/* */

பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு மரபணு எப்படி கிடைக்கிறது என தெரியுமா?

பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு மரபணு எப்படி கிடைக்கிறது என பார்க்கலாம்.

HIGHLIGHTS

பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு மரபணு எப்படி கிடைக்கிறது என தெரியுமா?
X

மரபணு என்றால் என்ன பெற்றோரிடமிருந்து குழந்தைகள் மரபணுவை எவ்வாறு பெறுகின்றன என்பது பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு உயிரினமும் கருவில் உருவாகும் போதே சில விஷயங்களை மரபணு மூலமாக பெறுகிறது. உடல் உறுப்புகளின் அமைப்பு மற்றும் இயக்கம் மட்டுமல்லாமல் குணாதிசயம் மனரீதியான விஷயங்களும் இவற்றில் அடங்கும். அவ்வாறு ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் இருந்து மரபணு மூலமாக பெறும் விஷயங்கள் குறித்த சுவாரஷ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் மரபணுக்களை கொண்டுள்ளது .தலைமுடி, தோலின் நிறம், கண் கருவிழியின் நிறம், உடல் அமைப்பு ,உயரம் ,ரத்த வகை மற்றும் பரம்பரை நோய்களைப் போல ஒருவருடைய குணாதிசயங்களும் அவரது மரபணுக்களின் மூலமே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால் உடல் மட்டுமல்லாமல் மனரீதியான ஆரோக்கியமும் மரபணுக்கள் தொடர்புடையது ஆகும்.

உடலின் வளர்சிதை மாற்றம் ,நுண்ணறிவு, பார்வை திறன் ,உடல் எடை, கட்டுப்பாடு, கூர்ந்து கவனிக்கும் திறன், புன்னகையின் அமைப்பு,மனநிலை மாற்றப் பழக்கம், தலை முடி, முடியின் நிறம், முடியின் அமைப்பு, தோல் மற்றும் நரம்பியல் செயல்பாடு, தூங்கும் பழக்கவழக்கம், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி போன்றவை தாயிடமிருந்து பெரும்பாலும் குழந்தை மரபணு மூலமாக பெறும் விஷயங்கள் ஆகும்.

உடல் உயரம், பற்கள், பாலினம் முகத்தில் கன்னத்தின் அமைப்பு ,கண்களின் நிறம், உதடுகள் ரேகை, உடல் ரோமங்களின் வளர்ச்சி ,விரல்கள் உடல் அமைப்பு மற்றும் உடலில் கொழுப்பு சேரும் தன்மை ,ஆளுமை திறன், நகைச்சுவை உணர்வு, தூங்கும் முறை போன்றவை தந்தையிடம் இருந்து மரபணு மூலமாக குழந்தை பெறும் விஷயங்கள் ஆகும்.

பெண் குழந்தை தனது தாய் தந்தை இருவரிடம் இருந்தும் சம அளவு வீதத்தில் மரபணுக்களின் பலனை பெறுகிறது. ஆண் குழந்தைகள் தனது தாயிடமிருந்து 51% தந்தையிடம் இருந்தும் 49% மரபணு பலன்களை பெறுகின்றனர். சர்க்கரை நோய் ,புற்று நோய், மறதி நோய் ,தசை நார் தொய்வு, உடல் பருமன் வளர்சிதை மாற்றம் ,ரத்த அழுத்த நோய், டவுண் சின்ட்ரோம், தல சீமியா , பைபோலார், சிஸ்டிக்பை ப்ரோசிஸ் செல்களில் ஏற்படக்கூடிய குறைபாடு போன்றவை மரபணுக்களால் ஏற்படக்கூடிய பொதுவான நோய்கள் ஆகும்.

Updated On: 19 April 2024 3:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்