/* */

உயிர்களைக் கொடுத்து வாங்கிய சுதந்திரத்தினை பேணிக் காப்போம்....படிங்க

Independence Day Tamil Speech For Students-ஆங்கிலேயரிடம்அடிமைப்பட்டுக் கிடந்த நாம் ஒற்றுமையால் சுதந்திரத்தினை நள்ளிரவில் பெற்றோம்.... பேணிக்காப்போம்...

HIGHLIGHTS

உயிர்களைக் கொடுத்து வாங்கிய   சுதந்திரத்தினை பேணிக் காப்போம்....படிங்க
X

இந்திய தேசியக் கொடி.


தலைநகர் புதுடில்லியில்2022ம் ஆண்டு நடந்த சுதந்திர தினவிழாவில் முப்படைகள் தேசியக்கொடி வண்ணத்தில் அணி வகுத்து நின்றிருந்த காட்சி (பைல்படம்)

Independence Day Tamil Speech for Students-அந்நிய ஆதிக்கத்தில் அடிமைச்சிறையில் துன்புற்று பல உயிர்களை நீத்துபெற்ற சுதந்திரத்தினைப் பேணிக்காப்போம்... என்றென்றும்.. பல உயிர்களை சுதந்திரத்திற்காக நீத்து நமக்கு சுதந்திரத்தைப் பரிசாக அளித்துசென்றுள்ளனர் நம்முன்னோர்கள்.வருங்கால வம்சத்தவருக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த ஆன்றோர்களின் காணிக்கை மக்கள் மனதை ஒற்றுமைப்படுத்திய மகா சரித்திரம். சுதந்திர தாகம் பல்வழியிலும் ஊட்டப்பட்டது. கவிஞர்கள், புலவர்கள் தத்தம் பாடல்களின் மூலம் சுதந்திர வேட்கையினை ஊட்டினார்கள் என்பதற்கு அவர்களுடைய பாடல்களே சான்று.

'' அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை ஆங்கொரு

காட்லோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு''

என்னும் வரிகளில் ஆழ்ந்த கருத்துடன் சுட்டிக்காட்டுவதை உணரலாம்.

கி.பி. 1600ல் அடியெடுத்து வைத்த ஆங்கிலேயர்கள் கம்பெனி ஆட்சி மூலம் அடிமைப்படுத்தியும், நேரடி ஆட்சியில் நம்மை அடிமைப்படுத்தவும் செய்தனர். நம்மைப் பிரித்தே நமக்கு எதிராகச் சதிசெய்து நாடு முழுமைக்கும் தன் ஆட்சியின் கீழ் கொண்டனர்.

ஆங்கிலேயர்களை முதலில் எதிர்த்தவர்களாக தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள், பூமித்தேவன், போன்றோரும் வடக்கே ஜான்சிராணியும் குறிப்பிடத்தக்கவர்கள்.

புதுடில்லியில்2022ம்ஆண்டில் நடந்த சுதந்திர தினவிழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் பிரதமர் நரேந்திரமோடி (பைல்படம்)

மிதவாதம், தீவிரவாதம் எனும் வழிகளில் ஆங்கிலேயரை எதிர்த்தாலும் இரண்டிற்கும் ஒரே குறிக்கோள் சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான். விடுதலைப் போராட்டத்திற்குப் பாடுபட்டவர்களாக வடக்கே காந்தியடிகள், நேரு,திலகர், பட்டேல், நேதாஜி போன்றோரும் , தமிழகத்தில் வாஞ்சிநாதன், சிவா, வ.உ.சி, போன்றோரும் கவிஞர்களாக தாகூர், பாரதி, கவிமணி, நாமக்கல் கவிஞர், போன்றோரும் மற்றும் நாடகக்கலை மூலம் பலரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

சென்னை ரிப்பன் பில்டிங் மாநகராட்சி கட்டிடம் தேசியக்கொடி வண்ணத்தில் மிளிர்ந்தது (பைல்படம்)

பல்வேறு வகையான முழக்கங்கள் போராட்டத்தில் அக்காலத்தில் எழுப்பப்பட்டன. காந்தியடிகளின் செய் அல்லது செத்துமடி என்ற கோஷமும், நேதாஜியின் டில்லி சலோ , வந்தேமாதரம், எனும் கோஷமும் உச்சநிலை அடைந்து ஒத்துழையாமை இயக்கம், உப்புசத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றால் ஆங்கிலேயர் இந்தியரின் பெருமையை உணரலாயினர். 1947 ஆகஸ்ட் 15 ம் தேதி நாம் சுந்திரம் பெற்றோம். இந்த நாள் இந்திய சரித்திரத்தின் பொன்னான நாளாக இன்று வரை கருதப்படுகிறது.

சுதந்திர தினம் அரசாங்க விடுமுறை தினமாகும். இது இந்தியரின் திருவிழா, அனைவர் நெஞ்சமும் மகிழ்வுற்றுக் காணப்படும். மக்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவு கூர்வர். நாட்டின் தலைநகரான டில்லியில் , மாநிலத் தலைநகரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளிகளில், கல்லுாரிகளில் மற்றும் கொடியேற்று விழா நடக்கும் இடங்களில் துாய்மைப்படுத்தப்படுகிறது.

டில்லி செங்கோட்டை தேசியக் கொடி வண்ணத்தில் ஜொலித்தது (பைல்படம்)

மாணவ, மாணவியர் அனைவரும் தங்கள் ஆடையில் தேசியக்கொடியின் மாதிரியை அணிந்து கொள்வர்.

டில்லியில் பிரதமர் கொடியேற்றி வைப்பது வழக்கம். அதேபோல் மாநிலங்களில் முதல்வர்களும், மாவட்டத்தில் கலெக்டர்களும் கொடியினை ஏற்றுவார்கள். இந்தியத்தலைநகரம் டில்லியில் முப்படை அணிவகுப்புகள் நடைபெறும். முப்படைகளும், தங்கள் சாகசங்களைப் புரிந்து உளம் மகிழச்செய்வர். கொடியேற்றப்படும் இடங்களில் கலந்துகொள்வோருக்கு இனிப்புகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திரதினவிழாவில் முதல்வர்ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். (பைல்படம்)

சுதந்திரம் நமது பிறப்புரிமை என முழங்கி , அந்நியரை ஓட்டினால் கூட நம்மவர்க்கு அறிவுறுத்தும் வகையில்,

''நல்லதோர் வீணைசெய்தே- அதை நலம் கெடப் புழுதியில் ஏறிவதுண்டோ? எனக்கூறுவது சிந்திக்கத்தக்கது. ரத்தஙக்ளைச் சிந்தி ப் பெற்ற சுதந்திரத்தை எண்ணிப் பார்த்தல் அவசியம் எனும் வீதத்தி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்கண்ணீராற் காத்தோம்.. கருகத் திருவுளமோ, என எடுத்துக்கூறும் பாடல்களின் வரிகள் சுதந்திரத்திற்காக செய்த தியாகங்கள் வீணாகாதவாறு அதன் பெருமையை அறிவுறுத்தும் பாடலேயாகும். சுதந்திரத்தின் தனிப்பெருமையை உணர்வோமாக.

பெற்ற சுதந்திரத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பேணிக்காப்போம்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 27 March 2024 7:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...