/* */

இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கை: மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் வெளியிட்டார்

பருவநிலை மாற்றம் போன்ற எதிர்கால சவால்களுக்கு தயாராவதில் இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கை முக்கிய பங்காற்றும்.

HIGHLIGHTS

இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கை: மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் வெளியிட்டார்
X

இந்தியா மற்றும் ஆர்க்டிக்: நிலையான வளர்ச்சிக்கான கூட்டுறவை உருவாக்குதல்' என்ற தலைப்பிலான இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கையை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஜித்தேந்திர சிங் பேசியதாவது:

இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கை முக்கியமானது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஆர்க்டிக் பகுதியின் அம்சம் குறித்து ஆய்வுசெய்யும் முன்னணி நாடுகளுடன் இணைவதை நோக்கி இந்தியா பெருமையுடன் முன்னேறியுள்ளது. ஆர்க்டிக் பகுதி ஆய்வுகளில், இந்திய விஞ்ஞானிகளின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. பருவநிலை மாற்றம் போன்ற எதிர்கால சவால்களுக்கு தயாராவதில் இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கை முக்கிய பங்காற்றும். ஒரு செயல்திட்டம் மூலம் இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கையை அமல்படுத்தலாம். இந்தியாவின் ஆர்க்டிககொள்கையை அமல்படுத்துவதில், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் எனப் பல தரப்பினரும் ஈடுபடுவர்.

ஆர்க்டிக் பகுதியில் இந்தியாவின் ஈடுபாடு மிகவும் பழமையானது. ஆர்க்டிக் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள பாரீசில் கடந்த 1920ம் ஆண்டு 'ஸ்வால்பார்ட்' ஒப்பந்தம் கையெழுத்திட்டபோதே, அதில் இந்தியாவின் ஈடுபாடு இருந்தது. தற்போது ஆர்க்டிக் பகுதியில் பல அறிவியல் ஆய்வுகளை இந்தியா ேமற்கொள்கிறது. இந்திய ஆராய்ச்சியாளர்கள், ஆர்க்டிக் பகுதி பனிமலைகளை, இமயமலையின் பனிமலைப்பகுதிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆர்க்டிக் பகுதி கடலியல், சுற்றுச்சூழல், மாசு மற்றும் நுண்உயிரியல் தொடர்பான ஆராய்ச்சியிலும் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் 25க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி மையங்கள், ஆர்க்டிக் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2007ம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான ஆய்வு கட்டுரைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆர்க்டிக் கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உட்பட 13 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. கடந்த 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதியில் கோங்ஸ்னோர்டன், நீ அலேசண்ட் ஆகிய இடங்களில் இந்தியா ஆய்வகங்களை அமைத்தது. 2022 வரை, ஆர்க்டிக் பகுதியில் 13 சாகசப் பயணங்களை இந்தியா மேற்கொண்டது.

இந்தியாவின் ஆர்டிக் கொள்கை நீடித்த வளர்ச்சிக்கான கூட்டுறைவை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மனித மேம்பாடு, போக்குவரத்து மற்றும் இணைப்பு, நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு, ஆர்க்டிக் பகுதியில் தேசிய கட்டமைப்பு திறன் ஆகியவை அதிகரிக்கும், என்று தெரிவித்தார்.


Updated On: 17 March 2022 2:16 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...