/* */

கொழுப்பு குறைக்கப்பட்ட இந்த பாலை தினமும் குடிங்க? ....உடல் வலுப் பெறும்...

Toned Milk Meaning in Tamil- பால் இல்லாமல் யாரும் வளர்ந்திருக்கவே முடியாது. அந்த வகையில் நம் பிறப்பில் இருந்து இறப்பு வரை பால் ஒரு முக்கிய உணவுப்பொருளாக நம்முடனே பயணிக்கிறது. டோன்ட் பால் என்றால் என்ன? பார்ப்போம் வாங்க...

HIGHLIGHTS

கொழுப்பு குறைக்கப்பட்ட  இந்த பாலை  தினமும் குடிங்க? ....உடல் வலுப் பெறும்...
X

இருமுறை பதப்படுத்தப்பட்ட  (டபுள் டோன்ட் )  பால்   (கோப்பு படம்)

Toned Milk Meaning in Tamil-மனிதர்களாக பிறந்தவர்களுக்கு குழந்தைப்பருவத்தில் முதன் முதலாக கொடுக்கப்படுவது தாய்ப்பால். சற்று வளர்ந்த பின் நமக்கு பசும்பாலைத்தான் அனைவருக்குமே தந்திருப்பார்கள். அந்த வகையில் பாலில் உள்ள கால்சியம் சத்தானது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எனவே பால்குடிக்காத குழந்தை என்று இருக்கிறதா? என்பது தெரியவில்லை.


பால் பவுடரைக்கொண்டு தயார் செய்யப்படும் பல வகை பவுடர்கள் விற்கப்படுகின்றன. எது வாங்கினாலும்குழந்தைகள் நல மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே அதனை வாங்கி நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தையின் உடல் நிலை எவ்வாறு உள்ளது? என்பது டாக்டருக்கு மட்டுமே தெரியும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பவுடர் வகைகளை நாமாக வாங்கிக் கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வர வாய்ப்புகள் அதிகம்.எனவே இந்த விஷயத்தில் மிகவும் கவனமுடன் டாக்டரின் ஆலோசனையின் படி நடக்க வேண்டும்.


பால் என்பது உலகில் யாருமே மறுக்க முடியாத திரவ உணவு. இந்த பாலில் பல பொருட்கள் தயாராகின்றன. இதற்கு உலகம் முழுவதும் பயன்படுகிறது பால். பால் பொருட்களை உபயோகிக்காத உலக நாடுகளே இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் பால் எனும் உணவுப் பொருளானது நம்மோடு காலம் காலமாக ஒன்றிப் போனது. தலைமுறை தலைமுறையாய் இதனை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு பால் வராவிட்டால் நமக்கு காபி குடிக்கவில்லை என்றால் பலருக்கும் வேலைகளே ஓடாது. காலை எழுந்தவுடன் பிரஷ் செய்த பின் காபி டம்ளர் தான் அடுத்தஞாபகம் வருகிறது அந்த அளவிற்கு நம்மோடு ஒன்றிப்போனது பால்.

சரிங்க...பாலில் நன்மைகள் மட்டுந்தான் உள்ளதா? தீமைகளே இல்லையா? என கேட்பது காதில் விழுதுங்க.. பாலில் உள்ள கொழுப்பு பொருள் தீமைகளைச் செய்யும்.அதனால் தற்போது பல நிறுவனங்கள் பாலை அதன் பிராண்டுகளில் விற்க ஆரம்பித்துள்ளன. தமிழகத்தினைப் பொறுத்தவரை பல வகை பால் இருந்தாலும் தமிழக அரசின் ஆவினுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சென்னை , மதுரை, சேலம், திருச்சி, உள்ளிட்ட மாவட்டதலைநகரங்களில் இந்த பாலுக்குத்தான் மவுசு அதிகம். தனியார் பால் கம்பெனிகள் பல இருந்தாலும் ஆவினுக்கு பின்னர்தான் அவையெல்லாம் என்று சொல்லும் அளவிற்கு ஆவின் பாலைத்தான் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.


