/* */

இக்கால இளைஞர்கள் கிரஷ்-ஆக இருக்கிறார்கள். கிரஷ்னா என்னங்க?

First Crush Meaning-இன்றைய இளம் தலைமுறை கிரஷ் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகிப்பதை பார்க்கலாம். கிரஷ் என்றால் என்ன? வாங்க பாக்கலாம்

HIGHLIGHTS

இக்கால இளைஞர்கள் கிரஷ்-ஆக இருக்கிறார்கள். கிரஷ்னா என்னங்க?
X

காட்சி படம் 

First Crush Meaning-எந்த ஒரு மொழியாக இருந்தாலும் ஒருசில வார்த்தைகளுக்கு பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து அர்த்தம் மாறுபடும். தமிழில் 'சும்மா' என்ற வார்த்தை வேலை வெட்டி இல்லாமல் இருத்தல், அமைதியாய் இருத்தல், பயனில்லாமல் இருத்தல், அக்கறையில்லாமல் இருத்தல், அடிக்கடி என்று பல அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது நாம் அறிந்ததே.

அதே போல ஆங்கிலத்திலும் ஒரு சொல்லுக்கு பல அர்த்தம் உண்டு. Crush என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் பார்த்தால் நசுக்குதல், பிழிதல் என்று அர்த்தம் இருக்கும். ஆனால் Crush என்ற வார்த்தைக்கு இளைஞர்கள் மத்தியில் வேறொரு அர்த்தம் அளித்து உபயோகிக்கப்படுகிறது.

இன்றைய இளம் தலைமுறை கிரஷ் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகிப்பதை பார்க்கலாம். குறிப்பாக தங்களின் எதிர்ப்பாலினரை குறிப்பிடுவதற்கு இதை பயன்படுத்துவார்கள்.

சிலர் Crush என்றால் காதல் என்று கூறுவார்கள். ஆனால் கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இந்த இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா? இந்த மாதிரியான குழப்பங்களுக்கான தெளிவை வாங்க இந்த பதிவில் பாக்கலாம்.

'Crush' என்ற வார்த்தை இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது, கிட்டத்தட்ட அனைவரும் இதைப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக ஒருபக்க காதலில் இளைஞர்கள் 'Crush' என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.

நீங்கள் ஒருவரின் மீது 'Crush' வைத்திருக்கிறீர்கள், அதாவது நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள், அவர் மீது காதல் உணர்வை கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் இது இருவருக்கும் இடையே காதல் உறவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல.

உதாரணமாக

She is my crush. I can't live without her.

அவள் என் அன்பு (Crush). அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது.

My all friend knows she is my crush.

நான் அவளை நேசிக்கிறேன் என்று என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்.

Her friend knew that I am his crush.

நான் அவளுடைய 'க்ரஷ் (Love)' என்று அவளுடைய தோழிக்கு தெரியும்.

Crush என்ற வார்த்தை பல்வேறு அர்த்தங்களை கொடுக்கிறது. இருப்பினும் அந்த வார்த்தையை நாம் எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து அதன் பொருள் மாறுபடும்.

  • க்ரஷ் ஒருவரை பார்த்தவுடன் அவர்கள் மீது ஏற்படும் அதீத ஈர்ப்பு. இது ஒருவரை விரும்பும் உணர்வு.
  • அனைத்து காதல்களும் முதலில் கிரஷில் இருந்தே ஆரம்பிக்கின்றன. ஆனால் அனைத்து கிரஷ்களும் காதலாக மாறுவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்
  • இது சுயநலத்திற்கு முக்கியத்துவம் தரும். ஒரு கட்டத்தில் தீங்காக மாற வாய்ப்புள்ளது.
  • கிரஷ் உணர்வில் ஒருவரின் வெளிப்புற தோற்றம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • நன்கு அறிமுகம் இல்லாத ஒருவரிடம் கிரஷ் ஏற்படலாம். ஆசை நிறைவேறியவுடன் அல்லது கவர்ச்சி பண்புகளை இழந்தவுடன் Crush எளிதில் தேய்ந்துவிடும்.
  • கிரஷ் என்பது பெரும்பாலும் டீன் ஏஜ் (Teenage) நபர்களுடன் தொடர்புடைய உணர்வு.

இந்த பதிவில் Crush என்ற ஆங்கில வார்த்தையின் பல்வேறு அர்த்தங்கள் மற்றும் கிரஷ் மற்றும் காதல் இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை பற்றியும் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 March 2024 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?