/* */

சேலம் மாநகராட்சி மேயர் மருமகள் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக புகார்

சேலம் மாநகராட்சி மேயர் மருமகள் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக புகார் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சி மேயர் மருமகள் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக புகார்
X

புகார் கூறிய சேலம் மாநகராட்சி மேயர் மருமகள் குடும்பத்தினர்.

சேலம் மாநகராட்சியின் மேயரின் மருமகள் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம் மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த ராமசந்திரன் உள்ளார். இவருடைய வீடு கோரிமேடு பகுதியில் அமைந்துள்ளது. இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும் சுதர்சனம் பாபு என்ற மகனும், சுமித்ரா என்ற மகளும் உள்ளனர்.

இவருடைய மகன் சுதர்சன் பாபுவிற்கு திருமணமாகி சுதா என்ற மனைவி உள்ளார். இருவரும் சின்னகொல்லப்பட்டியில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு இடையே இரு ஆண்டுகளுக்கு மேலாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சுதாவிற்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமானதால் சுதா உடனடியாக சேலம் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.அப்போது உடனடியாக சேலம் மாநகராட்சி மேயர் ராமசந்திரன் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் பேசினார். இந்த நிலையில் சுதா இறப்பில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்கள் மகள் சுதாவை சுதர்சனமும் அவருடைய மாமனார், மாமியாரும் பட்டினி போட்டு கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் மகளை தங்களிடம் அனுப்பியிருந்தால் தாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம் என கதறினார்கள். சுதாவின் இறப்பிற்கு சுதர்சனமும் வரவில்லையாம். அவருடைய தாயும் வரவில்லையாம். மேலும் விடுதியில் உள்ள 8ஆம் வகுப்பு படிக்கும் மகளை அனுப்பவில்லை என குற்றம்சாட்டினர். எனவே முறையான விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், "சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் ஆகிய எனக்கு சுதர்சன் பாபு என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் நான் இருந்தபோது எனது மருமகள் இறந்த செய்தி எனக்கு கிடைத்தது. உடனடியாக நான் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தேன் அங்கிருந்த மருத்துவர்கள் எனது மருமகள் இறந்ததை உறுதி செய்து என்னிடம் கூறினார்கள்.

பின்னர் சடலத்தை இல்லத்திற்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்து வந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி வந்ததது. அதில் எனது மருமகளுடைய தம்பி மற்றும் அவரது உறவினர்கள் என்னை பற்றியும் எனது குடும்பத்தை பற்றியும் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தவறான தகவலை பேட்டி தந்ததாக தெரியவந்தது. ஆனால் நான் எனது மகன் திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் தான் அவர்களை பார்த்து கொண்டேன். மேற்படி எனது மருமகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது சேலம் தனியார் மருத்துவமனையில் (எஸ்.கே.எஸ்) அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும் அந்த பெண்ணுக்கு வெற்றிலை பாக்கு (தலை புகையிலை) பழக்கம் இருந்து வந்தது. இதனால் உடல் நலம் கெட்டு நலிவடைந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இவ்வாறு இருந்து வந்த நிலையில், நானும் பொதுவாழ்வில் இருப்பதால் தனியாகவே இருந்து வந்தேன். எனது மருமகளின் குடும்பத்தினர் எனது பொது வாழ்விற்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான செய்தி பரப்புகிறார்கள். இதை பொருத்த வரை எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்புக்கு நானும் எனது குடும்பமும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 1 Feb 2024 2:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா