/* */

மாநில மொழிக்கல்வி ஊக்குவிக்கப்படும்: அமைச்சர் நிர்மலா பட்ஜெட் உரை

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு

HIGHLIGHTS

மாநில மொழிக்கல்வி ஊக்குவிக்கப்படும்: அமைச்சர் நிர்மலா பட்ஜெட் உரை
X
  • நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அவரது உரையில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகளில் முக்கியமானவை விவரம் வருமாறு:
  • ஒன்று முதல் 12,ம் வகுப்பு வரை மாநில மொழி கல்விக்கு முன்னுரிமை தரப்படும்
  • பள்ளிக்கல்வியை ஊக்குவிக்க ஒரு வகுப்பு, ஒரு தொலைக்காட்சி என்ற திட்டம் அறிமுகம்
  • கல்வி ஒளிபரப்புக்கென நாடு முழுவதும் 400, சேனல்கள் தொடங்கப்படும்.
  • நாடு முழுவதும் இரண்டு லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்
  • டிஜிட்டல் முறையில் கல்வி கற்பது ஊக்கப்படுத்தப்படும்; டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
  • அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ஏதுவாக, இத்திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கிடு செய்து 18,லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை.
  • மகளிருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மூன்று புதிய திட்டங்கள் அறிமுகம். சகி இயக்கம், வாத்சல்யா, ஊட்டச்சத்து 2.௦ என்ற பெயரில் திட்டங்கள்.
  • இ- பாஸ் போர்ட் திட்டம் அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படும். நவீன சிப் பொருத்திய இ- பாஸ்போர்ட் முறை அறிமுகமாகும்.
  • வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்கென ரூ. 2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • மின்சார பேட்டரிக்கு சார்ஜ் போடுவதற்கு பதிலாக மாற்றிக் கொள்ளும் வகையில் புதிய மின்சார வாகனக் கொள்கை.
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 1,486 பழைய சட்டங்கள் திரும்ப பெறப்படும்
  • நடப்பாண்டு 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெறும்
  • நிலசீர்த்திருத்த நடவடிக்கையாக, ஒரு நாடு, ஒரே பதிவு என்ற நடைமுறை கொண்டு வரப்படும்.
  • 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்
  • பாதுகாப்பு படைகளுக்கு தேவையான பொருட்களில் 68% உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும்.
  • கண்ணாடி இழை கேபிள் முலம், கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
  • வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக ரூ. 1500, கோடி ஒதுக்கீடு.
  • சூரியஒளி மின்சார உற்பத்திக்கு ரூ.19,500, கோடி ஒதுக்கீடு.
  • நாட்டில் 75, மாவட்டங்களில் டிஜிட்டல் பேங்கிங் வசதி செய்து தரப்படும்.
Updated On: 3 Feb 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  3. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  4. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  5. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  6. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  7. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  8. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  9. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!