விஜய் டிவி தீனா கட்டிய பிரம்மாண்ட வீடு!
விஜய் டிவி கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் தீனா தனது சொந்த ஊரில் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது
HIGHLIGHTS

விஜய் டிவி கலக்கப் போவது யாரு புகழ் தீனா தனது சொந்த வீட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புதிதாக கட்டிய வீட்டின் புகைப்படத்தை பகிர்ந்து இது தனது கனவு இல்லம் என கூறியிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியிலிருந்து உருவாக்கப்பட்ட கலைஞர்கள் உலகம் முழுக்க பல்வேறு வகையில் கலை நிகழ்ச்சிகள் மூலமும், சினிமாவில் நடித்தும் புகழ் பெற்று வருகின்றனர்.
விஜய் டிவியிலிருந்து வந்து சினிமாவில் பெரிய ஆளாகிய பட்டியலில் சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோரைத் தொடர்ந்து தீனாவும் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார். கைதி திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் தீனா.
பிராங்க் கால் செய்து இவர் கலாய்க்காத செலிபிரிட்டிகள் இல்லை எனும் சொல்லும் அளவுக்கு விஜய் டிவியில் இருக்கும் செலிபிரிட்டிகளை கலாய்த்து தொங்க விட்டிருக்கிறார்.
காமெடியனாக துவங்கி பயணம் தற்போது அவரை ஹீரோவாக்கி அழகு பார்த்து வருகிறது. புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் தீனா. தற்போது அவரது சொந்த ஊரில் வீட்டைக் கட்டி குடியேறியிருக்கிறார். அவரது வீடு பார்ப்பதற்கு பிரம்மாண்டமாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது.