/* */

கொஞ்சம் பேசு-என்ற ஆல்பத்தை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

காதலர்கள், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சிறுசிறு விரிசல்களை பிரிவாக மாறாமல் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது.

HIGHLIGHTS

கொஞ்சம் பேசு-என்ற ஆல்பத்தை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
X

உதவி இயக்குனர் சஞ்சய் மற்றும் சஞ்சிதா ஷெட்டி 

ராஜூ முருகன் தயாரிப்பில் உருவான "கொஞ்சம் பேசு" என்ற ஆல்பத்தை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி பிரகாஷ் இன்று வெளியிட்டனர்.

என்ஜாய் எஞ்சாமி, குட்டி பட்டாசு என தமிழில் தற்போது ஆல்பம் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் கொஞ்சம் பேசு என்ற ஆல்பம் உருவாகி உள்ளது. இது குக்கூ, ஜோக்கர், ஜிப்சி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ராஜூ முருகன் தயாரித்திருக்கிறார். இந்த பாடலை இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் தங்களது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர், இந்த பாடல் சோனி மியூசிக்கில் வெளியானது,

இதில் ராஜூ முருகனின் உதவி இயக்குனர் சஞ்சய் நடிக்க அவருடன் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். கொஞ்சம் பேசு எனத் தொடங்கும் இந்த பாடலை யுகபாரதி எழுத ஏ.ஆர்.ரகுமானிடத்தில் இசை கற்ற நரேன் இசையமைத்துள்ளார், இந்த பாடலை இயக்குனர் ராஜு முருகனின் குக்கூ ரெக்கார்ட்ஸ் குழுவினர் இயக்கியுள்ளனர், இதனை பிரதீப் குமார், நித்யஸ்ரீ பாடியுள்ளனர். சாண்டி நடனம் அமைக்க பகத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனை ஜிப்சி, அருவி போன்ற படங்களில் எடிட்டர் ஆக பணியாற்றிய ரேமண்ட் எடிட் செய்துள்ளார். இந்த பாடல் பற்றி சஞ்சய் கூறியதாவது, ஜிப்சி படத்துக்காக நாடு முழுக்க இருக்கும் தனியிசை பாடகர்களை சந்தித்தபோது எங்களுக்கு இந்த யோசனை தோன்றியது. நரேனை பார்த்ததும் பாடலாக உருவாக்க திட்டமிட்டோம்.


காதலர்கள், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சிறுசிறு விரிசல்களை பிரிவாக மாறாமல் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது என அவர் கூறினார்.

Updated On: 10 July 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து