/* */

Cluster Beans in Tamil-கொத்தவரை சாப்பிட்டா என்ன நன்மைகள் கிடைக்கும்?

மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படாத ஒரு சில காய்கறி வகைகளில் கொத்தவரங்காயும் ஒன்று. ஆனால் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.

HIGHLIGHTS

Cluster Beans in Tamil-கொத்தவரை சாப்பிட்டா என்ன நன்மைகள் கிடைக்கும்?
X

cluster beans in tamil-நோய்எதிர்ப்பு சக்தியைத் தரும் கொத்தவரை (கோப்பு படம்)

Cluster Beans in Tamil

கொத்தவரைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை இந்த கட்டுரையில் காணலாம் வாங்க.

கர்ப்பிணி பெண்கள்

கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் இந்த கொத்தவரங்காய்க்கு உள்ளது.

Cluster Beans in Tamil


100 கிராம் கொத்தவரங்காயில் பின்வரும் ஊட்டச்சத்துகள் உள்ளன :

தண்ணீர்: 81 கிராம்

கலோரிகள்: 16 கிலோகலோரி

புரதம்: 3.2 கிராம்

கார்போஹைட்ரேட்டுகள்: 10.8 கிராம்

கொழுப்பு: 1.4 கிராம்

கால்சியம்: 57 மிகி (தினசரி மதிப்பில் 6%)

இரும்பு: 4.5 மிகி (தினசரி மதிப்பில் 25%)

வைட்டமின் ஏ: 65.31 IU (தினசரி மதிப்பில் 3%)

வைட்டமின் சி: 49 மிகி (தினசரி மதிப்பில் 55%)

இனி இதன் நன்மைகளை பார்ப்போம்

Cluster Beans in Tamil


உடல் எடை

கொத்தவரங்காய் உணவின் அளவை குறிப்பிடும் கலோரி அளவு குறைவாக இருந்தாலும், உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக கொண்டிருக்கும் உணவாக இருக்கிறது. உடல் எடையை வெகு விரைவில் குறைக்க விரும்புபவர்கள் உணவில் கொத்தவரங்காய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரத்தச் சோகை குணமாக

இரத்தச் சோகை உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கும் உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடுகளால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இரத்தச் சோகை இருப்பவர்கள் கொத்தவரங்காயை அதிகம் சாப்பிடுவதால் இரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு வருகிறது.

Cluster Beans in Tamil


நார்ச்சத்து

நாம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது மிகவும் அவசியம். நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் கொத்தவரங்காய் அதிகளவு புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

நோய் எதிர்ப்பு திறன்

அன்றாடம் நாம் வெளியில் செல்லும் போது பல வகையான நோய் கிருமிகளின் தாக்குதல்களை நாம் எதிர்கொள்கிறோம். இத்தகைய கிருமிகளால் நமக்கு நோய்கள் ஏற்படாமல் காப்பது நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறனாகும். கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Cluster Beans in Tamil


சரும நலன்

நமது சருமம் எனப்படும் வெளிப்புற தோல் நமது உடலை பாதுகாப்பதோடு, நமக்கு அழகிய தோற்றத்தையும் தருகிறது. கொத்தவரங்காய் சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது. கொத்தவரங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதி பொருட்கள் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்குகின்றன. அதோடு முகத்தில் தோன்றுகின்ற கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கல்

ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளது. இப்படிப்பட்டவர்கள் தினமும் உணவில் கொத்தவரங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

Cluster Beans in Tamil


பற்கள் ஆரோக்கியம்

பற்கள், எலும்புகள் உடலுக்கு கால்சியம் சக்தி அவசியமாகிறது. இந்த கால்சியம் சக்தி தான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது. கொத்தவரங்காயில் கால்சியம் சக்தி உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கொத்தவரங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.

இதய ஆரோக்கியம்

இதய நோய்கள் இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். கொத்தவரங்காய் இதயத்திற்கு நன்மையளிக்கிறது. கொத்தவரங்காயை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

Cluster Beans in Tamil

மன அழுத்தம்

பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் எதிலும் அவசரத்தன்மை அதிகமிருப்பதால் சிலருக்கு பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. கொத்தவரங்காயில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. எனவே கொத்தவரங்காய் அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.

Updated On: 9 Jan 2024 1:56 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு