/* */

உணர்ச்சி மிக்க அப்பா-மகள் அன்பை வெளிப்படுத்தும் வாசகங்கள் அழகு தமிழில்.....இதோ.....படிங்க....

Father and Daughter Quotes in Tamil-அப்பா..... அன்பின் உறைவிடம்,,அமைதியின் புகலிடம்..உழைப்பில் ...உயரம்...பொறுமையின் சிகரம்... இதுபோன்று இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அவருடைய உழைப்புகள் அனைத்தும் அவரின் மறைவிற்கு பின்னரே பலருக்கும் தெரிகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

HIGHLIGHTS

உணர்ச்சி மிக்க அப்பா-மகள்  அன்பை வெளிப்படுத்தும் வாசகங்கள்  அழகு தமிழில்.....இதோ.....படிங்க....
X

Father and Daughter Quotes in Tamil

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கு இருக்கும் மதிப்பு நம் சமுதாயத்தில் பல தந்தைகளுக்கு கிடைப்பதில்லை. இதுதான் இன்றைய உண்மை நிலை.

உண்மையில் சொல்லப்போனால் அந்த தாயின் பாதுகாப்பே இந்த தந்தைதான். தாய் என்பவள் கருத்தரிக்கும்போது மட்டுமே சுமக்கிறார்கள். ஆனால் காலம் முழுக்க குடும்பத்தின் பாரத்தினை சுமக்கும் தந்தையர்களின் நிலை சமுதாயத்திற்கு தெரிவதில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று மட்டும் சொல்லிவிட்டால் போதுமா? அவர்களுடைய பேச்சினை யார் கேட்கிறார்கள் இன்று. ஆனால் உண்மை என்ன தெரியுமா? பல இடங்களுக்கு சென்று அனுபவ கல்வி அறிந்தவர் தந்தைதான். அதனால்தான் எந்த செயலை செய்தாலும் அவரை ஆலோசித்து முடிவெடுக்கவேண்டும் என அக்கால பெரியவர்கள் சொல்லி விட்டு சென்றுள்ளனர்.

இயல்பாகவே ஒரு குடும்பத்தில் ஒரு பையன், ஒரு பெண் இருந்தால் தாய் மீது பையனுக்கும், தந்தை மீது பெண்ணுக்கும் பாசம் அதிகம் இருக்கும். இது பாலின கவர்ச்சி என்று கூட சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் இருகுழந்தைகளுக்கும் தந்தை பேதமில்லாமல் பாசத்தினை காட்டுவார். பையன்களிடம் நேரிடையாக பேசமாட்டார். எல்லா தகவல்களும் தாய்வழியே தான் செல்லும். பெண்ணின் மீது அதிக பாசம் கொண்ட உணர்வு மிக்க தந்தை -மகள் உறவின் பொன்னான வாசகங்களை அழகு தமிழில் காணலாம்.

*கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அவர்தான் என் அப்பா

*மகளின் எல்லா பிரச்னைக்கும் முதலில் தீர்வு காண துடிக்கும் முதல் இதயம் அப்பா மட்டுமே

*தான் கீழே இருந்தாலும் நம்மை மேலே துாக்கும் ஓர் உறவு -அப்பா

*எந்த பெண்ணும் அவள் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு இளவரசியாகவே இருக்கிறாள்

*கனவில் கூட மகள்களுக்கு வேதனைகள் நெருங்க கூடாது என எண்ணுபவர் அப்பா

*அம்மாவின் இரண்டாவது மாமியார் மகள்... அப்பாவின் இரண்டாவது தாய் மகள்

*மனைவியின் பேச்சை கேட்காத கணவன்கள் கூட மகளின் பேச்சை கேட்பார்கள் தந்தையாக

*சாகுற வரைக்கும் ஒரு மனுஷன் கஷ்டப்பட்டு உழைக்கிறானா தன் மகனோ, மகளோ, கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் .. அவர்தான் அப்பா

*எத்தனையோ பேர் நான் இருக்கேன்னு சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும்

*நல்ல தகப்பனிடம் வளர்ந்த பெண்ணிற்கு ஆணைப் பற்றிய எண்ணம் அழகானது ., நல்ல தாயிடம் வளர்ந்த ஆணிற்கு பெண்ணைப்பற்றிய சிந்தனை பேரழகானது.

*பிள்ளை ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தர முடியாமல் காசு இல்லம்மா அப்புறம் வாங்கி தருகிறேன் என சமாளிக்கும் தகப்பனின் தவிப்பு ஆயிரம் பிரசவ வலிக்கு நிகரானது.

*சில மாதம் ஓர் உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும்இந்த சமூகம், ஆயுள் முழுவதும் ஒரு குடும்பத்தையே சுமக்கும் ஆண்களை மறந்துவிடுகிறது

*ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்துக்கொண்டு எதிரியை போல தெரியும் ஒரே ஜீவன் அப்பா மட்டுமே

*வாழ்க்கையின் கஷ்டங்களை பிள்ளைகளுக்கு தெரியாமல் பிள்ளைகளின் மகிழ்ச்சியில் தன் கஷ்டங்களை கரைப்பவர்தான் அப்பா

*பெண்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்.

முதியோர் இல்லம் நமக்கு இல்லை என்று

*ஆண்குழந்தைகள் வீராப்பாக இருந்துகொண்டு காரியத்தை இழந்துவிடுகிறார்கள். பெண்குழந்தைகள் அப்பா ப்ளீ்ஸ் பா என காரியத்தை சாதித்து விடுகிறார்கள்

*அப்பாவின் அன்பை முழுமையாக பெறும் ஒவ்வொரு மகளும் கடவுளிடம் கேட்கும் வரம் அடுத்த ஜென்மத்திலும் என் அப்பாவுக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று தான்.

*மகளின் கண்ணீரை காண பொறுக்காத அப்பாவும் அவரின் அழுகை நிறுத்த சிரிக் கமுயற்சிக்கும் மகள்களும் இருக்கும் வரை காதல் தோற்றுப்போவதில்லை

*அன்பான தந்தையின் மதிப்புக்கு விலை இல்லை

*உலகின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் தங்கள் குழந்தைகளில் வைக்க துணிந்த மனிதர்கள் தந்தையர்.

இவ்வளவு சிறப்பு பெற்ற தந்தையானவர் தன் அன்பு மனைவி தனக்கு முன்பாக இறந்தாலும் அவள் நினைவாகவே வாழ்ந்து மறையும் தியாக ஜீவன்கள்தான் இந்த அப்பாக்கள். இதில் ஒன்றிரண்டு விலக்கு இருக்கலாம் . ஆனால் மெஜாரிட்டியான அப்பாக்கள் இரண்டாவது மணம் புரிந்துகொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து மறைகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. காரணம் அவள் மனைவியைப் போல் மற்றொருவர் கிடைப்பாரா? மனைவியின்அருமையை அவளை இழந்த பின் உணரும் கணவன்களும்


இருக்கத்தான்செய்கிறார்கள்.. என்ன செய்ய... இழந்த பின்னர்தான் பெரும்பான்மையோருக்கு அவர்களின் அருமையே தெரிகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 10:46 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு