/* */

கொத்தித் தூக்கிட்டு போக பாத்த விஜய் டிவி! வேண்டாம் என மறுத்த குணசேகரன்!

ராதிகா மூலமாக குணசேகரனை வளைத்துப் போட பார்த்த விஜய் டிவி. வேண்டாம் என்ற குணசேகரன்

HIGHLIGHTS

கொத்தித் தூக்கிட்டு போக பாத்த விஜய் டிவி! வேண்டாம் என மறுத்த குணசேகரன்!
X

சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். இனியா, கயல், சுந்தரி, எதிர்நீச்சல் என பலரையும் கவரும் வகையில் சீரியல்களின் கதைகள் எழுதப்பட்டும் எடுக்கப்பட்டும் வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் ஒவ்வொன்றும் முந்திக்கொண்டும் முட்டிக்கொண்டும் இருக்கின்றன.

சுந்தரியை அடித்து தூக்கி கயல் மேலே வந்தது, இப்போது எதிர்நீச்சல் டிஆர்பியில் கயலை துரத்தியிருக்கிறது. அடுத்து இனியா தொடரும் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இப்படி இந்த 4 தொடர்கள் மட்டுமின்றி பிரியமானதோழி, அருவி, இலக்கியா என மதிய வேளைத் தொடர்களுக்கும் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்தே இருக்கிறது.

இந்த தொடர்களிலேயே அதிகம் பேர் பார்க்கும் தொடராக எதிர்நீச்சல் தொடர் வந்துள்ளது. இந்த தொடரை டிவியில் பார்ப்பவர்களுக்கு நிகரான ஆன்லைனில் மொபைலில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது. ஒரு தொடரின் வில்லன், வில்லிகளை வேற்று கிரக வாசிகளைப் போல சித்தரிக்காமல், நாம் அன்றாடம் பார்க்கும் ஒருவரின் கதையைப் போல அவரின் குணத்தைப் போல நடிப்பில் அசத்தி வரும் குணசேகரனை விஜய் டிவி கொத்தி தூக்கப்பாத்திருக்கிறது.

குணசேகரனாக சன்டிவியின் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் இயக்குநர் மாரிமுத்து பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகாவுக்கும் அறிமுகமானவர்தான். அவர் தான் தயாரிக்கவுள்ள கிழக்கு வாசல் எனும் தொடரில் நடிக்கவேண்டும் என மாரிமுத்துவிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அந்த சூழலில் தான் நடிக்க விரும்பவில்லை என சீரியல் வாய்ப்பை மறுத்திருக்கிறார். இதன்பிறகுதான் எதிர்நீச்சல் சீரியல் மிகப் பெரிய அளவில் பூதாகரமாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கத் தொடங்கியது.

ஆரம்பத்தில் சின்ன சின்ன சந்தோஷங்களைத் தடுக்கிறாரே குணசேகரன் அவரும் நிஜவாழ்க்கையில் அப்படித்தானோ என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அவரின் இந்தாமா ஏய் வை பிரபலப்படுத்தி இப்போது ஒட்டுமொத்தமாக சீரியலில் நடிக்கும் அனைவருக்கும் மைலேஜ் ஏற்றி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல்.

ராதிகா, மாரிமுத்துவிடம் கேட்ட அதே ரோலுக்காகத்தான் இப்போது தளபதி விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். கிழக்கு வாசல் தொடர் கிட்டத்தட்ட சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையைப் போல வரும் என்றும் அதில் விசு நடித்த கதாபாத்திரத்தை ஒத்த ரோலுக்குதான் மாரிமுத்துவைக் கேட்டிருக்கிறார்கள். அப்போது மாரிமுத்து ஜெயிலர் பட படப்பிடிப்பில் இருந்தார் என்பது கூடுதல் தகவல்.

Updated On: 13 July 2023 7:20 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்