/* */

தண்ணீர் இல்லாத கர்நாடக தலைநகர்: பேராபத்தில் சிக்கியுள்ள பெங்களூரு

தண்ணீர் இல்லாத கர்நாடக தலைநகர் பெங்களூரு பெங்களூரு மாநகரம் விரைவில் உலகின் இரண்டாவது Water Zero City ஆக மாறக்கூடும் என்கின்றனர்.

HIGHLIGHTS

தண்ணீர் இல்லாத கர்நாடக தலைநகர்: பேராபத்தில் சிக்கியுள்ள பெங்களூரு
X

உலகம் முதல் water zero City ஆக ஆனது தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் தான். அது கூட 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாக்கும் கடும் வறட்சியால் நேர்ந்தது. பெங்களூருவில் கடந்த டிசம்பர் , ஜனவரியில் கூட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எங்கே போனது அத்தனை தண்ணீரும் என குழு அமைத்து தேடிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாததால் நகரத்தை விட்டு கிராமம் நோக்கி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான நிலை என பலரும் வர்ணிக்கின்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1 கிமீ உயரத்தில் இருக்கும் தக்காணபீட பூமி நகரம் பெங்களூரு. எனவே நீர்மட்டத்தை பூமி மட்டத்திலேயே சேகரித்து வைத்தால் தான் உண்டு. அதற்கென் இருந்த ஏரிகளை எல்லாம் தொலைத்து விட்டனர்.

40 ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய பெரிய மரங்களுக்கு இடையே நகரையே ஒளிச்சு வைத்தாற்போல இருக்கும்! அதிகாலையில் மெஜஸ்டிக்லே இறங்கி மல்லேஸ்வரம் வரை நடந்து போனால், சாலையெங்கும் பூக்கள் மீதுதான் நடக்க வேண்டியிருக்கும்! படிக்க வேணும்னா ரொமாண்டிக்கா இருக்கும். நிஜத்தில் சிரிப்பா வரும். கார்டன் சிட்டி மொத்தமாக தனது அடையாளங்களைத் தொலைத்து விட்டது.

இப்போது கூட மேகதாது அணை, கூடுதல் காவிரி நீர் என இயற்கைக்கு எதிரான திட்டங்களாகவே அரசு சிந்திக்கிறது. காவிரி உட்பட பல நதிகளின் ஊற்றுக்கண் ஆக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் வறண்டு போக வைக்கும் முட்டாள்தனம் அது. கடல்மட்டத்தில் இருக்கும் சென்னையை விட பேராபத்தில் உள்ளது பெங்களூரு.

பெங்களூருவில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள, வாகனங்களைக் கழுவுதல், தோட்டங்களைப் பராமரித்தல் மற்றும் பல்வேறு கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதற்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. இத்தகைய மீறல்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (KWSSB) அறிவித்துள்ளது.

நீராதாரங்களின் வறட்சி

கடந்த மழைக்காலத்தில் போதுமான மழையின்மை காரணமாக, நகரம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. இந்த நீர் நெருக்கடி பிரச்னையால், தண்ணீர் டேங்கர்களின் விலை கடுமையாக உயர்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வளாகங்களிலும் நீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடையின் விவரங்கள்

மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட KWSSB உத்தரவின்படி, தண்ணீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மால்கள், திரையரங்குகள் போன்ற வணிக நிறுவனங்களும் குடிநீருக்கான அனுமதியை மட்டுமே பெற்றுள்ளன. முதல் முறை விதிமீறலுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும், மேலும் தொடர்ந்து மீறுபவர்களுக்கு, அபராதத்துடன் சேர்த்து தினமும் ரூ.500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

நடவடிக்கைகளின் விளைவு

இந்த கடுமையான நடவடிக்கை மூலம், பெங்களூரு நகரம் தினசரி மிச்சப்படுத்தும் நீரின் அளவை கணிசமாக அதிகரிக்க அரசு எதிர்பார்க்கிறது. தற்போதைய நிலை மேலும் மோசமடைவதைத் தடுத்து, கோடை காலத்தில் குடிநீருக்கான அடிப்படைத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதே பிறப்பித்த உத்தரவின் நோக்கமாகும்.

Updated On: 9 March 2024 12:36 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு