/* */

பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு பாருங்க! அப்புறம் விடவே மாட்டீங்க..

Benefits of Beetroot in Tamil-பீட்ரூட் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை சரிசெய்து மீண்டும் செயல்படுத்த உதவுகிறது. உடலின் ரத்த ஓட்டத்தையும் அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

HIGHLIGHTS

Benefits of Beetroot in Tamil
X

Benefits of Beetroot in Tamil

Benefits of Beetroot in Tamil

பீட்ரூட் ஒரு இனிப்பு நிறைந்த வேர்களில் வளரக்கூடிய காயாகும். பீட்ரூட் எல்லோரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று. அதற்கு முக்கிய காரணமே அதனுடைய கவர்ந்திழுக்கும் நிறம் தான். இதை பெரும்பாலான மக்கள் விரும்பவும் செய்கின்றனர் வெறுக்கவும் செய்கின்றனர். இந்த பீட்ரூட் ஜூஸை நாம் பருகி வந்தால் ஏராளமான பலன்களை நாம் பெற முடியும்.

அதன் நிறத்தைப் போலவே நம்முடைய உடலின் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஒற்றைத் தலைவலிக்குத் தீர்வாக அமையும்.

ஹீமோகுளோபின், இரும்புச்சத்து நிறைந்த புரதம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு இன்றியமையாத அங்கமாகும். உடலில் போதுமான ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் இல்லாதபோது, அது இரத்த சோகை எனப்படும் நிலைக்கு வழிவகுக்கிறது. இரத்த சோகை மூச்சுத் திணறல், சோர்வு, தலைவலி, மோசமான பசியின்மை, விரைவான இதயத் துடிப்பு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இத்தகைய சுகாதார நிலையைச் சமாளிக்க, உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

பீட்ரூட் ஜூஸ் இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது இரத்த சோகைக்கு மிகவும் நல்லது. அதேசமயம், பீட்ரூட் இலைகள் மண்ணீரல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பீட்ரூட் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை சரிசெய்து மீண்டும் செயல்படுத்த உதவுகிறது, இது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோகத்தை மேலும் அதிகரிக்கிறது. இரத்த சோகைக்கு பீட்ரூட்டை சாப்பிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று ஜூஸாக சாப்பிடுவது. பீட்ரூட் சாறு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான மருந்து

பீட்ரூட் ஜூஸ் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு உதவுகிறது. தினமும் 8 அவுன்ஸ் வரை பீட்ரூட் ஜூஸ் குடிப்பவர்கள் சிஸ்டாலிக், டயஸ்டோலிக் போன்ற இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பீட்ரூட் ஜூஸில் உள்ள நைட்ரேட்ஸ் பொருள் இரத்தத்தில் கலக்கும் போது நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இது இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்கிறது. அதனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தினமும் அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை பீட்ரூட் ஜூஸை குடித்து வர, உயர் ரத்த அழுத்தம் வேகமாக கட்டுக்குள் வருவதை நீங்கள் உணரலாம்.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் இதயத்துக்கு அதிக அளவிலான ஆற்றலக் கொடுக்கிறது. இதயத்தை சீராக இயங்கச் செய்ய இதயத் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. இதயம் செயலிழப்பு உள்ளவர்கள் இந்த பீட்ரூட் ஜூஸை குடித்த இரண்டு மணி நேரத்தில் 13 சதவிகிதம் வரை அவர்கள் இதயத் தசை வலிமை பெறுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பீட்ரூட்டிற்கு அழகான இளஞ்சிவப்பு நிறத்தை கொடுப்பது பீட்லைன் தான். பீட்லைன் என்பது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்கள். இது தண்ணீரில் கரையக் கூடியது. பீட்லைன் ஆன்டி ஆக்ஸிடன்கள் சில புற்றுநோய் செல்களுக்கு எதிரான ஆற்றலை கொண்டு இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பீட்டாலின்கள் கீமோ-தடுப்பு திறன்களைக் கொண்டுள்ளன. இது நமது உடலில் உள்ள தேவையற்ற செல்களைக் கண்டறிந்து அழிக்க உதவும்.

இது நரம்பு மற்றும் தசைகளின் செயலாக்கத்திற்கு பொட்டாசியம் அவசியம் தேவை. அதன் அளவு குறையும் போது சோர்வு, பலவீனம் மற்றும் தசை பிடிப்பு போன்ற பிரச் னைகள் ஏற்படுகின்றன. குறைவான பொட்டாசியம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பிற்கு காரணமாக அமைகிறது. பீட்ரூட்டில் இந்த பொட்டாசியம் அதிகளவு உள்ளதால், பீட்ரூட் ஜூஸ் அருந்தி வர உங்கள் உடலுக்கு தேவையான பொட்டாசியம் அளவு சரியாக இருக்கும்.

பீட்ரூட்டில் பீட்டைன் என்ற பொருள் உள்ளது. இது கல்லீரலில் உள்ள கொழுப்பு படிவுகளை தடுக்க அல்லது குறைக்க உதவுகிறது. உங்கள் கல்லீரலை நச்சுக்களிலிருந்து பாதுகாக்க பீட்டைன் உதவுகிறது.

முன்னெச்சரிக்கை

ஆனாலும் எல்லோரும் குடிக்கிறார்களே என நீங்களும் இந்த ஜூஸை குடிக்காதீர்கள். குடிப்பதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொண்டு குடியுங்கள்.

உங்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து விடும். எனவே உங்கள் இரத்த அழுத்தத்தை கண்காணித்துக் கொண்டே இருங்கள்.

உங்களுக்கு சிறுநீர் கற்கள் கால்சியம் ஆக்ஸலேட் பிரச்னை இருந்தால் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டாம். பீட்ரூட்டில் இயற்கையாகவே ஆக்சலேட்டுகள் உள்ளன. இவை சிறுநீரக கற்களை இயற்கையாக உருவாக்குகின்றன. இதனால் சிறுநீரக கற்கள் உருவாகி வலி ஏற்பட வாய்ப்புள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 March 2024 6:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?