/* */

நிர்பயா கொலைக்குற்றவாளிகள் கருணை மனுவை நிராகரித்தவர் ராம்நாத் கோவிந்த்..!

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நிர்பயா கொலைக்குற்றவாளிகள் 4 பேர் உள்பட தூக்கு தண்டனைக் கைதிகள் மொத்தம் ஆறு பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

நிர்பயா கொலைக்குற்றவாளிகள் கருணை மனுவை நிராகரித்தவர் ராம்நாத் கோவிந்த்..!
X

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் 25 ம் தேதி பதவி ஏற்றார். இந்நிலையில் அவருடைய 5 ஆண்டு பதவிக்காலம் வரும் 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் வரும் 18 ம் தேதி நடக்கிறது. பா.ஜ., கூட்டணியில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கடுமையான போட்டிக்களத்தில் உள்ளனர். இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் தூக்கு தண்டனை கைதிகள் இறுதியாக குடியரசு தலைவருக்கு போடும் எத்துணை கருணை மனுக்களை நிராகரித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தன் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். அந்த விவரப்படி, பீஹாரின் வைசாலி மாவட்டத்தை சேர்ந்த ஜகத்ராய், விஜயேந்திர மகோத்தா என்பவர் வீட்டுக்கு தீ வைத்தார். இதில் விஜயேந்திராவின் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். கடந்த 2006ல் நடந்த இந்தக் கொலை வழக்கு விசாரணை முடிவில், 2013ல் ஜகத்ராய்க்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜகத்ராய் அனுப்பிய கருணை மனுவை ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

மேலும் டில்லியில் 2012ல் நிர்பயா என்னும் மாணவியை ஓடும் பஸ்சில் கூட்டு பலாத்காரம் செய்த முகேஷ்சிங், வினய் சர்மா, அக்ஷய்குமார் சிங், பவன்குப்தா உட்பட ஆறு பேர் கைது செய்யப் பட்டனர். முக்கிய குற்றவாளியான ராம்சிங் திஹார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மீதி ஐந்து பேரில் ஒரு சிறுவன் விடுவிக்கப்பட்டான். மற்ற நான்கு பேருக்கும் துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு பேரும் தனித் தனியாக அனுப்பிய கருணை மனுக்களை ராம்நாத் கோவிந்த் 2020ல் நிராகரித்தார்.

இதையடுத்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் என்பவரின் கருணை மனுவையும் தன் பதவிக் காலத்தின் இறுதியில் ராம்நாத் நிராகரித்துள்ளார். இதேபோல, ஜனாதிபதி பதவி வகித்த பிரணாப் முகர்ஜி 30 மனுக்களையும், வெங்கட்ராமன் 45 மனுக்களையும், அப்துல்கலாம் 2 மனுக்களையும், பிரதிபா பாட்டீல் 5 கருணை மனுக்களை நிராகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On: 8 July 2022 7:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு