/* */

தமிழர்களின் எதிர்ப்பை சந்திக்கப்போகும் ரஜினிகாந்த்! இதுதான் விசயம்!

தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஷ்வரன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது தான் தற்போதையை டிரெண்டிங் டாபிக். அவரைச் சந்திக்க வந்த வெங்கடேஷ்வரன், கூடவே ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துச் சென்றுள்ளார்.

HIGHLIGHTS

தமிழர்களின் எதிர்ப்பை சந்திக்கப்போகும் ரஜினிகாந்த்! இதுதான் விசயம்!
X

இலங்கையின் சுற்றுலா துறைக்கு உதவ ரஜினிகாந்த் முடிவு செய்யும் பட்சத்தில் தமிழர்களிடம் மிகப் பெரிய எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்திப்பார் என பலரும் கருதுகின்றனர். தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு தேசத்துக்கு தமிழர்களால் வாழ்ந்த நடிகர் ரஜினிகாந்த் உதவக் கூடாது என ஆங்காங்கே எதிர்ப்பு குரல் எழும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஷ்வரன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது தான் தற்போதையை டிரெண்டிங் டாபிக். அவரைச் சந்திக்க வந்த வெங்கடேஷ்வரன், கூடவே ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துச் சென்றுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் அவரது மகள் இயக்கும் லால் சலாம் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியும், லால்சலாம் படம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமும் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து த செ ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்காததால் அதனை தலைவர் 170 என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் இலங்கைக்கு தூதராக செயல்பட இருக்கிறார் என செய்தி பரவியது.

தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஷ்வரன் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அவர்களிடையேயான உரையாடலில் பல விசயங்கள் பேசப்பட்டிருந்தாலும் முக்கியமாக சுற்றுலாத் துறையை மேம்படுத்த ரஜினிகாந்தை அழைப்பு விடுத்துள்ளார் என்பதே ஹைலைட்.

இராமாயணா டிரையல் எனும் பெயரில் இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையெல்லாம் சுற்றிக்காட்ட முடிவு செய்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தூதராக ரஜினிகாந்தை நியமிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் ரஜினிகாந்த் இதுவரை எந்த முடிவையும் சொல்லவில்லை என்று கூறுகிறார்கள். இருந்தாலும் ரஜினிகாந்த் தமிழர்களுக்கு விரோதமாக செயல்படக்கூடாது என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 31 May 2023 11:05 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  6. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  7. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  8. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  9. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: 11 அதிகாரிகள் மீது...