/* */

ஷங்கர் இயக்கத்தில் 'வேள்பாரி' நாவல் படமாகிறதா?

Shankar Velpari Movie -இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை என ஆசிரியர் வெங்கடேசன் கூறியுள்ளார்

HIGHLIGHTS

ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி நாவல் படமாகிறதா?
X

Shankar Velpari Movie -பல பெரிய நடிகர்களும், பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக படமாக்க முயன்றும் முடியாமல் போன கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப்படம் ரூ.500 கோடிக்கும் மேல் உலக அளவில் வசூலித்து பெரும் சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக நாவல்களை படமாக்கும் முயற்சிகள் தீவிரமெடுத்துள்ளன.

அந்த வகையில் ஆனந்த விகடனில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'வீரயுக வேள்பாரி' என்றநாவலை படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் 'வேள்பாரி' நாவலை படமாக்க உள்ளதாகவும், அதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வமற்ற இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.


மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்துவரும் 14 இனக் குழுக்களுக்கு தலைமையாக வேளிர் குலம். அதன் தலைவன் பாரி. இவனது ராஜ்ஜியம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பறம்பு மலையில் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் மூவேந்தர்கள் சமவெளியில் ஆட்சி செய்கிறார்கள். வேளிர் குலத்தின் வசம் உள்ள தேவவாக்கு விலங்கை மூவேந்தர்களில் ஒருவனான குலசேகர பாண்டியன் அடைய நினைக்கிறான். அதில் அவனது துறைமுகம் தீக்கிரையாகிறது. பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.

பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. சேர, சோழ மன்னர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு, பறம்பு மலையை முற்றுகையிடுகிறான் பாண்டியன். இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தினர். பாரியை மலையைவிட்டு கீழே வரச்செய்ய பாரியின் நண்பனான நீலனையும் பிடித்துவைக்கின்றனர். பின்னர் பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து சாதிக்க முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை.

மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளதாகவும், இதன் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து நடிகர் சூர்யா 'விருமன்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், 'எழுத்தாளர் சு.வெங்கடேசுடன் ஒரு சுவாரஸ்ய பயணம் தொடங்கியிருக்கிறோம்' என்று சூசகமாக தெரிவித்திருந்தார். படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் நடிக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

படம் மூன்று பாகங்களாக உருவாக உள்ளதாகவும், பான் இந்தியா முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 April 2024 5:44 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...