/* */

கைலாசாவிலும் கசமுசா? வெளிநாட்டு பெண்ணிடம் 'நித்தி' சேட்டை என புகார்

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது, வெளிநாட்டு பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்து, பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

HIGHLIGHTS

கைலாசாவிலும் கசமுசா? வெளிநாட்டு பெண்ணிடம் நித்தி சேட்டை என புகார்
X

சாமியார் நித்தியானந்தா. 

ஆன்மிகத்துக்கு பேர்போன திருவண்ணாமலையை சேர்ந்தவர், சாமியார் நித்தியானந்தா. பெங்களூர் அருகே பிடதி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து, சீடர்களுடன் இருந்தார். நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட பிரபலங்கள், இவரது சீடர்களாகினர். உலகின் பல பகுதிகளில், தனது ஆசிரம கிளைகளை தொடங்கினார். வெளி நாட்டினரும் நித்தியானந்தாவை தேடி வந்தனர்.

எப்போதும் பெண்களுடன் நித்தியானந்தா வலம் வரும் காட்சிகள் , சமூக வலைதளங்களில் வெளி வந்து கொண்டிருந்த நிலையில், நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் மீது கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடத் தொடங்கியதும், பெண் சிஷ்யர்களுடன் நித்தியானந்தா மாயமானார்.

பின்னர், சமூகவலைதளங்கள் வாயிலாக பேசிய நித்தியானந்தா, தாம் கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி, பரபரப்பை பற்ற வைத்தார். தனிக்கொடி, தனி நாணயம் என்றெல்லாம் கூறி, எப்போதும் மீடியா வெளிச்சத்தில் இருந்து வந்த நித்தியானந்தா, சமீப காலமாக கப்சிப் என்று இருந்தார்.


இச்சூழலில், மீண்டும் நித்தியானந்தாவின் பெயர், சர்ச்சைகளில் சிக்கத் தொடங்கி இருக்கின்றன. கைலாச என்ற இடத்தில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர், நித்தியானந்தா மீது புகார் அளித்திருக்கிறார். சாரா லாண்டரி என்ற அந்த பெண், பெங்களூருவில் உள்ள பிடதி போலீசாருக்கு இமெயில் மூலமாக, இந்த புகாரை அனுப்பி உள்ளார்.

அந்த புகாரில், கைலாசவில், நித்தியானந்தாவும் அவரது சீடர்களும் பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும், தனக்கும் பாலியல் தொல்லையை நித்யானந்தா அளித்ததாக கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள போலீசார், இ-மெயில் புகார்களை ஏற்க முடியாது. எனினும், எந்தவித பயமும் இல்லாமல், இந்தியாவின் ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது, மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது, பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Updated On: 25 March 2022 12:16 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு