/* */

Aloe vera benefits in tamil-உடலுக்கு ஆரோக்யம் சேர்க்கும் கற்றாழை..!

கற்றாழை இயற்கை அளித்த வாரங்களில் ஒன்று. இதில் அவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளன. அதை அறிந்துகொள்ளலாம் வாங்க.

HIGHLIGHTS

Aloe vera benefits in tamil-உடலுக்கு ஆரோக்யம் சேர்க்கும்  கற்றாழை..!
X

Aloe vera benefits in tamil-கற்றாழை பயன்கள் (கோப்பு படம்)

Aloe vera benefits in tamil

கற்றாழையில் கால்சியம், சோடியம், வைட்டமின் சி மற்றும் இரும்பு போன்ற பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளதால் இதன் நன்மைகள் மற்றும் மருத்துவக்குணம் மேலோங்கி உள்ளது.

கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்து விகிதம்

கலோரிஸ் 36

மொத்த கார்போஹைட்ரேட்ஸ் 9g

சோடியம் 19mg

வைட்டமின் C 15%

கால்சியம் 1.5%

இரும்பு 2%

Aloe vera benefits in tamil


கற்றாழையின் ஆரோக்ய நன்மைகள்:

தோல் பராமரிப்பு முதல் உடல் எடை குறைவது போன்ற பல பயன்பாடுகளுக்கு கற்றாழை உதவுகிறது.

கற்றாழை அழகு, ஆரோக்யம், சரும பராமரிப்பு போன்ற பலவற்றிற்கு நல்ல தீர்வாக இருப்பதால் கடைகளில் கற்றாழை தயாரிப்புப் பொருள்களின் விற்பனை அதிகமாகி வருகிறது. கற்றாழையில் உள்ள மருத்துவம் மற்றும் ஆரோக்ய குணங்கள் அதிக அளவில் நன்மைகளை அள்ளி வழங்குகின்றன.அதன் காரணமாக உலகம் முழுவதும் கற்றாழை பயன்பாடு பரவலாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கற்றாழையில் கால்சியம், சோடியம், இரும்பு, வைட்டமின் சி, ஏ, பி1, பி2 போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதன் நன்மைகள் மற்றும் மருத்துவகுணம் மேலோங்கி உள்ளது.


இதனால் கற்றாழை ஒரு வணிகப்பொருளாக மாறிவிட்டது. கற்றாழை சேர்க்கப்பட்ட பல அழகு சாதனப் பொருட்கள், க்ரீம்கள் சோப்புகள் என பல தயாரிப்புகளில் கற்றாழை முதன்மையாக உள்ளது.

மேலும் கற்றாழை நன்கு பதப்படுத்தி விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. ஆனால் இதனைப் பதப்படுத்தாமல் அப்படியே சாப்பிடுவதுதான் நன்மைப் பயக்கும் என்பதால் பலர் வீடுகளிலும் வீட்டுத்தோட்டங்களிலும் கற்றாழை வளர்க்கின்றனர்.

Aloe vera benefits in tamil

இத்தகைய சிறப்பு வாய்ந்த கற்றாழையில் வேறு நன்மைகள் என்ன? நமது உணவு முறைகளில் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விரிவாக பாப்போம் வாங்க.


கற்றாழையின் ஆரோக்ய நன்மைகள் மற்றும் பயன்கள்:

கற்றாழையில் கால்சியம், சோடியம், இரும்பு, வைட்டமின் சி, ஏ,பி1,பி2 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் கற்றாழையில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப்பண்புகள் அதிகளவில் உள்ளதால் இதனை தோல் அழற்சி மற்றும் முடி பராமரிப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதன் மூலமாக நல்ல தீர்வு கிடைக்கும்.

Aloe vera benefits in tamil

செரிமான பிரச்னைக்குத் தீர்வு:

உடலில் செரிமான மண்டலத்தை ஊக்குவித்து அதன் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு கற்றாழை மிகச்சிறந்ததாக உள்ளது. எனவே நம்முடைய உணவு முறைகளில் இதனைப் பயன்படுத்தும்போது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணிகளை வெளியேற்ற உதவியாக உள்ளது.


நீரழிவு பாதிப்புக்கு மருந்து:

கற்றாழையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக நீரழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாக இருப்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதன் மற்றும் விலங்குகளிடம் நடத்திய ஆய்வில், கற்றாழை இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதாகவும், இதன் மூலம் டைப் 2 நீரழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவியாக உள்ளது.

Aloe vera benefits in tamil

உடல் எடை குறைப்பதற்கு :

கற்றாழை உடல் எடை குறைப்பதற்காகவும் பயன்படுத்தப்படலாம். கற்றாழையில் உள்ள ஜெல் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவியாக உள்ளது. இவ்வாறு கற்றாழையை சேர்த்துக்கொள்வதன் மூலம் மறைமுகமாக உடல் எடை குறைவதற்கு உதவியாக உள்ளது.

இதோடு வெட்டு மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது போன்ற பல பாதிப்புகளுக்கு தீர்வாக கற்றாழை இருக்கிறது. கற்றாழையில் ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகள் அதிகளவில் இருப்பதால் இதை எவ்வாறு நமது உணவு முறைகளில் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அறிந்துகொள்வோம்.

Aloe vera benefits in tamil


கற்றாழை ஜூஸ்:

கற்றாழையை எளிதாக சாப்பிடுவதற்கான ஒரே வழி கற்றாழையை ஜூஸ் செய்து சாப்பிடுவதுதான். முதலில் கற்றாழையின் மேல் தோலை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நசுக்கி சிறிதளவு தண்ணீர், இனிப்பிற்காக தேன் கலந்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இதை இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது நமக்கு பிடித்தமான ஜூஸ்களில் கலந்தும் குடிக்கலாம்.

கற்றாழை சாலட்,கற்றாழை ஜெல்லை ஐஸ் க்யூப் போன்று தயாரித்து நாம் சாப்பிடலாம். முன்னதாக கற்றாழை ஜெல்லை சுமார் 7 முறையாவது நன்றாக சுத்தம் செய்த பின்னரே பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.


கற்றாழை மோர்

கற்றாழை மோர் செய்யத் தேவையான பொருட்கள் :

புளிக்காத தயிர் - அரை கப்

கற்றாழை - 4 சிறு துண்டுகள்

இஞ்சி - சிறு துண்டு

பெருங்காய தூள் - சிறிதளவு

கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.

கற்றாழை மோர் சிம்பிள் செய்முறை

முதலில் கொத்தமல்லி தழைகளை நன்றாக பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு, கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி விட்டு சதைப் பகுதியை (ஜெல்)மட்டும் எடுத்து நீரில் இட்டு, குறைந்தது பத்து முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். நீங்கள் முறையாக கழுவவில்லை என்றால் கசக்கும் சுவை இருக்கும்

பின்னர், ஒரு மிக்ஸிஜாரில் எடுத்து கற்றாழை ஜெல், இஞ்சித்துண்டு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் அந்த ஜாரில் தயிர், பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும்.

இப்படி நன்றாக அரைத்தவற்றை டம்ளரில் ஊற்றி அதில் கொத்துமல்லித் தழை சேர்க்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான கற்றாழை மோர் ரெடியாகிடிச்சி. பருகி மகிழலாம்.

Updated On: 10 Sep 2023 7:40 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  2. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  3. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  6. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  7. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  8. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்