/* */

பாண்டியன் ஸ்டோர் வீட்டருகே வடிவேலுவின் காமெடி ஸ்பாட்டுகள்.. முழுவிபரம்

Pandian Stores Shooting spot real location details - பாண்டியன் ஸ்டோர் சீரியல் எடுக்கப்படும் இடத்தின் அருகே வடிவேலு நடித்த காமெடி ஸ்பாட்டுகளை ஹேமா டைரி யூடியூப் சேனலில் முழு விபரங்களையும் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

பாண்டியன் ஸ்டோர் வீட்டருகே வடிவேலுவின் காமெடி ஸ்பாட்டுகள்.. முழுவிபரம்
X

Pandian Stores Shooting spot real location details - பாண்டியன் ஸ்டோர் சீரியல் எடுக்கப்படும் இடத்தின் அருகே வடிவேலு நடித்த காமெடி ஸ்பாட்டுகளை ஹேமா டைரி யூடியூப் சேனலில் முழு விபரங்களையும் தெரிவித்துள்ளனர்.

பிரபல தொலைக்காட்சியான விஜ;ய்யில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் கடந்த 2018 ம் ஆண்டு முதல் ஒளிபரபரப்பட்டு வருகிறது. மேலும் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த தொடரில் ஷீலாவுடன் சுஜிதா, ஸ்டாலின் , வி.ஜே.சித்ரா , குமரன் தங்கராஜன் , ஹேமா ராஜ்குமார், வெங்கட் ரெங்கநாதன் , சரவண விக்ரம் மற்றும் வி.ஜே.தீபிகா லட்சுமணபாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் வி.ஜே.சித்ராவின் மறைவுக்குப் பின், அவரது "முல்லை" பாத்திரத்திற்குப் பதிலாக காவ்யாவும், அதைத் தொடர்ந்து லாவண்யாவும் நடித்தனர். மேலும், விஜே தீபிகாவின் "ஐஷு" கதாபாத்திரத்தில் முதலில் வைஷாலி நடித்தார். தற்போது சாய் காயத்ரிக்கு பதிலாக நடிக்கிறார்.

பாண்டியனின் நான்கு மகன்கள் (சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், கதிரவன் மற்றும் ஜெயக்கண்ணன்) அவர்களின் ஊரான குன்றக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற புகழ்பெற்ற மளிகைக் கடையை நடத்தி வருகின்றனர் . பாண்டியன் குடும்பத்தின் மூத்த மகனான சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் ஆகிய மூன்று குழந்தை சகோதரர்களை கவனித்துக் கொள்ள போராடுகிறார். மீனாட்சியாக (மீனா), ஜனார்த்தனனின் மூத்த மகள் ஜீவாவின் மனைவியாக, கயலின் அம்மாவாக ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார்.

Around Pandian Stores House

இவர் ஹேமா டைரி என்ற டியூப் சேனல் மூலம் பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் நடைபெறும் இடத்தின் விபரங்களையும் வடிவேலு காமெடியாக நடித்த ஷூட்டிங் ஸ்பாட்டுகளையும் முழுவிபரத்துடன் விளக்கியுள்ளார். அந்த வீடியோவில் ஹேமா அவரது வீட்டில் துவங்கி ஷூட்டிங் ஸ்பாட் வரை தெரிவித்துள்ளார்.

அதில், வடிவேலு போலீஸ் உடையை கழற்றி எடுக்கப்பட்ட 'காட்டாத காட்டாத' என்ற வசனம் பேசிய வீட்டையே காண்பித்துள்ளார். இந்த வீட்டிற்கு ஒரே மாதிரியாக இரண்டு பக்கங்களிலும் தோற்றம் இருப்பதையும் ஹேமா விளக்கியுள்ளார். மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்காக கடை வைக்கப்பட்டிருப்பதும் வடிவேலு நடித்த இடமே.

hema's diary today youtube

அதே ஷூட்டிங் வளாகத்திலேயே சின்னச்சின்னதாக அறைகளும் கட்டப்பட்டிருப்பதை பற்றியும் அவர் விவரித்துள்ளார். அந்த அறைகள் அனைத்தும் பல்வேறு சீரியல்கள் ஷூட்டிங் நடைபெறும் போதெல்லாம் இங்கு தான் சாப்பாடு பரிமாறுதல் உள்ளிட்ட வேலைகள் நடக்குமாம். இதைத்தவிர நீதிமன்றம், காவல்நிலைய செட்டப்புகளையும் அவர் காண்பித்து அந்த வீடியோவில் விவரித்திருப்பார்.

இது தற்போது சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

Updated On: 10 Dec 2022 10:18 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்