/* */

சிவாஜிக்கு கிடைத்த தேசிய விருதை நிராகரிப்பதற்கு கமல் செய்த சமாதானம் தெரியுமா?

Kazhugumalai Ganesan Movie-சிவாஜிக்கு கிடைத்த தேசிய விருதை நிராகரிப்பதற்கு கமல் செய்த சமாதானம் பற்றி இப்போது அவரே தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

Kazhugumalai Ganesan Movie
X

Kazhugumalai Ganesan Movie

Kazhugumalai Ganesan Movie-நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாகவும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய பாத்திரத்திலும் நடித்து கடந்த 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தேவர் மகன். நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்சின் மூலமாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல் என்று சொன்னால் மிகையாகாது.

இந்த படத்தில் பெரிய தேவராக சிவாஜி கணேசனும், அவரது மகனாக அதாவது சக்திவேல் தேவர் என்ற பெயரில் கமல்ஹாசனும் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் திரைக்கதை முழுவதையும் முழுமையாக எழுதியவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன் என்னதான் பெரிய நடிகர் ,ஜாம்பவான் என்றாலும் அந்த படம் வெளிவரும் வரை அவருக்கு இந்தியாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை. தேவர் மகன் படத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதை சிவாஜிகணேசன் ஏற்கக்கூடாது அது அவரது தகுதிக்கு ஏற்றது அல்ல என கமல்ஹாசன் வலியுறுத்தி அதனை நிராகரிக்க வைத்துள்ளார்.

இதை சமீபத்தில் நடைபெற்ற ஒரு கலாட்டா உரையாடலின் போது கமல்ஹாசனை நேரடியாக வெளிப்படுத்தி இருக்கிறார் .அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தது என்ன என்பதை அறிய கீழே சென்று பார்ப்போம் 'நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். 1994 ஆம் ஆண்டு வெளியான நம்மவர் படத்தில் நடித்ததற்காக நாகேஷ் சாருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அது போன்ற விருதுதான் சிவாஜி சாருக்கும் தேவர் மகன் படத்தில் அறிவிக்கப்பட்டது. அவரது தகுதிக்கு அந்த விருது சரியானது அல்ல என்பதால் நான் சிவாஜி சாரை மிகவும் சிரமப்பட்டு சமாதானப்படுத்தி நிராகரிக்க வைத்தேன். உங்களுக்கு விரைவில் தாதா சாகிப் பால்கே விருது கிடைக்கும் . அதுவரை காத்திருப்போம்'என்று அப்போது கூறினேன் என அப்போது கூறினார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வை கமல்ஹாசன் மனம் திறந்து பேசியதன் மூலம் இப்போது வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் குறிப்பிட்டது போலவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது என்பது தனிக்கதை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 3 April 2024 3:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...