/* */

விஜய் நடிக்கும் படத்துக்கு இங்கிலீஷ் நேம் சர்ச்சை

விஜய் நடிக்கும் படத்துக்கு இங்கிலீஷ் நேம் சர்ச்சை
X

சன் டிவி குரூப் ஆரம்பிச்ச வச்ச சர்ச்சை ஏகப்பட்ட ஊடகங்களுக்கு தற்போது கண்டெண்ட் ஆகி போச்சு. ஆம். விஜய் நடிக்கும் படத்துக்கு இங்கிலீஷ் நேம் வைச்சது குறித்து வாத- பிரதி வாதங்கள் தூள் கிளப்புகிறது.. அந்த வகையில் நம்ம இன்ஸ்டாநியூஸ் சினிமா குழுமத்திடம் இந்த சர்ச்சை குறித்து கேட்ட போது அனுப்பி இருக்கும் முதல் தகவல் அறிக்கை ரிப்போர்ட் இதோ உங்களுக்காக

22.7.2006 அன்று திமுக அரசு வெளியிடப்பட்ட அரசாணை எண்.72ன் கீழ் "தமிழ் பெயர் கொண்ட திரைப்படங்களுக்கு முழு கேளிக்கை வரி விலக்கு" அளிக்கப்பட்டது. இந்த வரி விலக்கு தமிழ் பெயர் உள்ள பழைய படங்களுக்கும், காப்பிரைட் வைத்திருக்கும் தமிழ் படங்களுக்கும் அளிக்கப்பட்டது. இந்த வரிவிலக்கால் தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், மட்டுமே முழு பலன்களைப் பெற்றார்கள்.

அதே நேரத்தில் வழக்கமான முறையில் கேளிக்கை வரியைப் பிடித்தம் செய்திருந்தால் அதில் குறிப்பிட்ட தொகை உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். இதனால் ஏற்படும் இழப்பீட்டுத் தொகையை அரசே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் என்றும் அரசு சொல்லியிருந்ததால் திரைப்படங்களின் தயாரிப்புக்கு ஏற்றவாறு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரிவிலக்கு அளித்த தொகையை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது.

இது ஒரு புறமிருக்க.. தமிழ்ப் பெயர்கள் என்று சொல்லிக் கொண்டு அன்றாடம் பயன்படுத்தும் நடைமுறைத் தமிழை வைத்துக் கொண்டு விவாதிக்க ஒரு குரூப் கூடியது.. அந்த டீம் முதலில் கூடி ரஜினியின் சிவாஜி பட டைட்டில் தமிழ் என்று சர்டிபிகேட் கொடுத்த நிலையில் அடுத்து அம்பாசமுத்திரம் அம்பானி, மதராசபட்டினம், தில்லாலங்கடி, பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, எந்திரன், பாஸ் என்ற பாஸ்கரன், மைனா, வ குவார்ட்டர் கட்டிங், சித்து +2, கோட்டி, சிக்குபுக்கு, சிங்கம், பையா, குட்டி, கோவா, சுறா, கொலை கொலையாம் முந்திரிக்கா, மிளகா ஆகிய படங்களுக்கெல்லாம் வரி விலக்கு அளிக்க தொடங்கினாய்ங்க

இதன் பின்னர் பொறுப்புக்கு வந்த அதிமுக அரசு வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் 21.07.2011 தேதியிட்ட அரசாணை எண் 89, கேளிக்கை வரிச்சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கீழ்க்கண்ட தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டது.

(1) அவ்வாறான திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து "U" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

(2) திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

(3) திரைப்படத்தின் தேவையைக் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

(4) திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரி விலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

இந்த அரசாணை வெளிவந்த பிறகும் கூட ஆபாசக் காட்சிகள் நிறைந்த - வன்முறை வெறியாட்டக் காட்சிகள் நிறைந்த பல வணிக ரீதியான திரைப்படங்களுக்கு தமிழ் நாடு அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது. இதன் மூலம், மக்கள் நலப் பணிகளுக்கு தேவைப்படும் கணிசமான அரசு வருவாயை தமிழ் நாடு அரசு இழந்துள்ளது. கேளிக்கை வரி விலக்கு பெறுவதற்கு வேண்டிய - அரசு நிர்ணயித்துள்ள மேற்கண்ட வரையறைகள் இல்லா விட்டாலும், ஆட்சியாளர்களுக்கு மிகவும் வேண்டிய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குனர்கள் வெளியிடும் படங்களுக்கும், ஆட்சியாளர்களை சரியான வகையில் "கவனித்துக்" கொள்ளும் நபர்கள் தயாரிக்கும் படங்களுக்கும் இந்த கேளிக்கை வரி விலக்கு முறைகேடாக வழங்கப்பட்டதெல்லாம் தனி எபிசோட்.

