/* */

LIVE சூப்பர் சிங்கர் சீசன் 9 வின்னர் யாரு? கலக்கிய அருணா, பிரசன்னா!

Vijay TV Super Singer 9-சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகிய 5 பேரும் மோத இருக்கின்றனர்.

HIGHLIGHTS

LIVE சூப்பர் சிங்கர் சீசன் 9 வின்னர் யாரு? கலக்கிய அருணா, பிரசன்னா!
X

LIVE சூப்பர் சிங்கர் சீசன் 9 வின்னர் இவர்தான்

Vijay TV Super Singer 9 -விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சி இந்த சூப்பர் சிங்கர். உலகம் முழுக்க இருந்து இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருக்காங்க. சீசன் 9 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி, இப்போது இறுதிச் சுற்றை நெருங்கியிருக்கிறது. இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு சூப்பர் சிங்கர் ரசிகர்களிடையே நிலவுகிறது.

25 ஜூன் 2023 இன்றைய தினம் நேரு ஸ்டேடியத்தில் நேரலையாக நடைபெற இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

How To Vote Super Singer 9 ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பது எப்படி?

இறுதிச்சுற்று போட்டியாளர்கள்

அபிஜித்

அருணா

பூஜா

பிரியா

பிரசன்னா

ஆகிய 5 பேரும் சீனியர் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளனர். இந்த சுற்றில் மோதும் இந்த 5 பேரில் ஒருவருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் கிடைக்கும்.

யாரு ஜெயிக்கப்போறாங்க என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முன்னதாக நடந்த ப்ரீ ஃபைனல்ஸ்ல வேற லெவல் போட்டி போட்டாங்க 5 பேரும். ஒவ்வொருத்தருக்கும் தனித்துவமான குரல்கள், சிறப்பான திறன்கள் என அனைவரும் இறுதிப் போட்டியில் வெல்ல தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.


அபிஜித்

சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக களமிறங்கிய அபிஜித், அர்ஜூனரு வில்லு பாடலைப் பாடி அசத்தினார்.

பூஜா

சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கினார் பூஜா. இவர், தனது இனிமையான குரலால் அசத்தலான ஒரு பாடலைப் பாடி ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

பிரசன்னா

சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் மூன்றாவது போட்டியாளராக களமிறங்கி பாடினார் பிரசன்னா. இவர், தனது கம்பீரக் குரலால் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் பாடலைப் பாடி அரங்கை அமர்க்களப்படுத்தினார்.

தொடர்ந்து இரண்டாவது ரவுண்டும் தொடங்கியது. இதில் கொஞ்சம் வித்தியாசமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடினர் போட்டியாளர்கள்.

அபிஜித், பூஜா, பிரசன்னா, பிரியா, அருணா என அனைவரும் தங்களது வித்தியாசமான அணுகுமுறைகளால் ரசிகர்களையும் நடுவர்களையும் விருந்தினராக வந்திருந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜையும் அசத்தினர். இறுதியில் அந்த நேரமும் வந்தது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளியான நட்பு குறித்த பாடலான மக்கா மக்கா மக்கா பாடலைப் பாடி அசத்தினர்.

மூன்றாவது இடம்

பிரசன்னா

விஜய் டிவி வழங்கும் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

முதல் இடம்

அருணா

சூப்பர் சிங்கர் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார். சூப்பர் சிங்கர் சீசன் 9 ன் வெற்றியாளர் அருணா ஆன்மீக பாடல்களைப் பாடியே மக்களை அசத்தியுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 March 2024 10:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’