/* */

விஞ்ஞானத்தில் உச்சம் தொட்ட நமது அறிவியல் அறிஞர்கள்

Scientist in Tamil- வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அறிவியல் கலந்திருக்கிறது. விஞ்ஞானத்தில் உச்சம் தொட்ட நமது தமிழ் அறிஞர்கள் சிலரை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

விஞ்ஞானத்தில் உச்சம் தொட்ட நமது அறிவியல் அறிஞர்கள்
X

scientist in tamil- இந்திய ஜனாதிபதியாக நம்மை பெருமைப்படுத்திய அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் (கோப்பு படம்)  

Scientist in Tamil- எண்ணற்ற அறிவியல் அறிஞர்களை தமிழகம் அளித்திருந்தாலும், சிலரை பற்றி இங்கு அறிவோம்.


ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன் போன்ற பல பட்டங்களை வென்றவர். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவர் மற்றும் இந்திய ஏவுகணை நாயகனான ஏ.பி.ஜே அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இவர், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார்.

ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார். தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1954 ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியில் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார். 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார். அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து காலமானார்.


இராமன் விளைவுக்காக நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் திரு.சர்.சி.வி.இராமன்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியரான சர் சி.வி.ராமனை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வழக்கமாக சாதனை புரிந்தவர்களின் பிறந்த நாளில்தான் அவர் சாதித்த துறை குறித்து விழா கொண்டாடப்படும். ஆனால், சர் சி.வி.ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த ‘ராமன் விளைவு கோட்பாட்டை’ உலகுக்கு அறிவித்த நாளான பிப்ரவரி 28-ம் தேதியை நாம்தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.

ராமன் விளைவு என்று பரவலாக அறியப்படும் அவரது கண்டுபிடிப்பு

ஐரோப்பாவில் 1928-ம் ஆண்டில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக சி.வி.ராமன்கப்பல் பயணம் மேற்கொண்டார். மத்திய கடல் பகுதியில் சென்று கொண்டுஇருந்தபோது, கப்பலின் திறந்தவெளி தளத்தில், ராமன் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார். இதற்கிடையே, ஆகாயத்தை பார்த்த ராமனுக்கு ஒரு வித்தியாச மான உணர்வு ஏற்பட்டது.

மத்திய தரைக் கடல் பகுதியின் வானம், ஏன் அடர்த்தியான நீல நிறமாககாட்சி அளிக்கிறது என்று சிந்திக்க தொடங்கினார். அப்போது, அவருக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால், அந்த சந்தேகம் மனதில் ஆழப்பதிந்தது. ஐரோப்பா பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியராமன், வானத்தின் நிறம் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அதன் விளைவாக ஒளி ஊடுருவக் கூடிய ஊடகம் திடப் பொருளாகவோ, திரவப் பொருளாகவோ அல்லதுவாயுப் பொருளாகவோ இருக்கலாம்.அந்த ஊடகங்களில் ஒளி செல்லும் போது அதன் இயல்பில் ஏற்படும்மாறுதல்களுக்குக் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்’ (molecular scattering light ) ஏற்படுகிறது என்ற வரலாற்று உண்மையைக் கண்டறிந்தார். இந்த சிறப்பான ஆய்வுக்குதான் அவருக்கு 1930-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

அவர் தன்னுடைய ஆய்வின்போது வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியை (spectrograph) பயன்படுத்தினார். சூரிய ஒளியை பல்வேறுஊடகங்களின் வழியே செலுத்துவதன் மூலம், நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்' தோன்றுவதை அவர் கண்டார். நாம் வானவில் காண்கிறோம் அல்லவா. அது எப்படி உருவாகிறது என்பதையும் ராமன்தான் கண்டுபிடித்தார்.

இதனை பின் நாளில் ‘ராமன் வரிகள்'என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு' (Raman effect)என்றும் அழைக்கப்படத் தொடங்கியது.நோபல் பரிசு மட்டுமல்ல மாணவர்களே, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே, இவருக்கு லண்டனில்உள்ள ராயல் சொசைட்டியின் ‘ஃபெல்லோஷிப்’ (1924), பிரிட்டிஷ் அரசால் இவருக்கு நைட் ஹூட் பட்டம், சர் பட்டம் அளிக்கப்பட்டது (1929).

அதேபோல், இத்தாலி நாட்டின் உயர் பதக்கமான ‘மேட்யூச்சி’, மைசூர் அரசரால் ராஜ்சபாபூசன் பட்டம் (1935), பிலிடெல்பியா நிறுவனத்தின் பிராங்க்ளின் பதக்கம் (1941), இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது ( 1954) அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. அகில உலக லெனின் பரிசு (1957) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பதக்கங்களையும், விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

சந்திரசேகர வெங்கட ராமன் என்ற இயற்பெயர் கொண்ட சர்.சி.வி.ராமன், 1888-ம் ஆண்டு நவம்பர்7-ம் தேதி திருச்சியை அடுத்த திருவானைக்காவல் எனும் கிராமத்தில் பிறந்தார்.

தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு, 1986-ம் ஆண்டு இந்த தினத்தை அறிவித்தது.இந்த ஆண்டுக்கான அறிவியல் தினம் ‘அறிவியலில் பெண்கள்’ என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இன்று விக்யான் பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் அறிவியல் விழா நடைபெறுகிறது. இதில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.


கணிதவியல் அறிஞர் ஸ்ரீனிவாச இராமானுஜம்

கணிதக் குறியீடுகளின் காடுகளில் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருக்கும். வெறும் மாறிகளிருக்குமிடத்தில் சார்புகளைப் பொறுத்தி சிக்கலை இன்னும் கடினமாக்குவது போல் தோன்றும் அளவுக்கு பெரிதாக்கி, அரிய மேதைகளெல்லாம் செய்யமுடியாததை செய்து முடிப்பர். தூய கணிதம் கட்டாயமாக வேண்டும் ஒருங்கல் (convergence), இருப்பு (existence), முதலிய கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உள்ளுணர்வின் போக்கிலேயே வானத்தில் பறந்து பிரச்சினையின் இருண்ட பாகங்களுக்கு சரியானபடி வெளிச்சம் தெரியச் செய்துவிடுவர். சில சமயம் தவறுதலான விடைக்கே சென்றிருந்தாலும் அவர் காட்டிய வெளிச்சம் இதர கணித இயலருக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாகி விடும் விந்தையையும் வரலாறு சொல்லும். இப்படியெல்லாம் இருந்தவர் தான் இந்திய மேதைக் கணக்கியலர் சீனிவாச இராமானுஜன்.


இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மை கட்டுரை தமிழகத்தில் பல லட்சக் கணக்கான மக்களின் மனதில் இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் .கரூர் வானகத்தின் வாயிலாக பலருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்தவர் நம்மாழ்வார். இவர் இயற்கை விவசாயம் பற்றி அதிகம் களம் இறங்கி கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டு என்ற ஒரு வெளிநாட்டு இயற்கை விவசாயியிடம் தான் . நம்மாழ்வார் அவர்களுக்கு உலக விவசாயம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அதிகம் பயன் படுத்தும் விவசாய முறைகள்மற்றும் அது பற்றிய அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே.

இந்திய பாரம்பரியமான அனைத்து விதை ரகங்களை மிக அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். பாரம்பரிய விதிகம் பற்றிய பேச்சு வரும் நேரம் அல்லது பழ நேரங்களில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இருந்த மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவை எப்பொழுதும் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா அவர்கள் இந்தியாவின் 22,972 பாரம்பரியமான நமது நிலதிருக்கேஉரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் சென்று விடமால் பாதுகாத்தவர். இவரு முட்டுகட்டைகள் ஏற்படுத்தியவர் என்பதால் தனது மத்திய அரசு பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இந்தியாவின் பல இயற்கை விவசாய / விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனதின் கையில் 2003-ல் மத்திய அரசு ஒப்படைத்தது.