இதுக்கிடையிலே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னாள் தமிழக மக்கள் உரிமைக் கழக இணை செயலாளர் புகழேந்தி பொதுநலன் கருதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செஞ்சார். அந்த மனுவில் "சினிமா படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு 22.7.2006-ல் உத்தரவை பிறப்பித்தது. இதன் பின்னர் 4 மாதம் கழித்து மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

பழைய படம், புது படம் எது வேண்டுமானாலும் தமிழ் பெயர் இருந்தால் அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடிப்படையில் 1950-ம் ஆண்டு எடுக்கப்பட்ட "ரத்தக்கண்ணீர்", "மனோகரா" உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் "மன்மதன்", "போக்கிரி" ஆகிய படங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டன.

அரசு உத்தரவு எதிரொலியாக ஜில்லுன்னு ஒரு காதல், தமிழ் எம்.ஏ., எம்டன் மகன் ஆகிய பெயர் கொண்ட படங்கள் வரி விலக்கு பெற வேண்டும் என்பதற்காக "சில்லுன்னு ஒரு காதல்", "கற்றது தமிழ்", "எம்மகன்" என்று தமிழில் பெயரை மாற்றி வைத்து வரி விலக்கை பெற்று விட்டனர். இந்த வரி சலுகை என்பது படங்களிடையே பாரபட்சமாக உள்ளது. பொதுநலன் கருதிதான் வரிச் சலுகை வழங்க வேண்டும். மற்றபடி வரி சலுகை வழங்க சினிமா சட்டத்தில் இடமில்லை.

தமிழ் பெயர் படங்களுக்கு வரிச் சலுகை வழங்குவது தமிழ் வளர்ச்சிக்கோ, சமுதாய வளர்ச்சிக்கோ பயன்படும் வகையில் இல்லை. இவ்வாறு வீணாக வரி விலக்கு அளிப்பதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை கேளிக்கை வரி இழப்பு ஏற்படுகிறது. 2003-2004-ல் மட்டும் ரூ.75 கோடியே 7 ஆயிரம் கேளிக்கை வரி கிடைத்தது. ஆனால் 2006-ம் ஆண்டு இது 16 கோடியே 35 ஆயிரமாக குறைந்து விட்டது. தமிழ் பெயர் என்பதற்காக வரி சலுகை வழங்குவது அரசுக்கு வரி இழப்பு மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே தமிழ் பெயர் கொண்ட படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்."என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.வெங்கட்ராமன் ஆகியோர் தள்ளுபடி செய்தனர். "எந்த படங்களுக்கு வரி சலுகை அளிப்பது, எதற்கு அளிக்க தேவையில்லை என்பதை முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்றும், இதில் கோர்ட்டு தலையிட முடியாது" என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளிச்சிப்புட்டாய்ங்க

இதன் பின்னர் அப்பொழுது ஆங்கிலத்தில் தலைப்பிட்ட குவாட்டர் கட்டிங் என்ற திரைப்படம் 'வ' என்ற ஒரு எழுத்தை தலைப்பாக காட்டி வரிவிலக்கு பெற்றது. இதேபோல மாஸ் என தலைப்பிடப்பட்ட சூர்யாவின் திரைப்படம் ரிலீஸின்போது மாசு என்கிற மாசிலாமணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இதேவேளையில் நல்ல தமிழ் பெயர்களும் தமிழ் சினிமாவில் அதிகரிக்க தொடங்கிய நிலையில், 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வரி விலக்குக்காக சில நிபந்தனைகளுடன் பிரத்தியேக குழு ஒன்று அமைக்கப்பட்டது,

இந்தக் குழுவின் நிபந்தனைகளுக்கு பெரும்பாலான படங்களின் கதை ஒத்துப் போகாததால் வரிவிலக்கு கிடைப்பது கடினமான ஒன்றாக மாறி வந்த காரணத்தால் பெரும்பாலான இயக்குனர்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே பெயரிடத் துவங்கிட்டாய்ங்க. அதே சமயம் நம்ம தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் ஜிஎஸ்டிக்கு முன், ஜிஎஸ்டிக்குப் பின் என இரண்டு கட்டங்களாக பிரித்துக் கொள்ளலாம். .குறிப்பாக ஜிஎஸ்டிக்குப் பின்பு தமிழ்த் திரையுலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் அமலுக்கு வந்த, ஜிஎஸ்டி வரியால் தமிழக அரசு இதுவரை அளித்து வந்த வரிவிலக்கு தொடர வாய்ப்பில்லாமல் போனது. இதனால், தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கதைக்குப் பொருத்தமான ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டும் கலந்தும் டைட்டில்களை படங்களுக்கு வைக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க

Updated On: 23 Jun 2021 2:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...