/* */

விரைவில் ஓடப்போகிறது மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில்

டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

விரைவில்  ஓடப்போகிறது மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில்
X

மதுரை -பெங்களூரு இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில்.

மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க தென்னக ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் இதற்காக பயன்படுத்தப்படும்.

இதற்கான ரூட் மேப் தற்போது வெளியாகி உள்ளது.வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மதுரை - பெங்களூரு இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டு உள்ளது. 10 மணி நேரத்தில் மதுரை டூ பெங்களூரு செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.

மதுரை-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை விரைவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். திண்டுக்கல், கரூர், சேலம், தருமபுரி, ஓசூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். கூடுதல் நிலையங்கள் இதில் இணைக்கப்பட உள்ளது. புதிய ஆரஞ்சு நிறத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வந்தே பாரத் ரயில்: இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூரு வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.

அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். நெல்லை ரெயில்; இன்னொரு திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது . கடந்த அக்டோபர் மாதம் முதல் இதற்கான சேவை தொடங்கி உள்ளது.

மதுரை -பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவைக்காக குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் இந்த மாதம் மதுரை - பெங்களூருக்கு 6 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்கிறார்கள். இது போக சென்னை - விஜயவாடா இடையே புதிய சேவை அக்டோபர் பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்கனவே தொடங்கப்பட்டது இது குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக சென்னைக்கு வந்து அதே வழியில் திரும்பும். விஜயவாடா மற்றும் சென்னை இடையே நகரங்களுக்கு இடையேயான ரயிலின் பயண நேரம் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரயிலால் 20 நிமிடங்கள் பயணம் குறையும். படுக்கை வசதி: இதேபோல் இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது.

வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 11 April 2024 11:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?