இதனால் பாலில் கலந்துள்ள கொழுப்பினைப் பிரித்து எடுத்து முழு ஆரோக்ய பாலாக மாற்றிய பின்னர் பேக்கிங்செய்து விற்கப்படுகிறது. பாலின் வர்த்தக ரீதியான பிராண்டுகளில் ஸ்கிமிட் பால், டோன்ட் பால், இரட்டைடோன்ட் பால் என உண்டு. இவற்றில் கொழுப்பு குறைவாகவும், சுவை அதிகமாகவும் உள்ளது. இவை பசும்பாலின் சுத்திகரிக்கப்பட்ட வகை என்று கூட கொள்ளலாம்.

டோன்ட் பால் என்றால் என்ன?

டோன்ட் பால் என்பது இந்தியாவில்தான் முதலாவதாக தயார் செய்யப்பட்டது. அதாவது இந்த பால் பவுடர் அல்லது தண்ணீர் சேர்க்கப்பட்டு தயார்செய்யப்படும் ஒரு வகையாகும். பாலில் உள்ள கொழுப்பின் அளவைக்குறைக்க பயன்படுத்தப்பட்ட வழிமுறையாக இது கருதப்படுகிறது. மேலும் மற்ற பிராண்ட் பாலைவிட இந்த டோன்ட் பாலானது விலையும் குறைவு என்பதால் இதற்கு வரவேற்பு அதிகம் உள்ளது.


டபுள் டோன்ட் பால்

ஏற்கனவே நாம் பார்த்த டோன்ட் பால்தான்இது. இதற்கும்அதற்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தோமானால் டோன்ட் பாலைவிட 9 சதவீதம் கொழுப்பு குறைக்கப்பட்ட பால்தான் டபுள் டோன்ட் பால் ஆகும். இதனைக் கொதிக்க வைக்காமல் அப்படியே கூட குடிக்கலாமாம்.

சரிங்க... டோன்ட் பாலுக்கும் டோன்ட் இல்லாத பாலுக்கும் என்ன வித்தியாசம் என்பதுநீங்கள் கேட்கிறீர்களா? அதாவது டோன்ட் பால் என்றால் பாலில் உள்ள கொழுப்பு அளவைக்குறைக்கப்பட்டதுங்க.. அதுவே சாதாரண பால் என்றால் கொழுப்பு நீக்கப்படாமல் பாலின் அளவில் எவ்வளவு கொழுப்பு உள்ளதோ அதே அளவு காணப்படும். ஆனால் டோன்ட் பாலில் கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.இதுதான் வித்தியாசம்.

பாலில் இயற்கையாகவே கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளதால் பற்கள் , எலும்புகள், தசைகளுக்கு நல்ல ஆரோக்யமான வலுவைத்தரும் உணவுப் பொருளாக பால் உள்ளது. இந்த பாலை அதிகம் குடிப்பதால் உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கிறது.

பசியாற்றும் டோன்ட்

ஒரு சிலருக்கு பசி எடுத்துவிட்டால் வயிற்றில் சத்தம் வர ஆரம்பித்துவிடும். அதுபோன்ற நேரங்களில் உடனே இந்த டோன்ட் பாலை ஒரு டம்ளர் குடிச்சுபாருங்க...சத்தம் ஆட்டோமேட்டிக்காகவே நின்றுவிடும். இந்த பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும்.

எவ்வளவு கலோரி?

சாதாரண ஒருகப் பாலில் 285 கலோரிகள் காணப்படுகிறது. அதுவே டோன்ட் பாலில் 150 கலோரிகள் மட்டுமே உள்ளது. பாலில்உள்ள கார்போஹைட்ரேட்டிலிருந்து கலோரிகள் வருகிறது. நம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே இளைய பருவத்தினர் டோன்ட் பாலுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.

டோன்ட் பாலை அனைவருமே குடிக்கலாம். 3 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தினமும் 3 கிளாஸ் டோன்ட் பால் குடிக்கலாம். இந்த வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் இரண்டு கிளாஸ் டோன்ட் பாலைக்குடிக்கலாம். எந்த பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்பில்லை.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 April 2024 9:47 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. சினிமா
    Indian 2 புதிய ரிலீஸ் தேதி இதுவா?
  7. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  8. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  9. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  10. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!