/* */

நான், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மிகப்பெரிய விசிறி - மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் !

நான், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மிகப்பெரிய விசிறி - மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் !
X

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் 

நான், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மிகப்பெரிய விசிறி என மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "ஜகமே தந்திரம்" திரைப்படத்தின் ட்ரெய்லரை Netflix கடந்த வாரம் வெளியிட்டது. வெளியான கணத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற ட்ரெய்லர், இணையம் வழியே, உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் லோக்கல் கேங்ஸ்டராக தனுஷ் நடிக்க, அமெரிக்க பிரபல நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் மிரட்டும் கேங்ஸ்டர் சிவதாஸ், பாத்திரத்தில் நடித்துள்ளார். மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் பெரும் புகழை குவித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜ், "ஜகமே தந்திரம்" திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பெரும் எதிர்பார்ப்புடன் படம் வெளியாவதில் அவர் பெரும் உற்சாகத்தில் உள்ளார். ஜோஜு ஜார்ஜ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் தீவிர விசிறி இப்படத்தில் அவருடனும் உலகளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடனும் பணிபுரிந்ததில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

இது குறித்து ஜோஜு ஜார்ஜ் கூறியதாவது...

நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மிகப்பெரிய விசிறி. "பீட்சா" படம் பார்த்து விட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை. மலையாளத்தில் பிரபலமாக தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத்தொடங்கின. இறுதியாக இப்படத்தின் எடிட்டர் டிமல் டென்னிஸ் மற்றும் விவேக் ஹர்ஷன் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களை சந்தித்தேன். இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்தார் கார்த்திக். படத்தில் மிகப்பெரிய பாத்திரம் என்பதால் என்னிடம் ஒரு காட்சியை விவரித்து, நடித்து காட்ட சொன்னார். எனக்கு தெரிந்த அரைகுறை தமிழில், நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். ஆனால் அவர் என்னை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ குறித்து கூறும்போது...

படத்தில் என் எதிர் பாத்திரமாக நடிப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ என்பது எனக்கு தெரியும். நான் நேரில் சந்தித்த முதல் ஹாலிவுட் நடிகர் அவர்தான். வாழ்க்கை தரும் ஆச்சர்யங்கள் பெரும் சந்தோஷமாக இருக்கிறது. நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடன் நடிப்பது மிகப்பெரும் பெருமை என்றார்.

பீட்டர் ( ஜேம்ஸ் காஸ்மோ ) மற்றும் சிவதாஸ் (ஜோஜு ஜார்ஜ்) இருவருக்குமான சுவாரஸ்யமான போரை காணத்தவறாதீர்கள் Netflix தளத்தில் 18 ஜூன் அன்று உலகம் முழுதும் வெளியாகிறது "ஜகமே தந்திரம்" திரைப்படம்.

பீட்டர் ( ஜேம்ஸ் காஸ்மோ ) மற்றும் சிவதாஸ் (ஜோஜு ஜார்ஜ்)



Updated On: 9 Jun 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு