/* */

குழந்தைக்கு ஒரு வயதாகிவிட்டதா..? அப்போ இதெல்லாம் கொடுங்க..!

One Year Baby Food in Tamil- பொதுவாகவே இளம் அம்மாக்கள் குழந்தையோடு குழந்தையாக அவர்களும் புதியனவற்றை கற்றுக்கொள்கிறார்கள்.

HIGHLIGHTS

குழந்தைக்கு ஒரு வயதாகிவிட்டதா..? அப்போ இதெல்லாம் கொடுங்க..!
X

1 year baby food chart in tamil-ஒரு வயது குழந்தைக்கான உணவுகள்.(கோப்பு படம்)

One Year Baby Food in Tamil-குழந்தைக்கு ஒரு வயதாகி விட்டது. தற்போது திட உணவுகளை கொடுக்கலாம் என்று நீங்கள் யோசித்து வருகிறீர்கள். 1 வயது குழந்தைக்கு என்ன திட உணவு கொடுக்கலாம் என்று இந்த கட்டுரையில் உங்களுக்கு கூறியுள்ளோம்.

சில சமயங்களில் குழந்தை ஒரு குறிப்பிட்ட பழம் அல்லது காய்கறியை சாப்பிட மறுக்கலாம். சாப்பிடவில்லை எனில் விட்டுவிடலாம். நடந்து உற்சாகமாகத் திரியும் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம் என்று நீங்கள் குழப்பமடையலாம். இதோ உங்கள் குழப்பம் தீர சில உணவு வகைகள் :

1 வயது கடந்த குழந்தைகளுக்கான சிறந்த உணவுகள்

நடை பயிலும் வயதில் உள்ள உங்கள் குழந்தை ஒரு இடத்தில் உட்காரமாட்டார்கள். எழுந்து நடக்கவே ஆசைப்படுவார்கள். அது அவர்களுக்கு உற்சாகத்தைக்கொடுக்கும். சாப்பிடுவதைக்கூட தவிர்த்துவிட்டு நடப்பார்கள்.


அபப்டி நடைபோடும் குழந்தைக்கு கூடுதல் ஊட்டச் சத்துகள் அவசியம் அல்லவா? எனவே, குழந்தை வளரவும் ஆரோக்யமாகவும் சில ஊட்டச்சத்து செறிந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். குழந்தைக்கு அதிக உணவளிக்க வேண்டாம். சில ஆரோக்யமான உணவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:


1. பழங்கள்

பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதனால் உங்கள் குழந்தை எளிதாக எடுத்து சாப்பிடலாம். பழங்கள் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், அது உங்கள் குறுநடை போடும் குழந்தையை மூச்சுத் திணறச் செய்யலாம். உதாரணமாக, நீங்கள் முழு திராட்சையை பரிமாறுவதை விட சிறிய துண்டுகளாக திராட்சைகளை வெட்ட வேண்டும். அவர்களே எடுத்து உன்ன விரும்புவார்கள். அதற்கு அனுமதியுங்கள்.

2. பால்

ஒவ்வொரு குழந்தைக்கும் பால் அவசியம். இது மிகவும் சத்தானது மற்றும் அவர் உடல் ரீதியாக வலுவாகவும் மன ரீதியாகவும் கூர்மையாக வளர உதவுகிறது. நீங்கள் இன்னும் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது வேறு பால் கொடுப்பதாக இருந்தாலும் குறைந்த அளவு மட்டுமே கொடுக்கவேண்டும். பால் அதிகம் அருந்தினால் திட உணவுகளை உண்ணமாட்டார்கள்.

3. காய்கறிகள்

நடைபயிலும் இந்த காலகட்டத்தில் காய்கறிகளும் குழந்தைக்கு அவசியம். ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் உட்பட பெரும்பாலான காய்கறிகளை கொடுக்கலாம். காலிஃபிளவர் தண்டுகளை நறுக்கி சிறிது மசித்து இவற்றை கொடுக்கலாம். பிசைந்த உருளைக்கிழங்கு மற்றும் கேரட் போன்றவைகளுடன் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சிறப்பாக கொடுக்கலாம்.

4. இறைச்சி

வெள்ளை இறைச்சி உங்கள் குறுநடை போடும் குழந்தைக்கு புரதங்களின் சிறந்த மூலமாகும். உணவளிக்கும் முன் சமைத்து துண்டாக்கலாம். 15 மாத குழந்தைக்கு இறைச்சி ஒரு சிறந்த உணவாகும். ஏனெனில் இது உடலில் ஆற்றலை அதிகரிக்கும், மேலும் உங்கள் குழந்தையை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்.

5. தயிர்

தயிர் குழந்தைகளுக்கு ஆரோக்யமான உணவாகும். குழந்தைகளுக்கு 6 மாதம் குழந்தைக்கும் கூட இது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. தயிர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் உங்கள் குழந்தை விரும்பி உண்ணும் உணவாகவும் இது இருக்கும்.

6. தானியங்கள்

குழந்தையின் ஆரோக்யம் மற்றும் வளர்ச்சிக்கு தானியங்களின் அவசியம். உடைத்த கோதுமை, ராகி, தினை ஆகியவற்றை சிறிய அளவில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம்.

7. பீன்ஸ்

14 மாத குழந்தைக்கு பீன்ஸ் மற்றொரு ஆரோக்யமான உணவாகும். உங்கள் குழந்தை பீன்ஸ் விதையை வேகவைத்து நசுக்கி சிறிய அளவில் கொடுக்கலாம். கிட்னி பீன்ஸில் சரியான அளவு கலோரிகள் உள்ளன மற்றும் கொழுப்பு இல்லை. இது உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக அமைகிறது.

