/* */

'ராஜா' ராபர்ட், 'ராணி' ரக்‌சிதா - என்ன கொடுமை பிக்பாஸ் இது?

BB Tamil Season 6 - ரக்சிதா மீது காதல் மயக்கம் கொண்டவராக அவரையே சுற்றி சுற்றி வருகிறார் ராபர்ட் மாஸ்டர். அவரை ராஜாவாக்கி, ராணியாக ரக்சிதாவை அறிவித்தது ரொம்ப கொடுமை என்று கலாய்க்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

HIGHLIGHTS

ராஜா ராபர்ட், ராணி ரக்‌சிதா - என்ன கொடுமை பிக்பாஸ் இது?
X

BB Tamil Season 6- பிக்பாஸ் வீட்டில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரக்சிதா, ராஜகுருவாக விக்ரமன் வரும் காட்சி.  

BB Tamil Season 6 - பிக்பாஸ் சீசன் 6 வீட்டில் இருக்கும் ராபர்ட் மாஸ்டரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரை ராஜாவாக்கி, ராணியாக ரக்சிதாவை அறிவித்துள்ளனர். நிகழ்ச்சியை இன்னும் விறுவிறுப்பாக்கவே, ராபர்ட் - ரக்சிதா ஜோடியை களம் இறக்கியதாக, விமர்சனம் எழுந்துள்ளது.


பிக்பாஸ் வீட்டை ராயல் மியூசியமாக மாற்றிய நிலையில், ராபர்ட் மாஸ்டர்தான் செம குஷியாக இருக்கிறார்.

பிக்பாஸ் 6 வீட்டை ராயல் மியூசியமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். ஹவுஸ்மேட்ஸில் ஒரு பிரிவினர், ராஜ வம்சத்தினர் போன்று வேடம் அணிந்திருக்கிறார்கள். ராபர்ட் மாஸ்டர்தான் ராஜா. அவர் தினமும் 'சைட்' அடித்து ஜொள்ளு விடும் ரச்சிதா மகாலட்சுமிதான் ராணி. எனவே, ராஜா ராணியாக அவர்கள் இருவரும் வலம்வர வேண்டிய நிலையில், ராபர்ட் மாஸ்டருக்கு இது ஒரு லக்கி பிரைஸ்தான்.


எப்போதும் கிச்சன் பகுதியில், ரக்சிதா எதிரில் நின்றுகொண்டே ஜொள்ளுவிடும் ராபர்ட் மாஸ்டரை பலரும் கவனித்து, மறைமுகமாக, நேரடியாக அவரை விமர்சிக்க துவங்கி விட்டனர். ஆனாலும், ரக்சிதா மீதான காதல் அவரை விட்டு இன்னும் விலகவில்லை. வீட்டை விட்டு செல்வதற்குள் எப்படியும் ரக்சிதா மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆசையில், ராபர்ட், இருக்கிறார். இந்நிலையில், பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல, ராஜா, ராணியாக இருவரும் ஒன்றுசேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'ராஜ வம்சத்தை தொட வேண்டும் என்றால், என் வாளைத் தாண்டி தான் தொட வேண்டும்' என்று படைத்தளபதி அசீம் வீர வசனம் பேசும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்தவர்களோ, 'இது மியூசியம் அல்ல, மனநல காப்பகம்' போன்று இருக்கிறது என்று கலாய்க்கிறார்கள்.

ராபர்ட் மாஸ்டர் சும்மாவே ரக்சிதாவை சுற்றி சுற்றி வருவார். இந்நிலையில் ரக்சிதாவை ஏன் ராணியாக்கினீர்கள். ராபர்ட்டின் கவனம் 'டாஸ்க்' மீது அல்ல. ரக்சிதாவை 'கரெக்ட்' செய்வதிலேயே இருக்கிறது. 'அட மங்குனி பிக் பாஸ், ராபர்ட் மாஸ்டரை பற்றி தெரிந்தும், இப்படி செய்யலாமா?. தன்னை பாகுபலி போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ராபர்ட் மாஸ்டர்,' என்கிறார்கள் பார்வையாளர்கள்.


'ராபர்ட் மாஸ்டரின் பீலிங்ஸை புரிந்து கொண்டு அவருக்கு ரக்சிதாவை ராணியாக்கியிருக்கிறார் பிக்பாஸ். இது ஒரு நல்ல வேலை தான். நல்லா வருவீங்க. ஆனால் எங்களால்தான், இந்த கொடுமையை எல்லாம் பார்க்க முடியவில்லை' என்று பார்வையாளர்கள் புலம்புகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டைப் பொருத்தவரை, ஏதேனும் ஒரு விதத்தில் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும். அது, மோதலாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, பார்வையாளர்களுக்கு அது சுவாரசியமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். இந்தமுறை மோதலுக்கு தனலட்சுமியும், காதலுக்கு ராபர்ட் மாஸ்டரும் சிக்கி இருக்கிறார்கள். எனவே, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் வரும் நாட்களில், பிக்பாஸ் வீட்டில் பஞ்சம் இருக்காது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Nov 2022 10:13 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்