/* */

சிம்புவுக்காக தயாராகும் மெஹா கூட்டணி.. விரைவில் அறிவிப்பு

Simbu New Movies Tamil - சிம்புவுக்காக தயாராகும் மெஹா கூட்டணி.. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

tamil actor simbu latest movie
X

நடிகர் சிம்பு.

Simbu New Movies Tamil - தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் இயக்குனர், பாடகர், கதாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இந்நிலையில் இவர் நடித்து வெளியான 'மாநாடு' படத்திற்குப்பின் தற்போது வெற்றிகரமாக அடுத்த ரவுண்டை தொடங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. மேலும் இந்த படம் சிம்பு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.

actor silambarasan next movie announcement

இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது மீண்டும் பரபரப்பான நடிகராக வலம் வருகிறார். வேல்ஸ் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' படத்தை சமீபத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இது வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இதைத்தொடந்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் நடிக்கவுள்ளார். மேலும் தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் நடிகர் சிம்பு, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் பரவியது. தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேலும் இப்படத்தை முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் இந்தபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Aug 2022 4:38 AM GMT

Related News