/* */

நான் வீழ்வேன் என நினைத்தாயா? ஊக்க வரிகளை படிச்சு பாருங்க.....

Inspirational Quotes in Tamil-வாழ்க்கை என்பது நம் அனைவருக்குமே ஒரு முறைதான். வாழும் காலத்தில் நம் பெயர் நிலைக்கும் அளவிற்கு நல்ல பெயரெடுத்து வாழ வேண்டும். வெந்ததைத் தின்று நொந்து போவதே வாழ்க்கை அல்ல. சாதனை படைக்க வேண்டும் என லட்சியம் கொள்ளுங்கள்... நிச்சயம் படைப்பீர்கள்.

HIGHLIGHTS

Inspirational Quotes in Tamil
X

Inspirational Quotes in Tamil

Inspirational Quotes in Tamil



பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்ற பாடலைக் கேட்டிருப்போம். பறவைகள் போலதான் மனிதர்களும். ஒவ்வொருவரும் உருவத்தால் ஒன்றுபட்டாலும் குணத்தால்,பண்பால் வேறுபட்டவர்களாகவே இருக்கின்றனர். ஏன்? ஒரே குடும்பத்தில் 5 சகோதரர்கள் இருந்தாலும் அனைவருக்கும் ஒரே குணம் இருப்பதில்லை. வெவ்வேறாகவே காட்சியளிக்கின்றனர்.

இதுபோல் ஒரு சிலர் தங்கள் சொந்த முயற்சி, திட்டம்,உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றத்தினை அடைந்து விடுகின்றனர். இது ஒரு ரகம். இரண்டாவது ரகம் யாராவது ஒருவர் சிபாரிசு செய்தால் அவரின் சிபாரிசால் இவர்கள் முன்னேற்றம் கண்டு விடுகின்றனர். மூன்றாவது ரகம் என்னவென்று தெரியுமா? அவர்களுக்கு சிபாரிசு எல்லாம் வேண்டாம். யாராவது ஒருவர் பின்னால் இருந்து அவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். உன்னால் முடியும் . நீ் நிச்சயமாக இதனை செய்துவிடுவாய் என சொல்லிவிட்டால் போதும் இவர்களுக்குள் ஒரு புதுரத்தம் பாய்ச்சியது போல் ஆகிவிடும். இயந்திரத்தனமாக உழைக்க ஆரம்பி்த்து இறுதியில் வெற்றிக்கோட்டினையும் தொட்டு விடுவார்கள்.

ஆனால் அந்த ஊக்கப்படுத்தும் நபர் சொல்லாவிட்டால் இவரே தானாக எதையும்செய்யக்கூடியவர்களாக இருக்க மாட்டார்கள். இதுபோல் ஒரு ரகம்.எனவே ஊக்கம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றுதான். இது இல்லாவிட்டால் வாழ்வின் எந்த வொரு செயல்பாடுகளுமே நடக்காது. உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள், உடன் வேலைபார்ப்போர் என யாராவது ஒரு நபரின் வாயிலிருந்து இதுபோன்றவர்களைப் பற்றி ஊக்கப்படுத்தி பேசிவிட்டால் போதும் இவர்கள் தன்னுடைய லட்சியத்தில்தான் கண்ணாயிருப்பார்கள். இதுபோல் ஊக்கப்படுத்தவேண்டும் என ஒரு சிலர் காத்துக்கிடக்கின்றனர். அதாவது குதிரை நின்று கொண்டு இருக்கும். ஆனால் யாராவது ஒருவர் தட்டிவிடவேண்டும். அப்போதுதான் இந்த குதிரையானது வேகமாய்.. வேகமாய் ஓடும்.

இதோ ஊக்கப்படுத்துவதற்கான அருமையான வாசகங்கள்....

எத்தனை கைகள் கைவிட்டாலும், என்றும் நம்பிக்கை கைக்கொடுக்கும்!

நம்பிக்கை என்ற சிறு நூல் இழையில் தான், அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கின்றது!

முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே... மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்!

கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!

தோற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் வெல்வது எப்படி என்று யோசி வெற்றி நிச்சயம் ஒருமுறை கிடைக்கும்!

நீ உன் சிறகை விரிக்கும் வரை, நீ எட்டும் உயரம் யாரறிவார்?

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை. சாதனையில் தவறான் விளக்கம் தான் கடினம்!

தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு!

மனதில் வலிமை இருந்தால், துன்பமும் இன்பமாய் மாறும்!

என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல, வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை!

தவறி விழுந்த விதையே முளைக்கும் போது, தடுமாறி விழுந்த நம் வாழ்க்கை மட்டும் சிறக்காதா? நம்பிக்கையோடு எழுவோம்...

தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!

செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!

கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா? அதுதான் உனக்குப் பிடித்த வேலை!

உன் பலத்தை கண்டு பயந்தவன்! உன் பலவீனத்தை அறிய ஆவலுடன் இருப்பான்.. "பலத்தை உறுதிப்படுத்து" பலவீனத்தை உள்ளடக்கு"

சிந்தனைகளை சாதிக்கும் கருவியாக பயன்படுத்துங்கள்!

வெற்றியும் தோல்வியும் இரண்டு படிக்கட்டுகளே, ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய். மற்றொன்றில் உன்னை திருத்திக்கொள்வாய்.

-வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்! ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது!

-சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்!

எதிர்மறை எண்ணங்களை எதிரியாக்கிக்கொள்! எளிதில் தோல்வியடையமாட்டாய்!

கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல! நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

நம்பிக்கையோடு இருந்தால், நம் வாழ்க்கைக்கான ஆதாரமும் அங்கீகாரமும் தானாகவே கிடைக்கும்!

பாதைகள் மோசமாய் இருப்பினும், பயணம் அட்டகாசமாய் அமையும்! நம்பிக்கையோடு அடி வைத்தால்!

நம்பிக்கை என்னும் ரதத்தில் பயணித்து கொண்டு இருப்பவர்களுக்கு, வெற்றியின் இலக்கு தூரம் இல்லை!

நம்பிக்கை என்பது சூரியனை போல; அதை நோக்கி நாம் செல்லச் செல்ல மனச்சுமை என்ற நிழல் நம் பின்னால் போய்விடும்!

அவமானத்தின் வலி, அழகிய வாழ்க்கைக்கான வழி!

உன் மனதிலிருக்கும் அச்சம் தான், உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான், உன் முதல் தோல்வி!

முடிவெடுப்பது பெரிய விஷயமல்ல! எடுத்த முடிவை முடிப்பதே விஷயம்!

சிந்தித்து செயல்படு! அதுவே, வெற்றியை சந்திக்கும் செயல்பாடு!

தீயதை விட்டு தூரத்தில் ஓடு! நல்லதை விடாமல் துரத்தி ஓடு!


யாரையும் தெருவில் கிடக்கும் காகிதமாக நினைத்துவிடாதே! நாளை அது பட்டமாகப் பறந்தால் நீயும் சற்று நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்!

நம் பாதம் சிறியது! ஆனால், நம் பாதை பெரிதாக இருக்கட்டும்!

எதையுமே எதிர்பார்க்காது உழைக்கும் உழைப்பிற்கு தான், வெற்றி கிடைக்கும்!

எவ்வளவு வேகமாக செல்கிறோம் என்பதைவிட, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறோம் என்பதே முக்கியம்!

இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம், தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால்!

எதையும் தாங்கும் மன வலிமை ஒன்று உனக்குள் இருந்தால் தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.

காலத்தின் கடும் வெள்ளத்தில் கரை தேடி அலையும் போது, நடுவில் ஆயிரம் தடை வந்தாலும், நீச்சல் கலையாக கரை சேர்க்கிறது, தன்னம்பிக்கை!

கடினமான நாட்கள் தான், உங்களை பலப்படுத்துகின்றன!

குறைகளை காரணம் காட்டி ஒதுக்கிய உலகம், உன் வெற்றியை கூடி கொண்டாடும் நாள் வரும் வரை காத்திரு கவலை மறந்திரு!

உன்னை கூண்டில் வைத்து அடைக்கலாம்! ஆனால் உன் சிந்தனைகளை, யாராலும் கூண்டில் அடைத்து வைக்க முடியாது!

வாழ்க்கைல எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சரி பாத்துக்கலாம்னு நினைச்சு அடுத்ததை பாருங்க நண்பா. உங்களை யாராலும் தடுக்க முடியாது.

-

பற்றியவை தானே அணையும்.. சிறுபொறுமையோடு காத்திருங்கள்!

கடந்த காலத்தை நினைக்காதே! கண்ணீர் தான் வரும். எதிர் காலத்தை எதிர் பார்க்காதே! இந்த நிமிடம, இந்த நொடி தான் உண்மை. அதை அனுபவி. நல்லதையே நினை. நல்லதே நடக்கும்.

நீங்கள் உயரப் பறக்க ஆசை கொண்டால் உங்கள் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்!

ஒரு கதவு மூடப்பட்டால், அதைவிட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

உங்களின் இன்றைய செயல் தான் உங்களுக்குரிய நாளைய பொழுது எது என்பதை தீர்மானிக்கும்.

கனவை கண்டதோடு மட்டும் நிறுத்தாமல், கனவு நினைவாகும் வரை துரத்திச் செல்!

வெற்றிகள் கூட கற்று தராத மனவுறுதியை அடைந்து விட, வாழ்வில் வீழ்ந்தே எழ வேண்டும்!

எண்ணங்கள் நன்றாக இருந்தால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்றாக அமையும்

வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்றால், பல துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும்!

வீழ்வது முடிவல்ல, மண்ணில் வீழ்ந்த பின்னே தொடங்குகிறது மழைத்துளியின் மதிப்பும் வாழ்வும்!

உங்களை உங்களுக்கே பிடிக்குமாறு உங்கள் வாழ்க்கையினை மாற்றி அமையுங்கள்! வெற்றிகள் உங்கள் முகவரி தேடி வந்து, உங்களைக் கட்டிக் கொள்ளும்!

பெரிதாக யோசி! சிறிதாக தொடங்கு! ஒரே நாளில் உயர்ந்துவிட முடியாது!

ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட, உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது, அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும்.

உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு.. அதுவும் ஒரு வகை வெற்றி தான்!

எதிர்காலத்தை கணிக்க மிகச் சிறந்த வழி, அதை உருவாக்குவதே ஆகும்! - ஆபிரகாம் லிங்கன்

உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்! இறுதிவரை கர்வத்தோடு இவ்வுலகை ஆளலாம்!

கடுமையான பாதை என்று எதுவுமில்லை! பாதையை மாற்றாதே, பாதை குறித்த உன் பார்வையை மாற்று!

இனியும் என் வாழ்வில் யாரையும் நம்பி இழப்பதற்கு ஏதுமில்லை! தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர!

தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

எதை, எதையோ அடையத் துடிக்கும் இதயத்தைக் கொஞ்சம் திசை மாற்றி இலட்சியத்தை அடைய வழிகாட்டுங்கள்!

எந்த சூழ்நிலையில் நீ வீழ்ந்தாலும், பிறர் உன்னை வீழ்த்தினாலும், எழுந்து நிற்கக் கற்றுக் கொள்!

நேற்றைய பொழுது நிஜமில்லை! நாளைய பொழுது நிச்சயமில்லை! இன்று மட்டும் நம் கையில்!

இருட்டில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே! இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது!

தாண்டும் தூரத்தை விட, தடுக்கும் துரோகிகளே அதிகம்!

சில கனவுகள், விழிக்க விடுவதில்லை! சில கனவுகள் உறங்க விடுவதில்லை!

போராடாமல் கிடைத்த வெற்றியை என்றும் கொண்டாட நினைக்காதே

நீ சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்!

