/* */

ஞாபக சக்திக்கு இலந்தைப் பழம் சாப்பிடுங்க..!

Benefits of Elantha Pazham in Tamil-இலந்தை மரம் கிராமங்களில் ஆங்காங்கு தானே வளரும் ஒருவகை மரமாகும். இந்த மரத்தில் காய்ப்பது இலந்தைப் பழம். இதில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன.

HIGHLIGHTS

ஞாபக சக்திக்கு இலந்தைப் பழம் சாப்பிடுங்க..!
X

இலந்தைப் பழம் (கோப்பு படம்)

Benefits of Elantha Pazham in Tamil

"எலந்தைப்பழம்..எலந்தைப்பழம்..இது செக்கச்செவந்த பழம். தேனாட்டம் இனிக்கும்பழம்" என்ற பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பிரசித்திப் பெற்றது. பின்னணிப்பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் பாடல் தேனாகவே இனிக்கும் வகையில் இருக்கும்.

இலந்தை பழத்தின் நன்மைகள்

இலந்தை பெரும்பாலும் நீரோடைகள் அல்லது மேட்டுநிலங்களில் திறந்த வெளியில் வளரக்கூடிய மரமாகும். இலந்தையின் இலை, வேர், பட்டை, பழம் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. இலந்தைப் பழம் இனிப்பு கலந்த புளிப்புச் சுவை உடையது.

நகரத்தில் வசிப்பவர்களுக்கு இலந்தைப் பழத்தை பற்றி அதிக அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இலந்தைப் பழம் சிறிய குருவி முட்டை வடிவத்தில் காணப்படும். ஆனால் தற்போது இலந்தைப் பழத்தின் நன்மைகள் பரவலாக தெரிய ஆரம்பித்துள்ளது.

இலந்தைப்பழம் உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் இலந்தை பழத்தை அதிக அளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இலந்தை பழத்தில் 74% மாவுப் பொருள், 17 %, புரதம், 0.8 % தாது உப்புகள் மற்றும் இரும்புசத்தும் உள்ளது.

இலந்தைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபகச் சக்தி அதிகமாக இருக்கும். எனவே, மாணவர்கள் இலந்தைப் பழத்தை அடிக்கடி சுவைத்து சாப்பிடுவது நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

இரத்தக் காயம் பட்ட இடத்தில் இலந்தை பழத்தின் இலைகளை நன்றாக அரைத்து காயத்தின் மீது கட்டினால் விரைவில் காயம் ஆறிவிடும். உடல் சூட்டினால் ஏற்படும் கட்டிகளை கரைப்பதற்கு இலந்தை பழம் பெரிதும் பயன்படுகிறது.

உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி போன்ற பல தொல்லைகள் ஏற்படும். அவ்வாறு பித்தத்தினால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள இலந்தை பழம் பெரிதும் உதவுகிறது. அதனால் பித்தம் உள்ளவர்கள் அடிக்கடி இலந்தைப்பழத்தை சாப்பிட்டு வருவது நன்மை தரும்.

இலந்தை பழத்தின் மருத்துவ பயன்கள்

  • மாணவர்களின் ஞாபகத் திறனை அதிகரிக்க இலந்தை பழம் பயனுள்ளது. அதனால் மாணவர்கள் அடிக்கடி இலந்தைப்பழத்தை சாப்பிடுவது நன்மை பயக்கும்.
  • எலும்பு வலிமை பெற கால்சியம் அவசியம். இலந்தைப் பழத்தில் கால்சியம் சத்து செறிவாக உள்ளது. எலும்பு குறைபாடு உள்ள குழந்தைகள், வயதானவர்கள் இலந்தை பழங்களை தினமும் சாப்பிடுவதால் எலும்பு வலிமை பெறும். அதனால் பற்களும் வலிமை பெரும்.
  • இலந்தைப் பழம் பித்தம், வாந்தி, தலைச் சுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
  • இலந்தை பழம் பசியின்மையை போக்கி பசியை தூண்டுகிறது. அதனால் பசி எடுக்காதவர்கள் பசி எடுத்து தாராளமாக உணவு சாப்பிடுவார்கள்.
  • பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த இலந்தைப் பழம் பயன்படுகிறது.
  • இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இலந்தைப் பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இரவில் தூங்கும் போது இலந்தைப் பழத்தை சாப்பிட்டால் உடல் வலியை நீங்கச் செய்து நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
  • இலந்தைப் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும்.
  • இலந்தைப் பழம் சாப்பிட எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.நாம் சாப்பிடும் உணவு, பருகும் நீர் ஆகியவற்றில் பல மாசுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது நமது இரத்தத்தில் கலக்கும் போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இலந்தை பழத்திற்கு இரத்தத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது. எனவே. அடிக்கடி இலந்தைப் பழங்களை சாப்பிடுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

தற்போது இலந்தையை வணிகப்பயிராக சாகுபடி செய்கிறார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 4 April 2024 5:58 AM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!