/* */

சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விடும் காங்கிரஸ்

சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விட போவதாக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விடும் காங்கிரஸ்
X

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்ததன் காரணமாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், கருப்பு பலூன்களை பறக்க விடுவோம் என காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் அறிவித்து பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

''சிறந்த கல்வி வசதி, கல்வி நிறுவனங்களில் பாகுபாடு அற்ற நிலை, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என இந்திய இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்து கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். இந்த பிரச்சினை நம்மால் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் 2021 வரை மட்டும் இந்தியாவில் 35 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். '' ''நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை 82 ஆயிரத்து 514 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட விடாமல் மோடி அரசு தடை செய்துள்ளது

நரேந்திர மோடி பிரதமர் ஆனதிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.இவ்வளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அவர்களது சமூகப் பொருளாதார வாழ்க்கை நிலை என்ன? இரண்டு முக்கிய விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உண்மையை சொல்லப்போனால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 95 சதவிகிதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்.

பிரதமர் மோடியின் பொய்யான வாக்குறுதியே மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. 82 ஆயிரத்து 514 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு மோடியே பொறுப்பு. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட ரோஹித் வெமுலா சட்டத்தை உடனே அமல் படுத்த வேண்டும்.2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை தூக்கி எறிய இளைஞர்கள் முன் வர வேண்டும். அதற்கு முன்னோட்டமாக நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வருகை கருப்பு பலூன்களை பறக்க விடுவோம். இளைஞர்கள் அனைவரும் திரண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது எல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. அவருக்கு கருப்பு கொடி காட்டுவது, கருப்பு பலூன் பறக்க விடுவது என பல போராட்டங்களை நடத்தியது. ‘கோ பேக் மோடி’ என இணையத்தில் ஹேஸ்டிங்கும் செய்தனர். தி.மு.க. கூட்டணி கட்சியினரும் இதில் பங்கேற்றனர். ஆனால் தற்போது ஸ்டாலின் முதல் அமைச்சராக இருப்பதால் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் ஒரு அணி தலைவர் கருப்பு பலூன் பறக்க விடுவோம் என அறிவித்து இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 18 Jan 2024 5:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  9. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  10. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!