/* */

மும்பையில் வீடு வாங்கிய சமந்தா? விலை இத்தனை கோடியா!

ஷூட்டிங் போய் வருவதற்காக இத்தனை கோடி ரூபாயில் வீடா என வாயைப் பிளக்கின்றனர் ரசிகர்கள்.

HIGHLIGHTS

மும்பையில் வீடு வாங்கிய சமந்தா? விலை இத்தனை கோடியா!
X

நடிகை சமந்தா புகைப்படம்

மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கிறாராம்.

அரிய வகை நோயான மயோசிட்டிஸால் பாதிக்கப்பட்டாலும் இடையிடையில் அவர் கமிட் ஆன படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா,. சில விளம்பரப்படங்களிலும் நடித்தார். ஆனால் உடல் நலம் நன்றாக இல்லை என கூறி பல பட வாய்ப்புகளையும் விளம்பர வாய்ப்புகளையும் நிராகரித்திருக்கிறார். அதனால் அவருக்கு 20 கோடி ரூபாய் அளவுக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம்.

சமந்தா நாளடைவில் தான் குணமாகி விடுவேன் என்றும் விரைவில் நடிக்க வருவேன் என்றும் மிகத் தீவிரமாக நம்புகிறார். அவரின் நம்பிக்கையே அவரது நோயை மிக சீக்கிரமாக குணப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சமந்தா மும்பையில் வீடு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹைதராபாத்தில் ஏற்கனவே சொந்த வீட்டில் குடியிருக்கும் சமந்தா, மும்பைக்கு ஷூட்டிங் செல்கையில் தங்குவதற்காக 3 BHK வீடு ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறாராம்.

சமந்தா வாங்கிய வீட்டில் விலை கிட்டத்தட்ட 15 கோடி ரூபாயாம். ஷூட்டிங் போய் வருவதற்காக இத்தனை கோடி ரூபாயில் வீடா என வாயைப் பிளக்கின்றனர் ரசிகர்கள். இனி ஹிந்தி படங்களிலும் அதிகம் தோன்ற இருக்கிறார் சமந்தா. வரும் 2024 முதல் நிறைய ஹிந்தி படங்களில் கமிட் ஆவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

Updated On: 9 Feb 2023 7:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...