/* */

pongal 2023 wishes in tamil-பொங்கலோ பொங்கல் எனும் குலவைச் சத்தம் காதினில் கேட்கலையோ..?

Pongal 2023 Wishes in Tamil -பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.

HIGHLIGHTS

pongal 2023 wishes in tamil-பொங்கலோ பொங்கல் எனும் குலவைச் சத்தம் காதினில் கேட்கலையோ..?
X

pongal 2023 wishes in tamil-பொங்கல் பண்டிகை (கோப்பு படம்)

Pongal 2023 Wishes in Tamil -பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியமான பண்டிகையாகும். இது உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையானது போகி , தை பொங்கல், மாட்டுப் பொங்கல் , உழவர் திருநாள் என நான்கு தினங்களாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உதவும் இயற்கையையும் கருவிகளையும் உள்ளவர்கள் தெய்வமாகக் கருதுவர். அதற்காகவே சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றி கூறும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.


pongal 2023 wishes in tamil

ஆடிப் பட்டம் தேடி விதை என்பார்கள் முன்னோர்கள். அப்படி தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே இந்த தை மாதம். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தம் புது அரிசியில் சர்க்கரை வெல்லம், பால், நெய் சேர்த்துப் புதுப் பானையில் புதிய அடுப்பில் பொங்கலிடுவார்கள். பொங்கலை சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் முப்பருவங்களிலும் வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர் மட்டுமே விவசாயத்திற்கு ஆதாரம். அங்கு ஒரே ஒரு வேளாண்மைதான் விளைவிக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து அதில் கிடைத்த புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடி வகை காய்கறிகள் அதாவது குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெல்லில் கிடைத்த பச்சரிசியை தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழா தமிழருக்கான விழா என்பாதை தெளிவாக உணரமுடியும்.

pongal 2023 wishes in tamil

கிராமங்களில் ஒவ்வொருவரும் அன்று 'வீட்டில் நல்லா பொங்கிச்சா' என்று ஒருவருக்கு ஒருவர் விசாரித்துக்கொள்வார்கள். மேலும் கிராமங்களில் எல்லோரும் கோவிலில் கூடி பொங்கல் இட்டு குலவை இடும் சத்தமே ஒரு சிலிர்ப்பை கொண்டுவரும்.

உழவர் திருநாள்

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. நிலத்தில் உழுது உழைத்த தமிழ் மக்கள் தமக்குக்கிடைத்த விளைபொருட்களை தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து அளிக்கும் நாளாகும். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.


போகி

போகி பண்டிகை என்பது பழையன கழிதல் என்பதன் அடையாளம் ஆகும். வேளாண்மையை மேற் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் விழாவாகும்.

போகி பண்டிகை என்பது 'மார்கழி' மாதம் முடிந்து 'தை' மாதம் ஆரம்பிக்கும் நேரத்தில் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்த நாளில் எரித்து விடுகிறோம். இதை ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்து வருகிறோம்.

pongal 2023 wishes in tamil

பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் நடக்கும் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். ஆயர்கள் இந்திர விழாவை முடித்து சூரிய வழிபாட்டை தொடர்ந்தனர்.

அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் வழக்கம் இருந்தது. அதற்கான காரணத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவ்வாறு அழுது ஒப்பாரி வைப்பதன் காரணம் அன்றைய தினம் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

தைப்பொங்கல்

தை மாத முதல் நாளான அறுவடைத்திருநாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

pongal 2023 wishes in tamil

மாட்டுப்பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்

பட்டிப் பெருக..பால் பானை பொங்க.. நோவும் பிணியும் தெருவோடு போக..' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பரது வழக்கம்.


பொங்கல் வாழ்த்துக்கள்..

  • அறுவடைத் திருநாளில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைப்போம் இனிதாக..! பொங்கும் பொங்கலில் சர்க்கரை,பால், நெய் சேர்த்து இனிமை சேர்ப்போம் வளம் பெருக..! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
  • வெல்லத்தின் இனிமை போலவே, கரும்பின் சுவை சேரவே உள்ளத்தின் மகிழ்ச்சி கூடுமே..! குடும்பம் யாவுமே மகிழ்ந்து கூடுமே..குலவைச் சத்தம் கேட்கவே பொங்கல் பொங்குமே..! இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
  • மஞ்சள் கிழங்கெடுத்து மாவிலை தோரணம் கட்டி, கரும்பினை கோபுரம் கட்டி நடுவிலே புத்தடுப்பு போட்டு, புதுப்பானையில் பொங்கல் வைப்போம்..இனிமை பொங்குமே..மகிழ்ச்சி பெருகவே..! பொங்கல் நாள் வாழ்த்துக்கள்..!

pongal 2023 wishes in tamil

  • உணவு தயாரித்தலுக்கு உயிர் கொடுக்கும் சூரியனே..! உழவுக்கு உதவி செய்யும் எருதுகளே..ஆழ உழும் எங்கள் உழவுக்கருவிகளே..உங்களுக்கு நன்றி கூறும் இந்த நாளிலே உங்களை வணங்குகின்றோம்..வளமையை தாரும் எங்களுக்கு என்றுமே..இனிய பொங்கல் .நல்வாழ்த்துக்கள்.!
  • இனிமையும் மகிழ்ச்சியும் ஒன்றாகச் சேரும்..வாழ்வில் இனிமையும் கூடும்..அறுவடைத்திருநாளில் பொங்கலிட்டு படைத்திடுவோம்..இந்த பொன்னாளில்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

  • அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Oct 2022 10:53 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!