/* */

கணக்கு இடிக்குதே! அதிமுகவை பாஜக முந்தியதா?

பாஜகவை விட அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைவு என்று சொல்வது தவறானது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கணக்கு இடிக்குதே! அதிமுகவை பாஜக முந்தியதா?
X

சமீபத்தில் ஊடகம் ஒன்று வெளியிட்ட கருத்து கணிப்பில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் 38.33 சதவிகித வாக்குகளை திமுக வெல்லும், 17.26 சதவிகித வாக்குகளை அதிமுக வெல்லும், பாஜக இரண்டாம் இடம் பிடிக்கும், 18.48 சதவிகித வாக்குகளை பாஜக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் எடுக்கும் என்று இந்த கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த சர்வே தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.


அதில், ஒரு ஊடகத்தில் பாஜக அதிமுகவை விட அதிக வாக்கு சதவிகிதம் பெறும் என்று கருத்து கணிப்பு வந்துள்ளது. பாஜக வளர்ந்து உள்ளது என்பது உண்மை தான். ஆனால் இந்த கருத்து கணிப்பே சந்தேகத்திற்கு உரியது. அதை சுற்றி நடக்கும் விவாதங்கள் சந்தேகம் தருகின்றன. இந்த கருத்து கணிப்பு மீதே சந்தேகம் உள்ளது. இந்த தொழில்நுட்ப சூழலில் எப்படி வேண்டுமானாலும் டேட்டா மாற்றலாம். இதேபோல் ஜார்கண்ட் தேர்தலை வைத்து கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டது. அந்த கணிப்பில் ஜார்கண்ட் விகுதி மோர்ச்சா அல்லது முக்தி மோர்ச்சா கட்சிக்கு 0.26 வாக்கு சதவிகிதம் இருப்பதாக இதே நிறுவனம் கருத்து கணிப்பை வெளியிட்டது. ஆனால் அந்த கட்சி அதற்கு 4 வருடங்களுக்கு முன்பே பாஜகவுடன் இணைந்து விட்டது. பாஜகவுடன் இணைந்த கட்சிக்கு எப்படி தனியாக வாக்கு சதவிகிதம் இருக்கும்?


ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் இணைக்கப்பட்டு விட்ட பின் இது எப்படி சாத்தியம். அதே நிறுவனம் தான் இந்த கருத்து கணிப்பை எடுத்துள்ளது. பாஜகவிற்கு 18.48 சதவிகிதம் என்று சொன்னால்.... பாஜக இரண்டாம் இடம் வரும் என்று சொன்னால் எப்படி நம்ப முடியும். அப்படியே போய்விட முடியாது. மக்களுக்கு விளக்கம் தர வேண்டிய கட்டாயம் இந்த சர்வே அடுத்தவர்களுக்கு உள்ளது. தேர்தல் முடிவுகள் இந்த கணிப்பிற்கு நேர் எதிராக வந்தால் என்ன நடக்கும்? இந்த கணிப்பை எடுத்தவர்கள் நோக்கங்களை நான் சந்தேகிக்கிறேன். தேர்தலில் இந்த அளவிற்கு மாற வாய்ப்பு இல்லை. பாஜக வளர்ந்து இருக்கிறது. அதிமுக வாக்கு வங்கியும் பாஜகவிற்கு சென்று இருக்கலாம். அதில் தவறே இல்லை. ஆனால் 3 சதவிகிதத்தில் இருந்து பாஜக எப்படி 18.4 சதவிகிதம் எடுக்கும். எப்படி இது அறிவியல்படி சாத்தியம். அப்படி என்றால் ஏன் எல் முருகன், அண்ணாமலை போட்டியிடவில்லை. 5 வருடத்தில் என்ன செய்தார்கள் என்று இவர்கள் 6 மடங்கு உயர்ந்ததாக இவர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். அதிலும் அதிமுகவை விட 1 சதவிகிதம் கூடுதல் என்பதை பார்த்தால் சந்தேகம் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

Updated On: 1 March 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...