/* */

ரேசில் முந்திய குதிரை 'சர்தார்'... பிந்திய குதிரையாய் 'பிரின்ஸ்'..!

Karthi Sardar Movie -தீபாவளிக்குவெளியான திரைப்படங்களில் நடிகர் கார்த்தியின் 'சர்தார்' ஹிட், சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' அவுட் என்கிறார்கள்.

HIGHLIGHTS

ரேசில் முந்திய குதிரை சர்தார்...  பிந்திய குதிரையாய் பிரின்ஸ்..!
X
சர்தார் மற்றும் பிரின்ஸ் பட போஸ்டர்கள்.

Karthi Sardar Movie -இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பது அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளியாக ஆனது. தீபாவளி கொண்டாட்டத்தோடு, ரசிகர்கள் தங்களது பிரியமுள்ள நாயகர்களின் புதிய படங்களையும் கொண்டாடத் தவறவில்லை.

தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் நடிகர் கார்த்தியின் 'சர்தார்' படமும் நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படமும் தீபாவளிக்கு முன்பிருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது 21ம் தேதியே திரையரங்குகளில் 'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படங்கள் வெளியாகின.

தீபாவளித் திரைப்படங்கள் வெளியான திரையரங்கங்களுக்கு எதிரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்வை வெளிப்படுத்தி அதகளப்படுத்தினர். ஆனால், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு முதல் ஐந்து நாட்களில் நடிகர் கார்த்தியின் 'சர்தார்' திரைப்படம் வசூலில் சாதனை படைத்து நிமிர்ந்து நின்றது.


'சர்தார்' படம் உலகம் முழுவதும் ஆயிரத்து 600 திரையரங்குகளிலும், 'பிரின்ஸ்' உலகம் முழுவதும் ஆயிரத்து 400 திரையரங்குகளிலும் வெளியானது. இந்தநிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்திற்கு எப்போதும் போல இந்தமுறையும் சிறப்பான ஓப்பனிங் கிடைத்தது. தெலுங்கில் வெளியான 'ஜதி ரத்னலு' மூலம் கவனிக்க வைத்த அனுதீப், 'பிரின்ஸ்' படத்தை இயக்கியதால், தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாளில் கிடைத்த தரமான ஓப்பனிங்கை, 'பிரின்ஸ்' தக்கவைத்துக்கொள்ள முடியாமல் பாக்ஸ் ஆபீஸில் திணறியுள்ளது. இதுவரை 5 நாட்களில் ரூ. 35 கோடி வரை மட்டும் வசூலித்து ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 'டாக்டர்', 'டான்' என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன், 'பிரின்ஸ்' படத்தால் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டார் என்கிறார்கள்.


ஆனால், நடிகர் கார்த்தியின் 'சர்தார்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையைக் கிளப்பியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்துடன் ஒப்பிடுகையில், 'சர்தார்' படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாமல்தான் வெளியானது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள 'சர்தார்' படத்தில், ரா ஆபீஸர், போலீஸ் என இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார் நடிகர் கார்த்தி. ஆக்‌ஷன் ஜானரில் பக்கா கமர்ஷியலாக இருந்தாலும், திரைக்கதை, மேக்கிங் சூப்பர் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இதுபோலவே, தொடர்ந்து பாசிட்டிவாகக் கிடைத்த விமர்சனங்கள், 'சர்தார்' படத்திற்கு பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல ரிசல்ட் கொடுத்துள்ளது. இதுவரை இந்தப் படம் ரூ. 50 கோடி வசூலை கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, 2019ல் நடிகர் கார்த்தியின் 'கைதி'யும், நடிகர் விஜய்யின் 'பிகில்' திரைப்படமும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. இதில், விஜய்யின் 'பிகில்' படத்திற்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், நடிகர் கார்த்தியின் 'கைதி' சத்தமே இல்லாமல் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. வசூலிலும் 'கைதி' படம் தரமான சாதனையாக அதகளம் செய்தது.

இந்தாண்டு தீபாவளிக்கு, அதேபோன்று 'சர்தார்' படத்தின் மூலம் அமர்க்களமான மாஸ் காட்டியுள்ளார் கார்த்தி. இந்த ஆண்டு நடிகர் கார்த்திக்கு ராசியான ஆண்டு எனலாம். இந்த ஆண்டு மட்டும் 'விருமன்', 'பொன்னியின் செல்வன்' என ஏற்கெனவே இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்துள்ள கார்த்தி, இப்போது 'சர்தார்' படத்திலும் தன்னை மினிமம் கேரண்டி சூப்பர் ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்துடன் மோதி 'சர்தார்' வெற்றிப் பெற்றிருப்பது, திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதனால், நடிகர் கார்த்தியின் அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் உள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Oct 2022 10:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...