/* */

அசுர பலத்துடன் நிமிர்ந்து நிற்கும் இந்தியா; மிரட்சியில் பரிதவிக்கும் சீனா

சீனா தன்னை அமெரிக்காவிற்கு அடுத்த வல்லரசாக மாற்றிக்கொள்ள எடுத்த முடிவுகளில், இந்தியாவை இழுத்து விட்டது; இந்தியாவின் அசுர படை பலத்தை கண்டு இன்று மிரண்டு, நடுங்கி வருகிறது.

HIGHLIGHTS

அசுர பலத்துடன் நிமிர்ந்து நிற்கும் இந்தியா; மிரட்சியில் பரிதவிக்கும் சீனா
X

இந்தியாவின் அசுர பலத்தை கண்டு, அஞ்சி தவிக்கிறது சீனா ( கோப்பு படம்).

இந்தியா, உலகின் மிகப்பெரிய மனிதவளம் பொருந்திய நாடு. மக்கள் தொகை ஒரு காலத்தில் சுமையாக மேலை நாடுகளால் பார்க்கப்பட்டபோது, சீனாவும் தனது மக்கள் தொகையில், 'ஒரு குழந்தை மட்டும்' என்று இரும்பு கரத்தால் கட்டுப்படுத்தியது. ஆனால் இந்தியாவின் ஜனநாயகத்தில் அது எல்லாம் முடியாது என்பதால் அவ்வாறு செய்யவில்லை. அதனால் இன்று உலகின் மிகப்பெரிய மனித வளம் (20-32 வயது) கொண்ட நாடாக மாறிவிட்டது.

மேற்கத்திய நாடுகளில் மனிதவளம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கிறது. அது மட்டுமல்ல, உலகில் இன்று அதிக நாடுகளில், இந்தியர்கள் பரவி உள்ளது மட்டுமல்ல, அங்கே அவர்கள் ஆளுமையும் செய்கிறார்கள் என்பது மிகப்பெரிய வலிமை. அதுதான் உலகின் மிகச்சிறந்த ஆயுதம். அதனால் தான் பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போதெல்லாம் அவர்களை இணைக்க பொதுக்கூட்டம் போடுகிறார். அவரின் ஒவ்வொரு நகர்விற்கு பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும், அதன் பின்னால் அஜீத்தோவல், ஜெய்ஷங்கர், அமித்ஷா இருப்பார்கள்.

அடுத்தது, இந்தியர்களின் தாய்நாட்டு பற்று. இஸ்ரேலை விட இந்தியர்கள் அதிக நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். அதற்கு முக்கிய காரணம், அதன் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, மற்றவர்கள் நம்பிக்கையையும் மதிக்கும் சனாதன கலாச்சாரம் அதனால் தான் உலக நாடுகள் இந்தியாவில் இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை புகுத்தி அதை கெ(த)டுக்க நினைகிறார்கள். ஏனெனில், மதம் என்பது தாய் நாட்டுக்கு மாற்றான ஒரு இணைக்கும் கலாச்சார ரீதியிலான பலம், பாலம்.

மூன்றாவது சுய சார்பை நோக்கி நகரும் இந்தியாவின் பொருளாதாரம். இந்தியாவின் மிகப்பெரிய சார்பு என்பது, கச்சா எண்ணெய். Renewable Energy என்று சொல்லப்படுகிற சூரிய, காற்று மின் உற்பத்தி மூலம், அது தன்னை சுய சார்பு நாடாக மாற்றிவிட்டால், இந்தியாவை உலகின் எந்த நாடுகளாலும் கட்டுப்படுத்தவே முடியாது. தற்போது இந்தியா அந்த இலக்கினை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

இந்தியாவின் சனாதன தர்மத்தின் படி, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் போல ஏமாற்றி வயிற்றில் அடித்து அவர்கள் உழப்பை உறிஞ்சி சுய நலத்தோடு பார்க்காமல், ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியையும் தாயுள்ளத்தோடு கவனிப்பதால், ஆப்ரிக்க நாடுகள் முதல் தென் அமெரிக்க நாடுகள் வரை இந்தியாவை உலகின் குருவாக பார்க்கின்றன.

