சினேகா-பிரசன்னாவின் மகள் பிறந்தநாள்.. நெகிழ்ச்சியான பதிவு வைரல்

sneha cute photo with her daughter - சினேகா-பிரசன்னா மகளின் பிறந்த நாள் கொண்டாடிய பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சினேகா-பிரசன்னாவின் மகள் பிறந்தநாள்.. நெகிழ்ச்சியான பதிவு வைரல்
X

தனது மகளுடன் சினேகா.

sneha cute photo with her daughter - சினேகா-பிரசன்னா மகளின் பிறந்த நாள் கொண்டாடிய பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் 90 காலகட்டங்களில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவருடைய அழகிய சிரிப்பு ரசிகர்களிடையே பெரிதும் கவர்ந்து வந்தது. இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இவரை புன்னகை அரசி என்றே அழைத்து வந்தனர். கடந்த 2012ம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார. இவர்களின் திருமணத்திற்குப் பின், இருவருமே சினிமாவில் சிறந்த ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. சினேகா சில ஆண்டுகளுக்குப்பின், தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் சில திரைப்படங்களில் சினேகா நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என இரு சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். நடிகர் பிரசன்னாவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என தன் வாழ்க்கையை வாழ்ந்து வரும் சினேகா, தனது கணவரும், நடிகருமான பிரசன்னாவிடம் கூறி மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அவரும் சிநேகாவிற்கு பட வாய்ப்புகளை வாங்கிக் கொடுக்க தனது நெருங்கிய சினிமா வட்டார நண்பர்களிடம் அணுகி வருகிறாராம்.


திருமணத்திற்குப்பின் நடிகை சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தையைத் தொடர்ந்துபெண் குழந்தையும் அவர்களுக்கு பிறந்தது. அந்த வகையில் இந்த தம்பதியினர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சினேகா பிரசன்னா தம்பதியினர் தங்களுடைய குழந்தைகளின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் நேற்று சினேகாவின் மகள் ஆத்யந்தா பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.


sneha prasanna daughter

இந்த நிலையில் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும் வகையில் பிரசன்னா - சினேகா தம்பதியினர் இன்றிலிருந்து கொஞ்ச நாளில் நீ வளர்ந்து விடலாம்! ஆனால் என் இதயம் எப்பொழுதும் உன்னுடன் இருக்கும் இன்றிலிருந்து ஒரு நாள் நீ பெரிய பெண்ணாக வளரலாம்! ஆனால் எப்பொழுதும் என் குழந்தையாக இருப்பாய். உன் அரவணைப்பு, உன் முத்தங்கள், உன் புன்னகை, உன் கருணை, என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தம் சேர்க்கிறது. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.


மேலும் இதனை அடுத்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் சினேகா சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.

Updated On: 25 Jan 2023 7:56 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...