/* */

கொரோனா வைரசுக்கு எதிரான சக்தி வாய்ந்த ஆயுதம் முகக்கவசம் -குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

ஒவ்வொரு இந்தியரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனாவிற்கு எதிரான மக்கள் இயக்கத்தில் இணைய வேண்டும் -குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

HIGHLIGHTS

கொரோனா வைரசுக்கு எதிரான சக்தி வாய்ந்த ஆயுதம் முகக்கவசம் -குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
X

குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

மத்திய சுகாதார அமைச்சகத்தில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று முகக் கவசங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறியதாவது:

இது ஒரு சம்பிரதாயமான நிகழ்வு என்கிற போதிலும், பல்வேறு தொழிற்சாலைகள், பெருநிறுவனங்களில் தலைமை பொறுப்பில் உள்ளோர் மற்றும் பதவியில் உள்ள அரசியல் தலைவர்கள் இதை ஒரு பின்பற்றி,

சரியான கோவிட் நடத்தை முறையின் மூலம் கொரோனா தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என்று பேசினார். முன்கள பணியாளர்களிடம் தொடங்கி சுகாதார அமைச்சகத்தில் உள்ள அனைவருக்கும் முகக் கவசம் வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இன்றைய நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், "இரண்டாம் அலையிடம் இருந்து படிப்படியாக மீண்டு தளர்வுகளை நோக்கி இந்தியாவின் பல பகுதிகள் முன்னேறி வரும் நிலையில், நாம் அஜாக்கிரதையாக இருந்து மறுபடியும் தொற்று பரவ காரணமாகி விட கூடாது" என்றார்.

வைரசுக்கு எதிரான எளிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் முகக் கவசம் என்று கூறிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் உள்ளோர், சமூக அமைப்புகள், அமைச்சகங்களில் உள்ள அவரது சகாக்கள் மற்றும் பதவியில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது பணியாளர்கள் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் கோவிட்-19-க்கு எதிரான போர் வலிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கி உள்ளதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க தற்போது தயாராகி வருவதாகவும் கூறினார்.

ஒவ்வொரு இந்தியரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனாவிற்கு எதிரான மக்கள் இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலாளர் (சுகாதாரம்) ஆர்த்தி அஹுஜா, இந்திய செஞ்சிலுவை சங்க தலைமை இயக்குநர் ஆர்.கே.ஜெயின் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Updated On: 18 Jun 2021 5:48 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்