/* */

இந்தியா கூட்டணியால் காவிரி நீர் பெற்று தர முடியுமா? சீமான் கேள்வி

இந்தியா கூட்டணியால் கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீர் பெற்று தர முடியுமா? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

HIGHLIGHTS

இந்தியா கூட்டணியால் காவிரி நீர் பெற்று தர முடியுமா? சீமான் கேள்வி
X

சீமான்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், நாகப்பட்டினத்தில் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியா கூட்டணி மீது சரமாரி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் 39 தொகுதிகளும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே, வேட்பாளர்கள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட சீமான் இந்தியா கூட்டணி குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார். நாகை லோக்சபா தொகுதி நன்னிலம், திருவாரூர், நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 6 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இந்த தொகுதி இருக்கிறது. இந்த முறையும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் திமுக தலைமையில் களமிறங்கியுள்ளது.

சிபிஐ வேட்பாளராக வி.செல்வராஜ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கரும், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் இன்று நாகையில் வேட்பாளர் கார்த்திகாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சீமான் பேசியதாவது:-

கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் இல்லாததுதான் இந்தியா கூட்டணி. கேரளாவுக்குள் எதிர்க்கட்சி கேரளாவுக்கு வெளியே கூட்டணி. கர்நாடகாவில் இருந்து நீரை பெற்று தர முடியவில்லை; அப்புறம் எதற்கு இந்தியா கூட்டணி? மொத்தத்தில் இந்தியா கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? நாட்டையும் காப்பாற்ற போகிறோம் என இந்தியா கூட்டணி ஏமாற்றுகிறது.

இயற்கை வளங்கள் இஷ்டத்திற்கு சுரண்டப்பட்டிருக்கிறது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து 39 எம்பிக்களை தேர்ந்தெடுத்து அனுப்பினோமே, திமுக நமக்கு என்ன செய்தது? நமது வளத்தை அழிக்கும் மீத்தேன், ஈத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததே அவர்கள்தான். இது குறித்து அவர்கள் பெருமையாக பேசியிருக்கிறார்கள். இதை எதிர்த்து மக்கள் போராடிய பின்னர், தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டோம் என்று மழுப்பினார்கள்.

இவ்வாறு சீமான் பேசினார்.

முன்னதாக சில நாட்களுக்கு முன்னர், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நா.த.க. வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை அடுக்கியிருந்தார். குறிப்பாக அவரை ஒருமையில் பேசியிருந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 14 April 2024 1:01 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?