/* */

'மொச்சக் கொட்ட பல்லழகி தான் ரஞ்சிதமா?' - வாரிசு படப் பாடலை எகிறி அடிக்கும் நெட்டிசன்கள்

Varisu Ranjithame Song Copy Troll -'மொச்சக் கொட்ட பல்லழகி தான் ரஞ்சிதமா?' - வாரிசு படப் பாடலை எகிறி அடிக்கும் நெட்டிசன்கள்

HIGHLIGHTS

மொச்சக் கொட்ட பல்லழகி தான் ரஞ்சிதமா? - வாரிசு படப் பாடலை எகிறி அடிக்கும் நெட்டிசன்கள்
X

Varisu Ranjithame Song Copy Troll - நெட்டிசன்கள் விமர்சனத்தில் சிக்கிய ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடல்.

Varisu Ranjithame Song Copy Troll - பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி உள்ள நிலையில், அது பழைய பாடலின் காப்பி எனவும், தெலுங்கில் கலக்கி வரும் இசையமைப்பாளர் தமன், தமிழுக்கு மட்டும் காபி சாங்கை கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


தமிழ் திரை உலகில் எம்ஜிஆர், ரஜினிகாந்த் வரிசையில் வைத்து பார்க்கப்படுபவர் விஜய். இளைய தளபதியாக அறிமுகமாகி தற்போது தளபதி என அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் உருவ கேலி, தொடர் தோல்விகள் என துவண்டு போயிருந்த விஜய், 'பூவே உனக்காக' படத்திற்கு பிறகு தமிழ் திரை உலகின் முன்னணி நாயகனாக உருவானார். அதற்கு அவரது தந்தையின் பங்கும் அதிகம்.

பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களில் சாக்லேட் பாயாக நடித்து ரசிகைகள் மனதில் இடம் பிடித்தவர். அடுத்து திருமலை, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட ஆக்சன் படங்களில் புதிய அவதாரம் எடுத்து தற்போதைய நிலையில், தமிழகத்தின் நம்பர் ஒன் வசூல் நாயகனாக திகழ்கிறார்.

இந்நிலையில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே அவர் நடித்துள்ள 'வாரிசு' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'ரஞ்சிதமே' நேற்று யூடியூப்பில் வெளியானது. தமன் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.


இயக்குனர் வம்சி இயக்கியுள்ள 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை நடிகர் விஜய்யுடன், மானசி எம்எம் பாடியிருக்கிறார். பாடலை விவேக் எழுத, யூட்யூபில் மில்லியன் கணக்கானோர் பாடலை பார்த்து ரசித்து வருகின்றனர். விஜய்யின் குரல் நடனம் பாடலுக்கு வலு சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில் இந்தப் பாடல் ஒரு பழைய படத்தில் இடம் பெற்ற பாடலின் காப்பி என நெட்டிசன்கள், கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


பாடலில் இடையில் வரும் மெட்டுக்கள் கடந்த காலங்களில் கிராமப்புறங்களில் மெகா ஹிட் அடித்த 'மொச்ச கொட்ட பல்லழகி' பாடலின் மெட்டு எனவும், அதை தெரியாமல் சுட்டு இசையமைப்பாளர் தமன் தனது பாடலில் பயன்படுத்தியிருப்பதாக விமர்சித்து வருகின்றனர். தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள தமன், தமிழில் 'பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

அவருடன் நடித்த நடிகர்கள் நடிகர்களாகவே தொடரும் நிலையில், தமன் மட்டும் இசை பாதையை தேர்ந்தெடுத்து தெலுங்கில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். அதே நேரத்தில் தமிழில் அதுவும் நடிகர் விஜய்க்கு இசையமைத்திருக்கும் அவர் ஹிட் பாடல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதற்காக தமிழ் பாடலையே சுட்டு மெட்டமைப்பதா என, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Nov 2022 9:26 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...