எனவே, உலக நாடுகள் இந்தியாவை வருங்கால வல்லரசாக பார்க்கிறது. அதை தடுக்க ஊழல்வாதிகளை கைக்குள் போட்டு, மக்களை பிரித்து, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் மேற்கத்திய நாடுகளும், சீனாவும் கட்டுப்படுத்தியது. 2014க்கு பின் அது அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வீழ்ந்து விட்டது.

இந்த நிலையில் சீனா, தன்னை அடுத்த வல்லரசாக உயர்த்திக்கொள்ளும் ஒரு பேராசைக்கான முயற்சியில், அதன் இப்போதைய வல்லரசான அமெரிக்காவை மட்டும் எதிர்க்காமல், தான் வல்லரசாகவே மாறிவிட்டோம் என்று கருதி வருங்காலத்தை மனதில் கொண்டு இந்தியா போட்டியாகி விடக்கூடாது என்று, நம்மை சிதைக்கவும் நினைத்தது.

பொதுவாக இந்தியா தனது உள்விவகாரங்களில் தலையிடாத மற்ற நாடுகளின் உள்ளே தலையிடாது. சீனா. தன்னை சுற்றியுள்ள 16 நாடுகளுடன் கொண்ட கடும் பகை கொண்டுள்ளது.

அதனால், இந்தியாவை முதலில் கையகப்படுத்த அது மேற்கொண்ட முயற்சி ரஷ்ய பாதையில் ஜனநாயக ரீதியாக கம்யூனிஸ்ட் கட்சி, ஆயுத ரீதியாக அமெரிக்க வழியில் நக்ஸலைட், கலாச்சார ரீதியாக இங்கிலாந்தின் கிறிஸ்தவம் என்ற மூன்று வகை ஆயுதங்களை கையில் எடுத்தது. இதை தாண்டி பொருளாதார சார்பு நிலையை ஆழமாக விதைத்தது. அவற்றை இணைக்கும் கருவியாக சில பத்திரிக்கைகளையும், ஊழல் கட்சிகளையும் பயன்படுத்தியது.

ஒரு போரில் வெல்ல வேண்டுமெனில், அந்தக்காலம் போல படைகளை மட்டும் நம்பி இருக்காமல், மேற்சொன்ன வழிகளில் அதை முதலில் பலவீனப்படுத்தி, அதன்பின்னால் படைகளை கொண்டு வெல்வது என்பது புதிய யுக்தி. அதே சமயம், இந்தியா தன் விஷயத்தில் ஒருபோதும் குறுக்கிடாத அளவிற்கு அதற்கு ஒரு பெரும் தலைவலியாக ஒரு பிரச்சினையை கொடுக்க வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தானை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதற்கு தேவையான ஆயுதங்களை அளவுக்கு மீறி கடனாக கொடுத்தது.

அது மட்டுமில்லாமல் பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, மியான்மார், பங்களாதேஷ் என்று பவள மாலை போல இந்தியாவை எப்போதும் கட்டுக்குள் வைக்க அங்கிருக்கும் துறைமுகங்களை தனதாக்கியது. அதாவது சீனா நேரடியாக வடகிழக்கில் இருந்து இந்தியாவை தாக்க, பாகிஸ்தான் வடமேற்கில் இருந்து தாக்க, இந்தியாவின் மேற்கு, தெற்கு, கிழக்கில் இருந்து சீனாவின் கடற்படை தாக்கும் போது, இந்தியா எளிதில் வீழ்ந்து விடும் என்பது அதன் போர் வியூகம். பின்பு இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் இந்தியாவை ஆள்வது என்பது அதன் நீண்டகால திட்டம்.

இந்த வகையில், அது இந்தியா விஷயத்தில் Neutral செய்து விட்டதாக கருதி, 2008ம் ஆண்டுவாக்கில் அமெரிக்கா பொருளாதார மந்த நிலை வந்தவுடன் அதை நேரடியாக வீழ்த்த யுக்தியை வகுத்தது. அங்கு பயன்படுத்திய ஆயுதம் பொருளாதார சார்பு நிலை, ராணுவ வலிமை. அது தவிர அமெரிக்காவின் பொருளாதார வலிமைக்கு காராணமான Global Currency க்கு மாற்றாக தனது யுவானை மாற்ற முன்னெடுத்தது. இவற்றில் ஆயுத ரீதியில் அமெரிக்காவிற்கு இணையான முன்னேற்றத்தை அடைந்து விட்டதாக கருதியது சீனா. பொருளாதார ரீதியாக சீனா தன் Supply Chain இல்லாமல் அமெரிக்கா இயங்க முடியாது என்ற சூழலை ஏற்படுத்தி விட்டதாகவும் முழுதாக நம்பியது.

குறிப்பாக, உலக நாடுகளளை தாக்குப்பிடிக்க கப்பற்படையும், கண்டம் விடு கண்டம் தாவும் ஏவுகணையும், மிக அவசியம் என்பதால், அதன் கப்பற்படையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கியது. அதே நேரம் தன்னை பாதுகாத்துக்கொள்ள விமானப்படையையும், அதன் Missile Shield System (HQ Series System) மூலம் தன்னை பாதுகாக்க முடியும் எனறும் பெரிதாக நம்பியது. அதை ஓரளவு செய்து முடித்து விட்டது நினைத்து அமெரிக்காவுடன் உரச ஆரம்பித்தது. ஆனால், தவறுதலாக பாகிஸ்தானில் ஏவிய நமது பிரம்மோஸ் ஏவுகணை என்பது, அந்த நம்பிக்கையை உடைத்து விட்டது என்பது பலருக்கு தெரியாது.

இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்தார். வந்தவர் பாகிஸ்தானை Demontization என்பதில் தொடங்கி, பொருளாதார ரீதியில் உலக நாடுகளிடம் இருந்து பிரித்து அதை வறுமையான நாடாக்கினார். அந்த நிலையில், சீனா பாகிஸ்தானை கைவிட்டு, இந்தியாவை பகைக்காமல் நட்பு நாடாக்கி இருந்தால் அதற்கு பிரச்னை இருந்திருக்காது. அப்போது சீனா-ரஷ்யா-இந்தியா என்ற கூட்டணி மூலம் முதலில் அமெரிக்காவை நியூட்ரலைஸ் செய்து பின்பு இந்தியாவை தன் வசப்படுத்தி இருக்கலாம்.

ஆனால் சீனாவின் மிக முக்கிய Trade Route என்பது இந்திய பெருங்கடல் வழியாக நடக்கிறது. அது ஒரே வழி எனும்போது, தடைபட்டால் சீனாவின் எரிபொருள் தேவையை பெற முடியாது என்பதற்காக, பாகிஸ்தான் வழியாக பெரும் முதலீடு செய்து குவார்டர் துறைமுகத்தை பாகிஸ்தான், காஷ்மீர், திபெத் சாலை வழியாக இணைக்கும் பணியில் ஈடுபட்டது. எனவே அதை கைவிட முடியாத சூழலில், அதன் பின்னால் நிற்க வேண்டிய கட்டாயத்திலும், இந்தியாவிடம் கையகப்படுத்திய லடாக்கை மட்டுமல்ல, திபெத்தை இந்தியா மீட்டெடுக்க முயலும் என்ற ரீதியில் இந்தியாவை அமெரிக்காவிற்கு இணையாக பகை நாடாகவே கருதியது.

இப்போது இந்தியாவை சீனா தாக்கவேண்டுமெனில் முதலில் பயன்படுத்தும் தாக்குதல் வான்வழியில் போர் விமானங்கள் மூலமும், ஏவுகணைகள் மூலமும் தொடங்க வேண்டும். ஆனால் இந்தியா இப்போது தனது விமானப்படையை சீனாவை விட வலிமையானதாக மாற்றி அமைத்து விட்டது. அது மட்டும்மல்ல, சீனாவின் விமானப்படை இந்திய எல்லைக்கு அருகில் இருந்தால் தான் அதன் வீச்சு இந்தியாவின் உற்பகுதிக்குள் சென்று தாக்க முடியும். அப்போது அதன் விமானங்கள் திபெத்திலிருந்து பறக்க வேண்டும். அதற்கெல்லாம் இப்போது வாய்ப்பில்லை.

ஆனால் இந்தியாவால் அருகில் இருக்கும் சமவெளியில் இருந்து பறக்க முடியும். என்பதாலும், இந்திய விமானிகள் மிகச்சிறந்த திறமை கொண்டவர்கள் என்பதாலும், சிறந்த போர் அனுபவங்கள் இந்தியாவிடம் இருப்பதாலும், சீனாவின் விமானப்படையால் இந்தியாவை வெல்ல முடியாது.

அடுத்து ஏவுகணை என்பது மாற்று வழி என்றால், இந்தியாவிடம் இருக்கும் ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இந்தியாவின் Missile Shield System, அதை தடுக்கும் வல்லமை பெற்றவை. ஆனால் இந்தியாவின் பிரம்மோஸ் வகை ஏவுகணைகளுக்கு அமெரிக்காவிடமே பதில் இல்லை எனும் போது, சீனா என்ன நினைத்தாலும் சின்னாபின்னம் ஆகிவிடும்.

அடுத்து சீனாவின் ராணுவ வீரர்களின் வலிமை என்பது நமது ஒரு இந்திய வீரருக்கு மூன்று சீன வீரர்கள் சமம் என்று 1962 போரில் இருந்து நேற்றுவரை நிரூபிக்கப்பட்ட ஒன்று. மேலும் அதன் டாங்குகளை இமயமலையினை தாண்டி சீனாவால் கொண்டு வர முடியாத சூழலில் அதுவும் பயன் இல்லை.

இந்தியாவின் வான் பாதுகாப்பு பெரும்பாலும் வடக்கில் இருப்பதால் தெற்கில் வான் எல்லைகள் திறந்து கிடக்கிறது என்று சீனா பலமாக நம்புகிறது. அதனால் தான் அது பாக்., ஸ்ரீலங்கா., மியான்மார்., பங்களாதேஷ் என்று நான்கு நாடுகளில் துறைமுகங்களை வாங்கி... பெரும் முதலீடு செய்து, தன் கப்பற்படையை வைத்து இந்தியாவை சுற்றி வளைக்க முயல்கிறது.

சீனா அதற்கு Pearls, Blue Sea என்று இரண்டு வகை யுக்தியை வகுத்துள்ளது. அதன் மூலம் இந்தியாவின் கப்பற்படை இந்திய பெருங்கடலை தாண்டி வெளியே போக முடியாது என்பது மட்டுமலல், அதை சீனா தாக்கி அழித்து விட்டால் அதன் அரபு நாடுகளிடம் இருந்து எரிபொருள் தேவையை தடங்கலின்றி பெற முடியும் என்பதும், இந்தியாவை தெற்கில் இருந்து பலமாக கடற்படை மூலம் தாக்க முடியும் என்பது தனக்கு சாதகமான வழியாக இருக்கிறது என சீனா நினைக்கிறது.

ஆனால் இந்திய கப்பற்படை சீனாவை சமாளிக்க வேண்டும் தேவையான அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விட்டது. எனவே சீன கப்பற்படை தான் நினைத்ததை சாதிப்பது என்பது இயலவே, இயலாத காரியம்.

இதற்கு சிறிய உதாரணம். மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்திய அரசு மீண்டும் எண்ணெய் துறப்பபணிக்காக (Explore) குழுவை வியட்நாமுக்கு அனுப்பியது. சீனா என்ன செய்யும் என்பதை நன்கு அறிந்த இந்திய அரசு, அதற்கு முன்பு இந்தியா வியட்நாமுடன் அதன் தென்சீனக்கடலை காக்க, இந்தியாவிடம் ஒரு ஒப்பந்தம் போட்டு, நம் கடற்படையை அங்கே முதலில் அனுப்பியது. அதனால் சீனா தாக்கப்போவதாக மிரட்டியது ஆனால் அது கொடுத்த எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டது. சீனா முதன் முதலாக, தன் கடல் ஆதிக்கத்தில் உள்ள இடத்திலேயே இந்தியாவால் இழிவுபட்டது.

சீனாவின் தென் சீனக்கடலில் நாம் நம் கடற்படையை வைத்து சீனாவை எதிர்த்து வியட்நாமுக்காக தைரியமாக செய்த எண்ணெய் துறப்பன் பணி சீனாவின் எதிரிகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை ஆச்சர்யபடுத்தியது. அவர்களே சீனாவின் அத்து மீறல்களை தடுக்க பயந்த போது, கடற்படையில் இந்தியா, சீனாவை ஆட்டம் காண வைத்து விட்டதே? என ஆச்சர்யப்பட்டு விட்டன. அதனால் அவர்களே நம்முடன் இணைந்து QUAD கூட்டமைப்பினை உருவாக்கினர். இப்போது சீனா நம் கப்பற்படை மீது கைவத்தால், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியயாவும் களத்தில் குதிக்கும். எனவே சீனாவின் கைகள் முழுமையாக கட்டப்பட்டு விட்டது.

இப்போது சீனா நம் மீது பேர் தொடுத்தால் அதன் எரிபொருள் தேவை 90 சதவீதம் இந்திய பெருங்கடல் வழியாக, குறிப்பாக அந்தமான் வழியாக செல்கிறது. இந்தியா அதனை முழுமையாக தடுத்து விடும். சீனாவின் வாணிப போக்குவரத்தும் 70 சதவீதம் பாதிக்கப்படும். எரிபொருள் இல்லாத சீனா தன்னிடம் இருக்கும் 3 மாதகால இருப்பை பெருமளவில் போரில் பயன்படுத்தி விட்டால், பெட்ரோல் இல்லாத சீனாவின் போர் விமானம், டாங்குகள் எல்லாம் காயலான் கடை சரக்குகளாக மாறி விடும்.

இந்தியாவின் இரண்டு பிரம்மோஸ் வகை ஏவகணைகளை அமெரிக்காவின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல் ஜெரால்ட் மீது தாக்கினால் அமெரிக்க கப்பல் காணாமல் போய் விடும் என அமெரிக்காவின் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த சூழலில் இதுவரை போரையே பார்க்காத சீனாவின் 6 விமானந்தாங்கி கப்பல்கள்,. ஒரே நாளில் சீனாவின் கப்பல்படை காலியாகி விடும்.

எனவே இந்தியா மூன்றாவது விமானந்தாங்கி கப்பலை கட்டுவதற்கு பதிலாக அணுமின் விசை மூலம் இயங்கும் நீர் மூழ்கி கப்பல்கள், டெஸ்ட்ராயர், பிரிகேடியர், கோர்பெட் வகை கப்பல்களை தயாரித்து, அவற்றை நெட்வொர்க் மூலம் இணைத்து, அதன் எல்லையை பரவலாக்கி விஸ்தரிப்பதன் மூலம் சீனாவை மட்டுமல்ல எந்த நாட்டையும் நாம் சமாளிக்க முடியும் என்ற நிலையை நோக்கி வளர்ந்து வருகிறது.

இந்த முயற்சிகள் இதே வேகத்தில் சென்றால் 2034 ல் இந்தியா உலகின் சக்தி வாய்ந்த கடற்படையுடன் சீனாவினை முந்தி நிற்கும். ஆக தற்போதய நிலையில் சீனா இந்தியாவுடன் மோதலில் ஈடுபடுவது என்பது தற்கொலைக்கு சமம் ஆகும். சீனாவின் உளவியல் மிரட்டல்களும் இந்தியாவிடம் எடுபடவில்லை. இந்தியா ஒருமுறையாவது சீனாவுடன் மோதிப்பார்த்து விடுவோம். எந்த சூழலிலும் எந்தக்கட்டத்திலும் சீனாவிற்கு பின்வாங்குவதில்லை என்பதில் தெளிவாக உள்ளது. இதனால் இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டு சீனா பரிதவித்து வருகிறது.

Updated On: 18 Dec 2022 6:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா