/* */

காலில் கட்டுடன் நடிகை குஷ்பு; ரசிகர்கள் 'ஷாக்'..

Actress Kushboo Leg Injury-காலில் கட்டுடன் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

Actress Kushboo Leg Injury
X

Actress Kushboo Leg Injury

Actress Kushboo Leg Injury-கடந்த 1990களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் நடித்து, 'டாப்' நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து வந்த இவர் மார்க்கெட் குறைந்ததும் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டு, செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். துவக்கத்தில் திமுகவில் இணைந்து பின்பு, காங்கிரஸ் கட்சிக்கு மாறி, தற்போது பாஜகவில் உள்ளார் நடிகை குஷ்பு.

கடந்த 1990 காலகட்டத்தில், தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்தனர். இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவராக திகழ்கிறார்.எப்போதும் பிஸியாக சினிமா மற்றும் அரசியலில் இருக்கும் நடிகை குஷ்பு தற்போது காலில் அடிபட்டு பயங்கர வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.

தற்போது குஷ்பு, குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். இறுதியாக இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த 'அண்ணாத்த' படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருந்தது.இதனை தொடர்ந்து குஷ்பு பல படங்களில் 'கமிட்'டாகி 'பிஸி'யாக நடித்து வருகிறார். அதேபோல் குஷ்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாக கொண்டதாக இருந்தது. இந்த தொடர் 62 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பானது. சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது. தற்போது இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், குஷ்பு கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

சமீபத்தில் தான் நடிகை குஷ்பு, மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். அவருக்கு coccyx boneல் சர்ஜரி செய்யப்பட்டு இருந்தது. கோக்ஸிக்ஸ் எலும்பு என்பது, பொதுவாக, பிட்டம் பகுதியில் வால் போன்ற எலும்பு காணப்படும். இதை வால் எலும்பு அல்லது 'கோக்ஸிக்ஸ்' என்று அழைக்கின்றனர். இது முதுகெலும்பின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இதுதான் இடுப்பிற்கு சப்போர்ட் ஆக இருக்கும். இந்த எலும்பு இந்த சிறிய வால் எலும்பில் வலி ஏற்பட்டால் தாங்கவே முடியாது. நீண்ட காலத்திற்கு இந்த வலி நீடித்தால் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் அவதி ஏற்படும். இப்படி ஒரு நிலையில் மீண்டும் காலில் கட்டுடன் நடிகை குஷ்பூ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் "ஒரு விசித்திரமான விபத்து உங்களுக்கு வலி மற்றும் கட்டுகளை உண்டாக்குகிறது, உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைக்கிறது, ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி உறுதியாக தெரியவில்லை, எனது பயணம் தொடர வேண்டும். இலக்கை அடையும் வரை நிறுத்த மாட்டேன் என்று கூறி உள்ளார்.

சில மாதங்களுக்கு முன், நடிகை குஷ்பு, மருத்துவமனையில் 'அட்மிட்' ஆகி அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் காலில் கட்டுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது, வேகமாக வைரலாகி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 4 April 2024 9:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!