிய பொதுச் சின்னத்தை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Updated On: 27 March 2024 2:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா