/* */

'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி: தமிழ் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்றார்

HIGHLIGHTS

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: தமிழ் பாரம்பரிய உடையில்  பிரதமர் மோடி
X

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு வேட்டி சட்டையில் வந்திருந்த பிரதமர் மோடி 

உத்தரபிரதேசத்தின் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாசாரம், ஜவுளி, ரெயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல்-ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரபிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம், டிச.19 வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது. காசி, தமிழகத்துக்கு இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியத்தை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது,

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரு மாநிலங்களின் கைத்தறி, கைவினைப்பொருள், புத்தக, ஆவணப்படம், சமையல் தொடர்பான பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா எம்.பி. பேசும் போது கூறியதாவது: பிரதமர் மோடியை பார்த்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். நதிநீர் இணைப்பு திட்டத்தை அன்றே பாடினார் பாரதியார். தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி; காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது என்று கூறினார்.

Updated On: 19 Nov 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    கோவை பில்லூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்...
  2. நாமக்கல்
    ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி...
  3. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  5. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  6. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  7. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  8. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  9. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  10. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...