/* */

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 2024-க்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்: மத்திய அமைச்சர்

தமிழ்நாட்டில் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்யப்படும் -கஜேந்திர சிங் செகாவத்

HIGHLIGHTS

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 2024-க்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்: மத்திய அமைச்சர்
X

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.

ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம் என்றும் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் கலந்துகொண்ட பிராந்திய மாநாட்டில் பேசிய அவர், ஆறு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கு நடப்பு நிதி ஆண்டில் ஜல் ஜீவன் இயக்கத்திற்காக ரூ 20,487.58 கோடியும், தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம் திட்டத்திற்காக ரூ 1,355.13 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், 15-வது நிதி ஆணையத்தின் கீழ் 6 மாநிலங்களுக்கு ரூ 7498 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய அரசு அதிகாரிகள், மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பசவராஜ் பொம்மை, ஜல் ஜீவன் இயக்கத்தை 2019 ஆகஸ்டில் அறிவித்ததன் மூலம் தண்ணீர் பிரச்சினையை சிறப்பாக எதிர்கொண்ட முதல் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி விளங்குகிறார் என்றார்.

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகளை வழங்கியதற்காக தெலங்கானா மற்றும் புதுச்சேரியை பாராட்டிய மத்திய அமைச்சர் திரு செகாவத், மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2023-ம் ஆண்டுக்குள் அம்மாநில குடிநீர் இணைப்புகளை வழங்கி விடும் என்றும், இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டபோது, மொத்தம் இருந்த 1 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரம் கிராமப்புற வீடுகளில், 21.76 லட்சம் (17%) வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகள் இருந்ததாகவும், 30.21 லட்சம் (20.4%) வீடுகளுக்கு திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, தற்போது 51.97 லட்சம் (41%) வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் இதுவரை 2.25 லட்சம் பள்ளிகள் மற்றும் 2.31 லட்சம் அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆகியவை அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தண்ணீர் இணைப்புகள் இருப்பதை உறுதி செய்துள்ளன.

Updated On: 5 March 2022 1:50 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...