இதனை அறிந்த நம்மாழ்வார், மிக மன வேதனை அடைந்து இந்தியாவின் சிறந்த பாரம்பரிய விதைகள் நம்மை விட்டு சென்று விட்டது என மனம் வருந்தி கண்ணீர்விட்டு அழுதார்.

இயற்கை வேளாண்மை பற்றிய கொள்கைகள் :

நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள் தான் இந்தியாவில் இயந்திரத்தின் பயன்பாடுகளை அறிமுகம் செய்த பொழுது ‘‘ இயந்திர டிராக்டர் மிக நல்லாத்தான் உழும்; ஆனால் இயற்கை முறையில் விவசாயம் செய்ய சாணி போடாதே’’ என்று சொன்னதை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.

மேலும் விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள்.ஏன்னா ,, ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது நாட்டின் பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். மிக முக்கியமாய் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.

நைட்ரஜன் சத்து குறைபாடு :

இரசாயன உரங்களை கொண்டு நிலத்தில் ஏற்படும் நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற இரசாயன வேளாண்மை உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று படித்த பலரும் வாதிட்டபோது, பழ தலைமுறைகளாக நாம் செய்து வரும் பாரம்பரிய உழவு/ வேளாண்மை முறையான பயிர் சுழற்சி மற்றும் உழவு மூலம் இயல்பாகவே காற்றில் இருந்து கிடைக்கும் நைட்ரஜன் சத்து நமது மண்ணில் வளம் மற்றும் நைட்ரஜன் சத்து அளவை இயற்கையான முறையில் எந்த ரசாயனமும் இல்லாமல் அதிகரிக்கிறது என்று முதன்முதலாக பலருக்கு எடுத்துகாட்டி அனைவருக்கும் நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

இந்தியாவில் பசுமைப் புரட்சியின் காரணமாக மத்திய மாநில அரசு உரங்களை பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவித்துக்கொண்டிருந்த நேரத்தில் , நம்மாழ்வார் தமிழகத்தின் பல கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்து, இரசாயன உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை எவ்வாறு கூடும், அப்படி கூடும் பொழுது அது அளவுக்கு அதிகமான தண்ணீரை எப்படி உறிஞ்சுகிறது என்பதை விவசாயிகள் புரியும் படி சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டுவார் .

இன்றைக்கு இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம்பற்றிய ( பஞ்சகாவியம் , பீஜமிர்தம் , அமிர்தகரைசல் )விழிப்புணர்வு தமிழகத்தில் அதிக அளவு புரிதல் இருபதற்கு அதற்கு நம்மாழ்வாரின் மிக முக்கிய பழ செயல்பாடுகளே காரணம்.

மண்டல வேளாண்மை ஆராய்ச்சி பணி :

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் , ஊரெங்கும் பசுமைப் புரட்சி பற்றிய கருத்துக்கள் அதி தீவிரமாகப் பரவிய காலகட்டத்தில், நம்மாழ்வார் அவர்கள் இயற்கை விவசாயதிற்கான தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார். அதே நேரம் இந்த வாழ்வியல் பயணதிருக்கு தான் பார்த்துவந்த அரசு பணியான “ மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்” இருந்த தனது மத்திய அரசு பணியையும் உதறினார்.

இயற்கை வேளாண்மை கட்டுரை ஒட்டுரகவிதைகள் பற்றிய வழிகாட்டல் :

நம்மில் பலரும் நினைத்து கொண்டு இருபது போல நம்மாழ்வார் இன்றைய கால நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.அவர் பயோடெக்னாலஜியின் அத்தனை விதமான பரிமாணங்களையும் எப்பொழுதும் மிகவும் ஆழமான விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பார் .

அவரின் நேரடி வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும்.இருப்பினும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் கிடைக்கும் பயிர்களால் மண்ணுக்கு, மனிதனுக்கு அதிகமான கேடு ஏற்படும் என்ற காரணத்தை அறிந்து கொண்டு நம்மாழ்வார் அதனை எதிர்த்தார். நமது பாரம்பரிய விதைகளை கொண்டு உருவாக்கிய ஒட்டுரகங்களை ஆதரித்தார்.


முன்னாள் இஸ்ரோ தலைவர் முனைவர்.கஸ்தூரிரங்கன்

நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்ததுள்ளார், அங்குள்ள ஸ்ரீஇராம் வர்மா அரசு உயர் நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மத்திய மும்பையின், மாதுங்காவில் உள்ள ராம்நரைன் ரூயா கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப்பட்டம் பெற்றார். அகமதாபாத், பெசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி, 1971 இல், உயர் ஆற்றல் வானியலில் தனது டாக்டர் பட்டம் பெற்றார். வானியல், விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாடுகளில் 244 க்கும் மேற்பட்ட ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய விண்வெளித் துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைகோள்கள் (இன்சாட் வரிசை செயற்கை கோள்கள்), இந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள் (ஐஆர்எஸ் வரிசை செயற்கைக்கோள்கள்), பாஸ்கரா செயற்கைகோள்கள், துருவச் செயற்கைக்கோள், ஏவு வாகனம் (பிஎஸ்எல்வி), என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்றார். இந்திய விண்வெளித்துறையின் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராக 1994 முதல் 2003 வரை பணியாற்றினார். 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 6 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

விருதுகள்

டாக்டர் கஸ்தூரிரங்கன் 16 பல்கலைக் கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, ஸ்ரீ ஹரி ஓம் ஆஷ்ரம் டாக்டர் விக்ரம் சாரா பாய் ப்ரெரிட் விருது, எம்.பி. பிர்லா நினைவு விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது.


முனைவர்.மயில்சாமி அண்ணாதுரை

மயில்சாமி அண்ணாதுரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார். அது சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும்.

இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில், தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.

அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மாணவர்களும் இவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். அதனால் இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

தற்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், "கையருகே நிலா" என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை, "கையருகே செவ்வாய்" என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுதிவருகிறார். தமிழகப் பள்ளிக்கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.

பிறப்பும், கல்வியும்

1958ம் ஆண்டு ஜூலை இரண்டாம் நாள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதாவடி கிராமத்தில் பிறந்தார். பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே படித்தவர். புகுமுக வகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், பொறியியல் இளநிலையைப் பட்டப்படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் முது நிலைப் பட்டப் படிப்பை பூ. சா. கோ.தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்திலும் பெற்று, முழுக்க முழுக்கத் தமிழகத்திலேயே தனது கல்வியைப் படித்து முடித்தார்.

விண்வெளித் தொழில்நுட்ப ஆய்வு

1982ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் ஒரு அடிமட்ட அறிவியல் ஆய்வராச் சேர்ந்து, தனது உழைப்பாலும் கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இந்திய விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய அறிவியலாளராகத் தனது பெயரைப் பதித்துள்ளார். எட்டு இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல் திட்ட இயக்குனராகச் சிறப்பாற்றியதின், பின் 2004இல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத்திட்டத்தின் இயக்குனராக உயர்ந்தார். கிட்டத்தட்ட 3000 இந்திய மற்றும் சர்வதேச அறிவியலாளர்களைத் தலைமை தாங்கி நிலவில் நீர்கண்டு பிடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு.

சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றிக்குப் பின், இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர் செயற்கைக் கோள் உட்பட அனைத்துத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணச் செயற்கைக்கோள், இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம் போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன் இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப் பெரிய செயற்கைக் கோள் குழுமங்களின் தலைமைத் திட்ட இயக்குனராக 2010இல் உயர்ந்தார். இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் செயற்கைகோள் மையத்திற்கு இயக்குநராக 2015 ஏபரல் முதல் - 2018 ஆகஸ்ட் வரை பணியாற்றினார்..

தற்போது தேசிய திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார்.

தமிழ்ப்பணி

தனது அறிவியல் பணிக்கு வெளியில் தாய்த்தமிழ் மீது பற்றும் தணியாத தாகமும் கொண்டவர். 'வளரும் அறிவியல்' என்று தமிழில் வெளிவரும் அறிவியல் மாத இதழின் கௌரவ ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட சிறந்த பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர். மனிதநேயம் கொண்ட சிறந்த மனிதர். சனி, ஞாயிறுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஓய்வு நேரங்களில் முகநூலின் மூலம் இளைய சமுதாயத்திடம் தொடர்பு கொண்டு கணிணி வாயிலாய், அறிவியல் பார்வை மற்றும் சமூகப் பணியுடன் தமிழார்வத்தையும் ஊக்குவித்து வருகிறார்.

இந்திய நகரங்களின் பல தமிழ்ச்சங்கங்களிலும், அமெரிக்க மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகளிலும் அறிவியல் தமிழில் சிறப்புரை ஆற்றியுள்ளார். கோவைச் செம்மொழி மாநாட்டில் முப்பது அறிவியலாளர்களைக் கொண்டு தலைலைதாங்கி நடத்திய “அறிவியல் தமிழ் ஆய்வரங்கம்” எல்லோராலும் பேசப்பட்ட ஒன்று. இவரது இளமை, கல்வி மற்றும் விண்வெளி ஆய்வு அனுபவங்களடங்கிய “கையருகே நிலா” என்ற புத்தகமும், “அரசுப் பள்ளி பாழல்ல அன்னைத்தமிழும் பாழல்ல” என்ற இவரது கவிதையும் , தமிழகப் பள்ளி மாணவர்களால் அதிகம் படிக்கப்படுகிறது. தமிழகப் பள்ளி இறுதி வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இவரது வாழ்க்கைக் குறிப்பும், அறிவியல் பணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தகங்கள்

மயில்சாமி அண்ணாதுரை தமிழில் ஐந்து நூல்களை எழுதியுள்ளார்.

1. கையருகே நிலா

2. சிறகை விரிக்கும் மங்கள்யான்

3. வளரும் அறிவியல்

4. அறிவியல் களஞ்சியம்

5. விண்ணும் மண்ணும்.

"கையறுகே நிலா" என்ற நூல் 2013ஆம் ஆண்டிற்கான சி. பா. ஆதித்தனார் இலக்கிய விருதை வென்றுள்ளது.

பெற்ற பட்டங்களும் சிறப்புக்களும்

மயில்சாமி அண்ணாதுரை இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார்[8]. அவற்றில் சில பரிசுகளும் பட்டங்களும்,

கர்மவீரர் காமராசர் நினைவு விருது

நான்கு இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள்

முனைவர் பட்டங்கள் (புதுச்சேரி பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்[9], சென்னைப் பல்கலைக்கழகம்[10], எம். ஜி. ஆர். பல்கலைக்கழகம்[11])

சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று சர்வதேச விருதுகள்

ஆஸ்திரேலியா-இந்தியா இன்ஷ்டியூட்டின் மேல்னிலை விருது

சர். சி. வி. இராமன் நினைவு அறிவியல் விருது

ஹரி ஒம் ஆஷ்ரம் ப்ரடிட் விகரம் சாராபாய் அறியல் ஆய்வு விருது

கர்நாடக மாநிலஅரசின் அறிவியலுக்கான விருது (2008)[12]

எச். கே. ப்ரோடிய தேசிய அறிவியல் விருது (2009)[13]

தேசிய ஏரோநாட்டிகல் அறிவியல் தொழில் நுட்ப விருது

ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய அறிவியல் விருது

அமர பாரதி தேசிய அறிவியல் விருது

தேசிய தரமையத்தின் பஜாஃஜ் நினைவு விருது

கொங்குச் சாதனையாளர் விருது

தமிழ் மாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கம்

அறிவியல் அண்ணா, கர்நாடகா தமிழ்பேரவை, ஹுப்ளி

டாக்டர் இரஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசு 2012

சி. பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசு-2013

இந்திய அரசு இவருக்கு 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை வழங்கியது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 March 2024 9:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்