/* */

‘அதிமுகவிற்கு தேசிய பார்வை உள்ளது’- பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர்

‘அதிமுகவிற்கு தேசிய பார்வை உள்ளது’-என்று பெரம்பலூர் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் கூறி உள்ளார்.

HIGHLIGHTS

‘அதிமுகவிற்கு தேசிய பார்வை உள்ளது’- பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர்
X

தேர்தல் பிரச்சாரத்தில் பெரம்பலூர் ஐஜேகே  வேட்பாளர் பாரிவேந்தர்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக திமுக சார்பில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருவும், அதிமுக சார்பில் சந்திரமோகனும் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து வருகிற ௧௩ம் தேதி பிரதமர் மோடி பெரம்பலூரில் பிரச்சாரம் செய்ய இருப்பது அவருக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆக உள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்த பாரிவேந்தர், இந்த முறை பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

பாரிவேந்தரை எதிர்த்து திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் போட்டியிடுவதால் தேர்தல் களம் அனல் வீசி வருகிறது. அதற்குக் காரணம், திமுகவை மிகக் கடுமையாக பாரிவேந்தர் விமர்சித்து வருவதுதான். கல்வித்துறையில் மிகப் பெரிய அனுபவம் பெற்றவர் பாரிவேந்தர். அரசியலிலும் 13 ஆண்டுகள் மேலாக அனுபவம் உடையவர். ஆனால், அருண் அரசியலிலும் வயதிலும் இளையவர். களத்தில் ஓர் இளைஞரை எதிர்கொள்வது பற்றி என்ன என்பது பற்றி பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"Life is not an Arithmetic. இரண்டும் இரண்டும் சேர்த்தால் நான்கு என்பது கிடையாது. It is depend upon that mindset and their health and their vision. இவைதான் ஒருவரின் பர்சனாலிடியை வடிவமைப்பது. வயதில் முதியவர்கள் பலர் எவ்வளவோ சாதித்திருக்கிறார்கள். வயதில் குறைந்தவர்கள் பல இளம்வயதிலேயே கருகிப் போய் இருக்கிறார்கள். போதை, மதுவுக்கு அடிமையாகி ஒன்றுமில்லாமல் போய் இருக்கிறார்கள். ஆகவே வயது என்பது ஒரு பொருட்டே இல்லை.

அடிப்படையிலேயே திமுகவின் கொள்கையும் எங்கள் கொள்கையும் நேரெதிரானவை. ஆகவே அடிப்படையிலேயே ஒத்து வராது. அதிமுக ஏறத்தாழ ஒத்த கொள்கையில் உள்ள கட்சி. ஆகவேதான், திமுகவைவிட அதிமுக நல்ல கட்சி என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அதிமுக மோடியைத் தீவிரமாக எதிர்க்கவில்லை. திட்டங்களைச் செயல்படுத்த அதிமுக தடையாக இருந்ததும் இல்லை. அதிமுகவுக்கு ஓரளவு தேசிய பார்வை உள்ளது. எடப்பாடி தனது தனித்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தேசிய பார்வை உள்ளது. அதை மறுப்பதற்கு இல்லை. அதிமுக, திமுக, பாஜக என்று வரும்போது எனக்கு முதல் இரண்டு கட்சிகளைவிட பாஜகவை அதிகம் பிடித்துள்ளது. அதைப் போன்று திமுக அரசுக் கல்விக்காகப் பல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. நிறைய நிதியைப் படிக்கும் பிள்ளைகளுக்கு வழங்கி வருகிறத என்றெல்லாம் கூறுகிறார்கள். என்னுடைய வரிப்பணம். உங்களுடைய வரிப்பணம். திட்டம் போடுவதும் அதைச் செயல்படுத்துவதும் அரசினுடைய வேலை. நான் ஒரு ரூபாய் மக்களுக்காகச் செலவழித்தால், அதை என் உழைத்த பணத்திலிருந்து கொடுக்கிறேன்.

அதற்கான உழைப்பைப் பல்கலைக்கழகத்தில் நான் போட்டுள்ளேன். அதன்மூலமாக ஒரு குறிப்பிட்ட நிதியை எடுத்து செலவு செய்கிறோம். ஆகவே நான் செய்வதும் திமுக செய்வதும் ஒன்றாகாது. நீங்கள் உங்கள் நிறுவனத்திலிருந்து எடுத்து செலவு செய்துவிட்டு, பிறகு சொல்லுங்கள். நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கடந்த தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுகவின் வாக்குகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அதைப்போல் வேறு தொகுதிகளில் எங்கள் கட்சியின் வாக்கு அவர்களுக்குப் போய் இருக்கிறது. அதற்குச் சான்றாக விழுந்துள்ள ஓட்டுகளைக் கணக்கு எடுத்துப் பார்த்தால், அந்த உண்மை உங்களுக்கே புரியும். அதற்காகத்தான் கூட்டணி வைக்கிறோம். தோழமை கொள்கிறோம். திமுகவுடனான தோழமை தேர்தலுடன் முடிந்து விட்டது. அவர்களின் எம்பிகள் மோடி எதிர்ப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இருந்தார்கள். அவர்களால் தமிழ்நாட்டுக்குப் பயன் இல்லை. அதைப் புரிந்துகொண்டுதான் நாங்கள் விலகிவிட்டோம்.

இன்றைக்கு மக்கள் திமுகவை விரும்பவில்லை. ஊழல் அதிகரித்து விட்டது. அவர்களின் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். ஆகவே, என்னை எதிர்த்துப் போட்டியிடுகின்றவர் திமுகவினருக்குப் பெரிதாக ஆதரவு இல்லை. ஒரு விசயத்தை மிகத் தெளிவாக நினைவுபடுத்திவிடுகிறேன். திமுகவினர் வெற்றி பெற்றுச் சென்றாலும் தமிழ்நாட்டுக்குப் பலன் இல்லை. ஏனென்றால் மூன்றாவது முறையாக மோடி பதவியேற்பது என்பது முன்பே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 9 April 2024 11:44 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?