1 year baby food chart in tamil

மேலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட சமையல் வகைகள் ஆரோக்யமானவையாகும். அதை குழந்தைக்கு அச்சமின்றி கொடுக்கலாம். சில ஆரோக்யமான வீட்டு சமையல் குறிப்புகள் இங்கே.

1. ராகி இட்லி

இது 16 மாத குழந்தைக்கு ஆரோக்யமான உணவு. தயாரிப்பதும் எளிது.

தேவையான பொருட்கள்:

10 இட்லிக்கு

இட்லி மாவு (புளிக்கவைத்தது) - 2 கப்

ராகி மாவு - ½ கப்

வெதுவெதுப்பான நீர் - 1/4 கப் + 2 டீஸ்பூன்

சுவைக்கு உப்பு


எப்படி தயாரிப்பது:

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு வெதுவெதுப்பான நீரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.

பேஸ்ட் கெட்டியானதும், இட்லி மாவுடன் கலந்து சிறிது உப்பு சேர்க்கவும். மெதுவாக கிளறவும்.

20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

இதற்கிடையில், ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, இட்லியாக ஊற்றவும். .

இட்லியை 10 நிமிடம் வேக வைக்கவும் .

குழந்தைக்கு சிறிதளவு சூட்டுடன் கொடுக்கலாம். இட்லி குழந்தைக்கு எந்த வயிற்றுக்கோளாறுகளையும் ஏற்படுத்தாது.

2. சப்போட்டா கூழ்

சப்போட்டா இனிப்புச் சுவை மற்றும் அற்புதமான ஆரோக்ய நன்மைகளைக் கொண்டுள்ளது. உங்கள் குழந்தை விரும்பி சுவைக்கும் பழங்களில் ஒன்று சாப்போட்டா.

தேவையான பொருட்கள்:

2 ½ கோப்பைகளுக்கு

சப்போட்டா 1

எப்படி தயாரிப்பது:

பழத்தை பாதியாக நறுக்கி விதைகளை எடுத்து ஒரு முட்கரண்டியைப் பயன்படுத்தி, தேவையான அளவுக்கு பிசையவும். அதில் சிறிது தாய்ப்பால் அல்லது பசும்பால் சேர்க்கவும். குழந்தைக்கு கொடுத்தால் விரும்பி உண்ணும்.


3. பாஸ்தா கீர்

தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்

பாஸ்தா - 3/4 கப்

வெல்லம் துருவியது - 1/4 கப்

பச்சை ஏலக்காய் - 2

அரிசி மாவு - 1 1/2 கப்,

பால்/தண்ணீர் கலந்தது - 1/4 கப்

நெய்

முந்திரி

எப்படி தயாரிப்பது:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பாஸ்தாவைச் சேர்த்து சில நிமிடங்கள் வேகவையுங்கள்.

தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். ஒரு கடாயை எடுத்து நெய்யில் முந்திரியை வறுக்கவும். முடிந்ததும், வறுத்த முந்திரியை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும் வாணலியில் பால் ஊற்றி அதில் வேகவைத்த பாஸ்தாவை சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்க விடவும். மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவு, பால், தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதை மெதுவாக வாணலியில் ஊற்றவும். எல்லாம் சேர்ந்து வேகும்வரை விடாது கிளறவும்.

நன்றாக கூழ்ம நிலை தாண்டி கெட்டியாக விடவும். இப்போது ஏலக்காய் விதைகளை தூவவும்.

வெல்லம் பாகு சேர்த்து மீண்டும் சிறிது வேக விடவும். இப்போது சூப்பரான பாஸ்தா கீர் ரெடி.


குழந்தைகளுக்கான உணவு ஆலோசனைக் குறிப்புகள்

  • உணவு கவர்ச்சியாக இருந்தால், உங்கள் குழந்தை அதை மகிழ்ச்சியுடன் சாப்பிடும். நம்மைப் போலவே சிறியவர்களும் அழகான விஷயங்களில் ஈர்க்கப்படுகிறார்கள். எனவே உணவை அழகுப்படுத்தி குழந்தைகள் பார்க்கும்படி வைத்துக்கொண்டு ஊட்டுங்கள். அல்லது அவர்களை சாப்பிடச் செய்யுங்கள்.
  • நடக்கும் குழந்தைக்கு அதிகமான உணவோ அல்லது மிகக் குறைவான உணவோ வேண்டாம். மிதமான அளவில் கொடுக்கவேண்டும்.
  • குழந்தைக்கு உணவை கட்டாயப்படுத்தி தர வேண்டாம். மாறாக, குழந்தையையே சாப்பிட அனுமதியுங்கள்.
  • அதிகப்படியான இனிப்புகள் அல்லது சர்க்கரை உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
  • குழந்தைக்கு நீங்கள் உணவு தயாரிக்கும்போது ​​​​அதை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான உணவு வகைகளை தேர்வு செய்து கொடுங்கள். ஒரே உணவைக் கொடுத்தால் குழந்தை உண்பதில் ஆர்வமில்லாமல் இருக்கும்.

1 வயதைக்கடந்த குழந்தைக்கு ஆரோக்யமான மற்றும் சத்துள்ள உணவை மட்டுமே கொடுக்க வேண்டும். புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்கவும். சீக்கிரம் தொடங்குவதன் மூலம், ஆரோக்யமான உணவுப் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்கலாம். மேலும் சாப்பிடும்போது குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டால் குழந்தையின் உண்ணும் பழக்கம் உயரும்.


கூடுதலாக இங்கு 1 வயது குழந்தைக்கான உணவு அட்டவணை தரப்பட்டுளளது.










அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Feb 2024 5:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...