/* */

பிக்பாஸ் நடிகை மைனா நந்தினியின் மாமா மகன் யாரு தெரியுமா?

Bigg Boss ADK Myna Relationship -பிக்பாஸ் நடிகை மைனா நந்தினியின் மாமா மகன் யாரு தெரியுமா? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

பிக்பாஸ் நடிகை மைனா நந்தினியின் மாமா மகன் யாரு தெரியுமா?
X
Bigg Boss ADK Myna Relationship, Bigg Boss Tamil 6 ADKபிக்பாஸ் வீட்டில் மைனா நந்தினி மற்றும் சக போட்டியாளருடன் ஏ.டி.கே.

Bigg Boss ADK Myna Relationship -பிக்பாஸ் பிரபலம் ஏ. டி. கே, மைனா நந்தினிக்கு உறவுக்காரன் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பரவி வருகிறது. பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தான் விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கி தற்போது நான்காவது வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. அதோடு பலர் புது முகங்களாக இருக்கிறார்கள்.

Bigg Boss ADK Myna Relationship, Bigg Boss Tamil 6 ADKமேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏ.டி.கே, ஜனனி, அமுதவாணன், வி.ஜே. மஹேஸ்வரி, வி.ஜே. கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருந்தார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து சேர்ந்தார்.

Bigg Boss ADK Myna Relationship, Bigg Boss Tamil 6 ADKபின் வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜி.பி. முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் கடந்த வாரம் இரண்டாவது எவிக்சனில் அசல் கோலார் வெளியேறி இருந்தார்.

Bigg Boss ADK Myna Relationship, Bigg Boss Tamil 6 ADKதற்போது நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று ஷெரினா வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஏ. டி. கே, மைனா நந்தினிக்கு உறவுக்காரன் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஏ.டி.கே. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ஆரியன் என்ற இசை ஆல்பத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Bigg Boss ADK Myna Relationship, Bigg Boss Tamil 6 ADKஇவருடைய முழு பெயர் தினேஷ் கனகரத்தினம். மேலும், விஜய் ஆண்டனி இசையில் வெளியான ஆத்திச்சூடி என்ற பாடல் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக பாடி இருந்தார். அதற்கு பிறகு இவர் டி இமான், ஏ .ஆர். ரகுமான், சந்தோஷ் நாராயணன், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தனியாகவும் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இதனாலே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு.

Bigg Boss ADK Myna Relationship, Bigg Boss Tamil 6 ADKஇவர் ஜேஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இதே நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரின் உறவுக்காரராக ஏ.டி.கே. இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லைங்க, நம்ம மைனா நந்தினி தான். ஏ.டி.கே, மைனாவின் மாமன் மகன் தானாம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 10:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்