/* */

'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் இணைந்த மோகன்லால் - ரசிகா்கள் குஷி

Mohanlal and Rajinikanth in Jailer- 'ஜெயிலர்' படத்தில், ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பது, அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்த மோகன்லால் - ரசிகா்கள் குஷி
X

Mohanlal and Rajinikanth in Jailer- ‘ஜெயிலர்’ படத்தில், ரஜினியுடன் மோகன்லால் நடிக்கிறார்.

Jailer Movie Mohanlal First Look, Mohanlal and Rajinikanth in Jailer- நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் இதை உறுதிசெய்யவில்லை.


இந்நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் மோகன்லால் 'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனால், ரஜினி ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில், ரஜினியுடன் மலையாள நடிகர் மம்முட்டி நடித்தார். அதன்பின், ' உன்னைப்போல் ஒருவன்' படத்தில், உலகநாயகன் கமலுடன், மோகன்லால் நடித்தார். இந்த படத்தில், போலீஸ் கமிஷனர் கேரக்டரில் மோகன்லால் மிக சிறப்பான நடிப்பை தந்திருப்பார். அதே போல், நடிகர் விஜய் உடன் ' ஜில்லா' படத்தில், மோகன்லால் நடிப்பும் பாராட்டை பெற்றது. 'காப்பான்' என்ற படத்தில்,சூர்யாவுடன் மோகன்லால் நடித்திருந்தார்.


நடிகர் மோகன்லாலை பொருத்தவரை, கொடுக்கப்பட்ட கேரக்டரை முழுமையாக உள்வாங்கி சிறப்பாக, இயல்பாக நடிக்கும் ஒரு சிறந்த நடிகர். ஏற்கனவே, ரஜினியுடன் மலையாள சினிமாத்துறை சார்ந்த மம்முட்டி நடித்துவிட்ட நிலையில், இந்த முறை, மோகன்லால் ரஜினியுடன் நடிக்கிறார். கமல், விஜய், சூர்யா ஆகியோரை தொடர்ந்து, ரஜினியுடன் மோகன்லால் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 'முத்துவேல் பாண்டியன்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். நெல்சன் திலீப் குமார் டைரக்ட் செய்கிறார். 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஜெயிலர்' படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர். ரஜினியின் 'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் 'ஜெயிலர்' படத்தில் இணைந்துள்ளார்.



இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. முதல் தடவையாக ரஜினியும், மோகன்லாலும் இணைந்து நடிப்பது, அவர்களின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், படத்தில் அவருக்கு என்ன கேரக்டர் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. நிச்சயம் அவர் வில்லனாக நடிக்க வாய்ப்பில்லை என்பதால், படத்தில் மிக முக்கியமான கேரக்டரில்தான் அவர் நடிக்க வாய்ப்புள்ளது.

Updated On: 9 Jan 2023 7:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி