/* */

சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மி.. மகளின் புகைப்படங்கள் வைரல்

Chandramukhi Bommi - சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த பிரஹர்ஷிதா மற்றும் அவரின் மகள் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

HIGHLIGHTS

சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மி.. மகளின் புகைப்படங்கள் வைரல்
X

தனது குழந்தையுடன் பிரகர்ஷிதா.

Chandramukhi Bommi - சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த பிரஹர்ஷிதா மற்றும் அவரின் மகள் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

சந்திரமுகி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்மொழித் திரைப்படமாகும். பி. வாசு இதன் இயக்குனர் ஆவார். இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு நடித்துள்ளனர். இந்தப் படம் கன்னடம் படமான அபாமித்ராவின் ரீமேக் ஆகும், ஆனால் அபமித்ரா, மலையாளப் படமான மணிசித்ரதாழுவின் ரீமேக்காக இருந்தது. வித்தியாசாகர் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். தோட்டாதரணி இதன் கலைஇயக்குனர் ஆவார்.

இத்திரைப்படத்தில் வரும் சந்திரமுகியின் அழகான ஓவியம் ராஜா என்ற இளைஞனால் வரையப் பெற்றது. இப்படம் 1999-ல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது இது போஜ்புரியில் சந்திரமுகி கெ ஹுன்கார் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஜெர்மன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் இதுவாகும். இது ஜெர்மனியில் Der Geisterjäger (ஆங்கிலம்: The Ghost Hunters) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த படம் துருக்கியிலும் மற்றும் ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்து. மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த இப்படம் இரண்டு ஆண்டுகள் கடந்தும் திரையரங்கில் ஓடியது. சென்னை சாந்தி திரையரங்கில் 801 நாட்கள் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி படத்தில் வரும் "அதிந்தோம்" பாடலில் பல இடங்களில் பொம்மி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. குழந்தை நட்சத்திரமான பிரஹர்ஷிதா பொம்மி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியான பின்புதான் ரசிகர்கள் அவரை அந்தப் பெயரில் அழைக்கத் தொடங்கினர்.

பிரஹர்ஷிதா பல படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார், இப்போது அழகான இளம் பெண்ணாக இருக்கிறார். இவர் ஒரு குறிப்பிடத்தக்க குறும்படத் தயாரிப்பாளரும் ஆவார் மற்றும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

chandramukhi news

சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக பாடல் ஒன்றில் இடம் பெற்றிருந்தவர் தான் பிரகர்ஷிதா. தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்ட இவருக்கு திருமணம் கூட நடந்து விட்டது. சில வருடங்களுக்கு முன் தான் அவர் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து கையில் தன்னுடைய குழந்தையுடன் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ப சந்திரமுகி பொம்மை மம்மி ஆகி விட்டார் என கமெண்ட் செய்து வந்தனர்.

பிரஹர்ஷிதா தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 6:20 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  9. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!