உன் தோல்வியைக் கண்டு சிரிப்பவர்களைப் பார்த்து நீ சோர்ந்துவிடாதே! அவர்களுக்குத் தெரியாது நாளை நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்று!

ஜெயிக்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம்! ஜெயித்த பிறகு தன்னடக்கம் அவசியம்!

வாழ்க்கை மனிதனுக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கும் இரண்டாவது வாய்ப்பு, நாளை!

வலிகள் ஆயிரம் இருக்கிறது; இருக்கட்டுமே, அதற்கெல்லாம்வழி இருக்கிறது!

ஒடும்போது விழுந்து விடுவோம் என்று நினைக்காதே, விழுந்தாலும் எழுந்துவிடுவோம் என்று ஓடு!

பிறரால் நமக்குக் கொடுக்கப்படும் சவால்களே சாதித்துக் காட்டும் வரை உறங்கவிடாது, நம்மை துரத்தும் ஆயுதம்.

இதுவரை வாழ்ந்த வாழ்வை அழிக்கவும் முடியாது! இனி வாழ போகும் வாழ்வை அறியவும் முடியாது! கற்றுக்கொண்ட பாடங்கள் தான் கடக்க உதவுகிறது.

உன் மனதுக்குள் இருக்கும் அச்சம் தான் உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான் உன் முதல் தோல்வி!

வெற்றிகளை அடுக்கும் அலமாரியில் முதல் வரிசையை அழகாக்க காரணமானவன்! தோல்வி!

உன் கனவுகளுக்கு உயிர் கொடு. என்றோ ஒரு நாள் அல்ல. ஒவ்வொரு நாளும்.

என்னால் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் யாரும், அடுத்தவர்களின் உதவியை நாடுவதில்லை!

எதிரி எவ்வளவு பெரியவன் என்பது முக்கியமல்ல, எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரிது என்பதே முக்கியம்!

தோல்வி பட்ட உனக்குமட்டும் தானே தெரியும்வெற்றியின் அருமை!தன்னம்பிக்கை ஒன்றைமட்டும் நினைவில் வைத்துஉன் வெற்றிக்காக வரிந்து கட்டு.

ஒரு விஷயத்தைஉன்னால் கனவு காண முடியுமானால் அதனை உன்னால் செய்யவும் முடியும்.

வெற்றிக்கும்,தோல்விக்கும் சிறிய வித்யாசம் தான் உன் கடமையய் செய்தால் வெற்றிகடமைக்கு செய்தால் தோல்வி.

சிக்கல்களை எதிர்கொள்ளு போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்.

நம்பிக்கை உள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜா மட்டும் தான்

கண்ணில் படும் முட்கள் இல்லை.

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்குவாழ்க்கையில் தோல்வியே இல்லை.

அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டுஒதுங்கி கொள்ளும்!

ஆண்டவன் சோதிப்பது உன்னை மட்டும் இல்லை உன்னை போல சாதிக்க துடிக்கும்புத்திசாலிகளை மட்டும்!

எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில்வெற்றி பெற முடியாது!

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்

கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

தோல்வி அடைந்தவன் மாற்ற வேண்டியது வழிகளைத்தான்

இலக்கை இல்லை!

யானையால்! தும்பிக்கை இல்லமால் வாழ முடியாது மனிதனால்!

நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது.

உலகம் உன்னை அறிவதை விட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறது ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் தான்உனக்கான இடம் தோல்வியா வெற்றியா என்பது அமைகிறது

மற்றவர்களின் எண்ணங்கள் ஒரு போதும் என்னை வீழ்த்தியதில்லைகாரணம் என் மனா வலிமைக்கு பலம் அதிகம்.

முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தை இந்த உலகில் முடியாது என்பது எதுவுமே இல்லை.

நீ முடியாது என்று சொல்வதை எவனாவது ஒருவன் கண்டிப்பாகபிற்காலத்தில் செய்து முடிப்பான்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?